பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி; துறைமுகத்தில் ரூ.44.47 கோடி இறக்குமதி பொருட்கள் தேக்கம்

கராச்சி, இந்தியாவின் அண்டை நாடான இலங்கை கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்தது. இதனால், பொதுமக்கள் தெருக்களில் இறங்கி போராட்டங்களில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் கொந்தளிப்புடன் காணப்பட்டது. இலங்கையில் வன்முறை பரவிய நிலையில், அதிபர் நாட்டை விட்டு வெளியேறும் சூழல் ஏற்பட்டது. இதன்பின்னர், இந்தியா உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் நிலைமை தணிந்துள்ளது. எனினும், எரிபொருள், உணவு பொருட்கள் மற்றும் விலைவாசி உயர்வு போன்றவற்றில் இருந்து மக்கள் முழுமையாக மீளவில்லை. இந்நிலையில், மற்றொரு அண்டை … Read more

செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் சாத்தியமா…? 20 கோடி ஆண்டுகளாக குமுறும் எரிமலை; விஞ்ஞானிகள் புது தகவல்

வாஷிங்டன், நமது பூமியில் அவ்வப்போது நிலநடுக்கங்கள், எரிமலை வெடிப்புகள் ஏற்படுவதும், அதன் தாக்கத்தினால் பலர் பாதிக்கப்படுவது பற்றிய தகவலை நாம் கேள்விப்பட்டு இருப்போம். நமது அண்டை கிரகங்களில் ஒன்றான செவ்வாய் கிரகத்தில் நிலைமையே வேறு. கடந்த 300 கோடி ஆண்டுகளாக அதுபோன்ற விசயங்கள் எதுவும் நடைபெறாமல் அமைதியாக உள்ளது. இதனால், செவ்வாயை ஓர் இறந்த கிரகம் என பலரும் நினைக்கும் அளவில் உள்ளது. இதுபற்றி அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள எல்.பி.எல். என்ற நிலவு மற்றும் கோள்கள் … Read more

அமெரிக்க வரலாற்றில் முதல் இளம் கருப்பின மேயர்.!

அமெரிக்காவின் அர்கான்சாஸ் மாகாணத்தில் இருந்து இயர்லே என்ற நகரத்திற்கான மேயர் தேர்தலில், இளம் வயதான கருப்பின பிரதிநிதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்க வரலாற்றில் இளம் வயது கருப்பின மேயர் தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். சமீபத்தில் கல்லூரி படிப்பை முடித்து போட்டியிட்ட ஜெய்லன் ஸ்மித் என்பவர் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட நகரின் சாலை மற்றும் துப்புரவு சூப்பிரெண்டாக உள்ள நெமி மேத்யூஸ் என்பவரை வீழ்த்தி ஸ்மித் வென்றுள்ளார். ஸ்மித்துக்கு 18 வயதே ஆகிறது. இதனால், அமெரிக்க வரலாற்றில் … Read more

'எனது சகோதரரின் நடவடிக்கைகளை எதிர்க்கிறேன்' – அயத்துல்லா அலி காமெனியின் சகோதரி கடிதம்

பாரீஸ்: “எனது சகோதரரின் செயல்பாடுகளை நான் கண்டிக்கிறேன்” என்று அயத்துல்லா அலி காமெனியின் சகோதரி பத்ரி ஹொசைனி காமெனி தெரிவித்துள்ளார். அறநெறி காவலர்களின் தாக்குதலினால் உயிரிழந்த மாஷா அமினிக்கு ஆதரவாக ஈரானில் ஹிஜாப்புக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்தது. ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனியின் தங்கை பிரான்ஸில் வசித்து வருகிறார். தற்போது ஈரானில் நடந்து வரும் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம் குறித்து தனது அண்ணனான அயத்துல்லா அலி காமெனியை அவர் விமர்சித்திருக்கிறார். இதுகுறித்து பத்ரி ஹொசைனி … Read more

2022-ன் சிறந்த நபர் – 'டைம்' இதழ் அட்டைப் படத்தில் ஜெலன்ஸ்கி!

வாஷிங்டன்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை 2022-ம் ஆண்டின் சிறந்த நபர் என டைம்ஸ் இதழ் கவுரவித்துள்ளது. அவருக்கு ‘உக்ரைனின் உத்வேகம்’ என்று புகழாரம் சூட்டியுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் அரசியல், இலக்கியம், சமூக சேவை முதலானவற்றில் சிறந்து விளங்கும் ஒருவரை, அந்த ஆண்டில் சிறந்த நபராக அட்டைப் படத்தில் வருடத்தின் இறுதியில் டைம் இதழ் வெளியிட்டு கவுரவித்து வருகிறது. அந்த வகையில் 2022-ஆம் ஆண்டின் சிறந்த நபராக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை டைம் இதழ் தேர்வு செய்துள்ளது. இதுகுறித்து … Read more

உக்ரைன் உடனான போர் நீண்ட நாள் நீடிக்கலாம்: ரஷ்ய அதிபர் புடின்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மாஸ்கோ: உக்ரைன் உடனான போர் நீண்ட நாள் நீடிக்கலாம் என ரஷ்யாவின் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் ரஷ்ய அதிபர் புடின் கூறியுள்ளார். உக்ரைன் உடனான போர் தாக்குதல் துவங்கியதில் இருந்து ரஷ்ய அதிபர் புடின் அணு ஆயுதங்களை பயன்படுத்த கூடும் என பல்வேறு அறிக்கைகள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. இந்நிலையில் ரஷ்ய அதிபர் புடின், மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் ரஷ்ய அதிபர் புடின் பேசியபோது, அணு ஆயுத … Read more

காரமான உணவை சாப்பிட்டதால் எலும்பு முறிவு… பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

விபத்தில் சிலருக்கு எலும்பு முறிவு ஏற்படுவதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், அதிகமாக இருமல் வந்து, இருமியதால் ஒரு பெண்ணுக்கு விலா எலும்புகள் முறிந்துவிட்டது என சொன்னால் நம்ப முடிகிறதா. ஆனால், அதுதான் உண்மை.  சீனாவில் ஷாங்காய் மாகாணத்தில், காரணமான உணவை உண்டதால், ஹுவாங் என்ற பெண்ணுக்கு அதிக இருமல் ஏற்பட்டுள்ளது. அவர் தொடர்ந்து, இருமியதால் அவரின் நான்கு விலா எலும்புகள் சிறு முறிவு ஏற்பட்டுள்ளது.  ஆரம்பத்தில் அந்த பெண்ணுக்கு எந்தவித வலியும் தெரியாத நிலையில், சில நாள்கள் … Read more

உலகப் பணக்காரர் என்ற கிரீடத்தை எலான் மஸ்கிடம் இருந்து பறித்த Bernard Anault!

உலகின் மிகப்பெரிய பணக்காரர் என்ற கிரீடம் ட்விட்டர் மற்றும் டெஸ்லா சிஇஓ எலோன் மஸ்க்கிடம் இருந்து சில மணி நேரங்களுக்கு பறிக்கப்பட்டது. இருப்பினும், அவர் விரைவில் அந்த இடத்தை திரும்பப் பெற்றார். உலக பணக்காரர்களின் செல்வம் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ள போர்ப்ஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. டெஸ்லா பங்குகளின் வீழ்ச்சி மற்றும் ட்விட்டரில் $44 பில்லியன் டாலர் முதலீடு ஆகியவை காரணமாக மஸ்க்கின் நிகர மதிப்பு குறைந்தது. 51 வயதான மஸ்க்குக்குப் பதிலாக, பெர்னார்ட் அர்னால்ட் சில … Read more

Taliban : பொதுவெளியில் தூக்கு… மீண்டும் அராஜகத்தை தொடங்குகிறதா தாலிபான்?

மேற்கு ஆப்கானிஸ்தான் பகுதியில் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவருக்கு தலிபான் அரசு இன்று பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றியது என அதன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். ஆப்கனின் மேற்கு ஃபரா மாகாணத்தில், 2017ஆம் ஆண்டு ஒருவரை கத்தியால் குத்திக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு இன்ரு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதாக தெரிகிறது. இதனை தாலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் கூறினார் அறிவித்தார். இந்த அறிவிப்பின்போது, தாலிபன்களின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும், கடந்தாண்டு ஆப்கானை கைப்பற்றிய … Read more

மீண்டும் கொரோனொ பாதிப்பு! குழந்தைகளே அதிகம் பாதிக்கப்படுகின்றனரா? அதிகரிக்கும் கவலை

Surging Corona Cases: அமெரிக்காவில் COVID-19 வழக்குகளில் திடீர் அதிகரிப்பு காணப்படுகிறது. அமெரிக்க சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறையிடம் மருத்துவமனைகள் தெரிவித்த தரவுகளின்படி, அதிகரித்து வரும் கோவிட் பாதிப்பு குறித்த தகவல்கள் அம்பலமாகியுள்ளன. கோவிட் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்படுவோர் எண்ணிக்கை மற்றும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் பெரும்பாலான மாகாணங்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கலிபோர்னியா மற்றும் நியூ மெக்ஸிகோவில், இந்த அதிகரிப்புகள் மிகவும் அதிக அளவில் … Read more