அமைதிப் போராட்டத்தில் படைகளை பயன்படுத்தாதீர்கள்: ஈரானுக்கு ஐ.நா. வேண்டுகோள்
வாஷிங்டன்:அமைதியான போராட்டத்தில் தேவை இல்லாமல் படைகளைப் பயன்படுத்தாதீர்கள் என்று ஈரானிடம் ஐ.நா. வலியுறுத்தியுள்ளது. ஈரானில் கடந்த 8 நாட்களாக ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம் தொடர்ந்து தீவிரமாக நடந்து வருகிறது. ஈரானில் 80 நகரங்களில் கட்டாய ஹிஜாப்புக்கு எதிரான போராட்டம் இரவு பகலாக தொடர்கிறது. போராட்டத்தில் இளம் பெண்கள், இளைஞர்கள் என அனைவரும் பங்கேற்றுள்ளனர். இதுவரை இப்போராட்டத்தில் 50 பேர் உயிரிழந்துள்ளனர். பல காயமடைந்தனர். இந்த நிலையில் போராடும் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக சர்வதேச அளவில் குரல்கள் வலுத்து வருகின்றன. … Read more