86 ஆண்டுகள் கழித்து…கங்காரு செய்த கொலை – வீட்டில் வளர்த்தவருக்கு வந்த வினை!

மேற்கு ஆஸ்திரேலியாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ரெட்மண்ட் நகரில் 77 வயதான ஒருவர், கங்காருவை செல்லப்பிராணியாக வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப். 11) மதியம் 1 மணிக்கு, அந்த நபர் அவருடைய குடியிருப்பு பகுதியில் படுகாயமடைந்து கிடப்பதை அவரின் உறவினர் பார்த்துள்ளார்.  அதை தொடர்ந்து, உறவினர் அளித்த தகவின்பேரில் காவல்துறை மற்றும் ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளது. இருப்பினும், ஆம்புலன்ஸ் வருவதற்குள்முன்பே அந்த நபர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் படிக்க | … Read more

நாசாவின் Artemis 1 திட்டம் 3வது முறையாக ஒத்திவைப்பு!

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா 1969ம் ஆண்டின் முதன்முறையாக மனிதர்களை நிலவுக்கு அனுப்பி சாதனை படைத்தது. இந்நிலையில், மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்புவதற்கான, ‘ஆர்டெமிஸ்’ திட்டத்தை நாசா துவங்கியது. இந்த திட்டத்தின் கீழ், 2025ம் ஆண்டிற்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதல்கட்ட சோதனை முயற்சியாக, ஆர்ட்டெமிஸ்-1 ராக்கெட்டை கடந்த மாதம் 29-ந் தேதி, அமெரிக்காவின் கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து விண்ணில் ஏவுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒத்தி … Read more

பிரிட்டனில் அரசாட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் கைது

லண்டன்: பிரிட்டன் மன்னராக சார்லஸ் முடிசூட்டப்பட்டதற்கு எதிராகவும், அரசாட்சிக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்தது பேசுபொருளாகியுள்ளது. கடந்த 70 ஆண்டுகளாக பிரிட்டனின் ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத், கடந்த 8 ஆம் தேதி தனது 96 வயதில் ஸ்காட்லாந்தில் மரணமடைந்தார். ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்குகள் வரும் 19-ம் தேதி நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கில் ராணியின் உடலுக்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் நேரில் அஞ்சலி செலுத்துவார்கள் … Read more

பாகிஸ்தான் உணவு பற்றாக்குறையால் சிக்கித் தவிக்கிறது – பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் உணவு பற்றாக்குறையால் சிக்கித் தவிப்பதாக அந்நாட்டு பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். வெள்ளத்தால் 3.6 மில்லியன் ஏக்கர் பயிர்கள் சேதமடைந்ததாக சர்வதேச மீட்புக்குழு மதிப்பிட்டுள்ளது. துருக்கியில் இருந்து உணவு, மருந்துகள் மற்றும் கூடாரங்கள் வந்துள்ள நிலையில், அந்நாட்டு அதிபர் எர்டோகனுடன் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது உணவு பற்றாக்குறையை சமாளிக்கவும், புனரமைப்புப் பணிகளுக்கும் துருக்கியிடம் உதவி கோரியதாக கூறப்படுகிறது. Source link

ராணி எலிசபெத்தின் நாய்களை பராமரிக்கும் இளவரசர் ஆண்ட்ரூ

லண்டன், இங்கிலாந்தில் மறைந்த ராணி 2-ம் எலிசபெத் மிகப்பெரிய நாய் பிரியர். தனது வாழ்நாளில் 30-க்கும் மேற்பட்ட கோர்கிஸ் ரக நாய்களை வளர்த்துள்ளார். கடைசியாக அவரிடம் மிக் மற்றும் சாண்டி என்ற 2 இளம் நாய்கள் இருந்தன. அத்துடன் கேண்டி என்ற டோர்கி ரக நாய் ஒன்றும் இருந்தது. தற்போது ராணி மறைந்ததை தொடர்ந்து இந்த நாய்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருந்தது. இது தொடர்பாக பலரும் கேள்வி எழுப்பி இருந்தனர். இந்த நிலையில், இந்த நாய்களை இளவரசர் … Read more

வழிகாட்டி கருவியாக இருந்தார் – ராணி எலிசபெத்துக்கு இளவரசர் ஹாரி புகழாரம்

லண்டன், இங்கிலாந்து இளவரசர் ஹாரி தனது அரச குடும்பத்தில் இருந்து வெளியேறி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் குடிபெயர்ந்தார். தற்போது ராணி எலிசபெத் மறைவை தொடர்ந்து கடந்த 8-ந்தேதி முதல் இங்கிலாந்து அரச குடும்பத்துடனேயே இருந்து வருகிறார். இளவரசர் வில்லியம்-கேதரின் தம்பதி, இளவரசர் ஹாரி-மேகன் தம்பதியர் ஒன்றாக இணைந்து, விண்ட்சார் கோட்டையின் வாயிலில் ராணிக்கு மலரஞ்சலி செலுத்தி பொதுமக்களிடம் பேசி தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தி இருந்தனர். இந்த நிலையில் மறைந்த தனது பாட்டியும், ராணியுமான எலிசபெத் … Read more

சவுதி அரேபிய பட்டத்து இளவரசரை சந்தித்தார் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் – பிரதமர் மோடி கொடுத்த கடிதத்தை ஒப்படைத்தார்

ஜெட்டா: மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் 3 நாள் பயணமாக கடந்த 10-ம் தேதி சவுதி அரேபியா சென்றார். வெளியுறவு அமைச்சராக பதவியேற்ற பிறகு ஜெய்சங்கர் சவுதி சென்றது இதுவே முதல் முறை ஆகும். இந்நிலையில், ஜெட்டா நகரில் அந்நாட்டு பட்டத்து இளவரசரும் துணைப் பிரதமருமான முகமது பின் சல்மான் பின் அப்துல் அஜிஸை ஜெய்சங்கர் நேற்று முன்தினம் சந்தித்தார். அப்போது பிரதமர் நரேந்திர மோடி எழுதிய கடிதத்தை பட்டத்து இளவரசரிடம் ஒப்படைத்தார். இந்த சந்திப்பின்போது, இரு … Read more

பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு கோவிலில் அடைக்கலம் கொடுத்த இந்துக்கள்

குவெட்டா, பாகிஸ்தானில் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்த நாட்டின் பெரும்பாலான நகரங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. இந்த நிலையில் அங்குள்ள பலூசிஸ்தான் மாகாணத்தில் ஜலால்கான் என்கிற கிராமத்தில் வெள்ளத்தால் வீடுகளை இழந்து தவிக்கும் முஸ்லிம் மக்களுக்கு இந்துக்கள் கோவிலில் அடைக்கலம் கொடுத்து உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் உடனடியாக கோவிலுக்கு வரும்படி ஒலிபெருக்கியின் மூலம் தொடர்ந்து அழைப்பு விடுத்து வருவதாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். அதோடு … Read more

துனிசியாவில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து 11 பேர் பலி

துனிஸ், உள்நாட்டு போர் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக படகுகளில் பயணம் செய்து ஐரோப்பாவை அடைய முற்படுகின்றனர். இதுபோன்ற ஆபத்தான பயணங்கள் பல நேரங்களில் துயரத்தில் முடிந்து விடுகிறது. இந்த நிலையில் வட ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் உள்ள ஸ்பாக்ஸ் பிராந்தியத்தில் இருந்து 30-க்கும் மேற்பட்ட அகதிகள் படகு ஒன்றில் இத்தாலி நோக்கி புறப்பட்டனர். இந்த படகு துனிசியாவின் மஹ்தியா … Read more

உஸ்பெகிஸ்தான் செல்கிறார் ஜிங்பிங்; பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பீஜிங்: சீன அதிபர் ஷீ ஜிங்பிங், இரண்டாண்டுகளுக்குப் பிறகு தன் முதல் வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்கிறார். கஜகஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தானுக்கு அவர் செல்கிறார். இந்த பயணத்தின் போது, நம் பிரதமர் மோடியை அவர் சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சீனாவின் பீஜிங்கை தலைமையிடமாக வைத்து செயல்படும், எஸ்.சி.ஓ., எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு, மத்திய ஆசிய நாடான உஸ்பெகிஸ்தானில் வரும் 15 – 16ல் நடக்கிறது. இந்த அமைப்பில் சீனா, … Read more