நெடுஞ்சாலையில் கவிழ்ந்த பேருந்து – 27 பேர் உயிரிழப்பு; 20 பேர் காயம்!
சீனாவில் நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்கு உள்ளான சம்பவத்தில், 27 பேர் உயிரிழந்து உள்ளனர். தென் மேற்கு சீனாவின் மலைப் பகுதியான குய்சோவு மாகாணத்தில், இன்று அதிகாலை, 47 பேருடன் பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. இந்தப் பேருந்து, மாகாண தலைநகரான குயாங்கிற்கு தென் கிழக்கே 170 கிலோ மீட்டர் (105 மைல்) தொலைவில் உள்ள சாண்டு கவுண்டி என்ற இடத்திற்கு வந்த போது, திடீரென்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. … Read more