கோத்தபய ராஜபக்சே நேரில் ஆஜராக இலங்கை சுப்ரீம் கோர்ட் உத்தரவு| Dinamalar

கொழும்பு :யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரண்டு மனித உரிமை ஆர்வலர்கள் 2011ல் மாயமான வழக்கில், முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே நேரில் ஆஜராக, ‘நோட்டீஸ்’ அனுப்பும்படி உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்குமான போர் 2009ல் முடிவுக்கு வந்தபோது, அந்தநாட்டு அதிபராக மகிந்த ராஜபக்சே பதவியில் இருந்தார். அவரது சகோதரர் கோத்தபய ராஜபக்சே ராணுவச் செயலராக இருந்தார். இலங்கை போர் முடிவுக்கு வந்த பின், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் அடுத்தடுத்து மாயமாகினர்; … Read more

”கிளைம்பிங் சாம்பியன்ஷிப்”பில் ஹிஜாப் அணியாததால் சர்ச்சையில் சிக்கிய ஈரான் வீராங்கனை..!

தென் கொரியாவில் நடைபெற்ற ”கிளைம்பிங் சாம்பியன்ஷிப்”பில் ஹிஜாப் அணியாமல் பங்கேற்றுவிட்டு தாயகம் திரும்பிய ஈரான் வீராங்கனை ”எல்னாஸ் ரெகாபி”க்கு டெஹ்ரான் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அண்மையில், ஹிஜாப் அணியாததால் கைது செய்யப்பட்ட இளம்பெண் காவல் நிலையத்தில் கோமா நிலையில் உயிரிழந்ததை கண்டித்து உலகளவில் போராட்டங்கள் வெடித்தன. இந்நிலையில், 33 வயதான எல்னாஸ் ரெகாபி பர்தா அணியாமல் போட்டியில் பங்கேற்றது அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Source link

மீண்டும் முழு ஊரடங்கு: அரசு எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 996 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் வூகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தி விட்டது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படியாக கொரோனா தொற்றில் … Read more

சார்லஸ் – டயானா திருமண கேக் ஏலத்தில் விற்பனை – 41 ஆண்டுகளாக கேக்கை பதப்படுத்தி வைத்த முதியவர்.!

40 ஆண்டுகளுக்கு முன், சார்லஸ் – டயானா திருமணத்தின்போது பரிமாறப்பட்ட கேக் துண்டு ஒன்று ஏலத்தில் விடப்படுகிறது. 1981ம் ஆண்டு மிகவும் பிரமாண்டமாக நடைபெற்ற இந்த அரச குடும்ப திருமணத்தில் பங்கேற்ற 3,000 விருந்தினர்களுள் ஒருவரான நிகெல் ரிக்கெட்ஸ்,  தனக்கு பரிமாறப்பட்ட திருமண கேக்கை, 41 ஆண்டுகளாக பதப்படுத்தி வைத்துள்ளார். கடந்தாண்டு அவர் உயிரிழந்த நிலையில், தற்போது இந்த கேக் ஏலத்தில் விற்கப்பட உள்ளது. இதற்கு முன் கடந்த 2014ம் ஆண்டு, அதே திருமணத்தில் பரிமாறப்பட்ட கேக் … Read more

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் !

நேபாளத் தலைநகர் காத்மாண்டு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் புதன்கிழமை (அக்டோபர் 19) 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பலர் பாதுகாப்புக்காக தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சிந்துபால்சௌக் மாவட்டத்தில் நேபாள-சீனா எல்லைக்கு அருகில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தாக தகவல் வெளியாகியுள்ளது. காத்மாண்டு பள்ளத்தாக்கு மற்றும் அண்டை மாவட்டங்களில் மாலை 3:07 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது எனினும், இதனால் சேதமோ, உயிர்சேதமோ ஏற்பட்டதாக தகவல் … Read more

சிக்கன் பிரியாணி ஆர்டரை மாற்றியதால் ஆத்திரம்: வங்கதேச உணவகத்திற்கு தீவைத்த அமெரிக்கர்

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தான் ஆர்டர் செய்த சிக்கன் பிரியாணிக்கு பதில் வேறு உணவு அளிக்கப்பட்டதாகக் கூறி வங்கதேச கடைக்கு தீ வைத்தார் அமெரிக்கர் ஒருவர். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் குயீன்ஸ் பரோ என்ற பகுதியில் வங்கதேச உணவகம் ஒன்று இருக்கிறது. அந்த உணவகத்தில் சோபெல் நோர்பு என்ற 49 வயது நபர் சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார். ஆனால், அதற்குப் பதிலாக வேறு உணவு வழங்கப்பட்டதால் அந்தக் கடைக்கு அவர் தீ வைத்தார் என்பதே … Read more

26 வயது பெண் அமைச்சராக தேர்வு| Dinamalar

ஸ்டாக்ஹோம்: ஐரோப்பிய நாடான ஸ்வீடனில் புதிய அரசு சமீபத்தில் பொறுப்பேற்றது. பிரதமர் உல்ப் கிறிஸ்டெர்சன் புதிய அமைச்சரவையை நேற்று அறிவித்தார். இதில், ஈரான் வம்சாவளியைச் சேர்ந்த ரோமினா பூர்மோக்தாரி, 26, பருவநிலை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இங்கு இதற்கு முன், 27 வயதுடைய இளைஞர் அமைச்சர் பதவி வகித்துள்ளார். அந்த சாதனையை முறியடித்துள்ள ரோமினா, உலக அளவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். ஸ்டாக்ஹோம்: ஐரோப்பிய நாடான ஸ்வீடனில் புதிய அரசு சமீபத்தில் … Read more

விமானத்தில் ‘டிக்கெட் இன்றி’ பயணம் செய்த பாம்பு; பயத்தில் அலறிய பயணிகள்!

விமான பயணத்தில் ‘ஸ்னேக் ஆன் எ பிளேன்’ திரைப்படம் போன்ற சம்பவம்  நடந்தால் எப்படி இருக்கும்…  அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலிருந்து நியூஜெர்சி சென்ற விமானத்தில் பயணித்தவர்களுக்கு இதே நிலை தான் ஏற்பட்டது. விமானம் தரையிறங்குவதற்காக பயணிகள் இறங்கும் போது விமானத்தில் பாம்பு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அங்கே பெரும் பதற்றம் தொற்றிக் கொண்டது. பாம்பை கண்டதும் பிஸினஸ் வகுப்பில் இருந்த பயணிகள் அலறியடித்து தங்கள் கால்களை மேலே இழுத்துக் கொண்டு சீட்டின் மேல் வைத்துக் கொண்டனர். பின்னர் விமான … Read more

அண்டத்தின் பெருவிரல் ரேகையா..? – ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வெளியிட்ட புகைப்படத்தால் சர்ச்சை

சிட்னி: சில நாட்களுக்கு முன்னர் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வெளியிட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. மனிதர்களின் வடிவத்தில் பெரும் வெளிச்சத்துடன் காணப்படும் அந்த வடிவம் எலியன்களால் உருவாக்கப்பட்டதா அல்லது அண்டத்தின் பெரும்விரல் ரேகையா என நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர். இந்த நிலையில், சிட்னி பல்கலைகழகம் இது தொடர்பாக நடத்திய ஆராய்ச்சியை மீண்டும் தெளிவுப்படுத்தியதன் மூலம் அந்த வடிவம் அண்டத்தில் உள்ள WR140 என்ற நட்சத்திரம் என்று தெரிய வந்திருக்கிறது. ஆனால், ஒரு … Read more

இந்திய – அமெரிக்க முயற்சிக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போடும் சீனா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் நியூயார்க்: பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த ஷேக் மெக்மூத்தை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க, அமெரிக்கா ஆதரவுடன் ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா கொண்டு வந்த தீர்மானத்திற்கு 4வது முறையாக சீனா முட்டுக்கட்டை போட்டுள்ளது.ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் ‘1267 அல்கொய்தா தடை குழு’ வில் நேற்று, ஷாகீத் மெக்மூத்தை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் தீர்மானத்தை இந்தியாவும், அமெரிக்காவும் கொண்டு வந்தது. இதற்கும் சீனா தனக்கு உள்ள … Read more