பாகிஸ்தான் திரும்புகிறார் முன்னாள் பிரதமர் நவாஸ்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி தலைவரும், முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப் மீது பனாமா ஊழல் உள்பட பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் தொடரப்பட்டன. கடந்த 2018-ம் ஆண்டு நவாஸ் ஷெரீப்புக்கு ஒரு வழக்கில் 7 ஆண்டு சிறை தண்டனையும், மற்றொரு வழக்கில் 11 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. இதனிடையே மருத்துவ சிகிச்சைக்காக நீதிமன்ற அனுமதி பெற்று 2019-ம் ஆண்டு நவாஸ் ஷெரீப் லண்டன் சென்றார். அங்கு சிகிச்சை பெற்று வரும் அவர் அதன் … Read more

மசூதியில் தொழுகையின் போது குண்டுவெடிப்பு.. 35 பேர் உயிரிழந்திருக்கலாம் என தாலிபன் அறிவிப்பு.!

ஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டு வெடித்து 35 பேர் உடல் சிதறி உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது.தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மசூதியில் நேற்று வழக்கமான தொழுகை நடந்து கொண்டிருந்தது. அப்போது மசூதிக்குள் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில், 30க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர். உடனடியாக, ராணுவ வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டனர். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. Source … Read more

பாக்., ஆப்கனில் ராணுவம் குவிக்க சீனா திட்டம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ள சீனா அந்த இரு நாடுகளிலும் சிறப்பு புறக்காவல் மையங்கள் அமைத்து தங்கள் ராணுவத்தை குவிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.அண்டை நாடான பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் பி.ஆர்.ஐ. எனப்படும் ‘பெல்ட் அண்டு ரோடு இனிஷியேட்டிவ்’ என்ற திட்டம் வாயிலாக சாலை மற்றும் இதர கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் திட்டத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் … Read more

வெற்றியுடன் துவக்குமா இந்தியா! இன்று ஜிம்பாப்வேயுடன் முதல் மோதல்| Dinamalar

ஹராரே : இந்தியா, ஜிம்பாப்வே அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது. இந்திய அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடரை வெற்றியுடன் துவக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இன்று, ஹராரேயில் உள்ள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் முதல் போட்டி நடக்கிறது. ராகுல் எதிர்பார்ப்பு கொரோனா, காயத்தில் இருந்து மீண்ட லோகேஷ் ராகுல், இரண்டு மாதங்களுக்கு பின் கேப்டனாக அணிக்கு திரும்பினார். இவர், … Read more

நூறாவது கொள்ளுப் பேரக் குழந்தையை பார்த்த 99 வயது பெண்!| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பென்சில்வேனியா : அமெரிக்காவில் வசிக்கும் 99 வயது பெண்ணுக்கு, 100வது கொள்ளுப் பேரன் பிறந்துள்ளார். அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் வசிப்பவர் மார்க்ரெட் கோல்லர்,99. கடந்த 1924ல் பிறந்த இவர், வில்லியம் பால்ஸ்டர் என்பவரை திருமணம் செய்து ௧௧ குழந்தைகளை பெற்றார். தற்போது 99 வயதை நிறைவு செய்துள்ள மார்க்ரெட் அடுத்த சில மாதங்களில் 100 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். இந்நிலையில் அவருக்கு கடந்த 4ம் தேதி 100வது கொள்ளுப் … Read more

டீன் ஏஜ் பெண்ணுக்கு கர்ப்பம் தரிக்க இருக்கும் முதிர்ச்சி கருவை கலைக்க இருக்காது: நீதிமன்ற தீர்ப்பு

டீன் ஏஜ் சிறார்களுக்கு பெற்றுக்கொள்ளும் அளவுக்கு முதிர்ச்சி இருக்கலாம், ஆனால் கருக்கலைப்பு செய்து கொள்வதற்கான முதிர்ச்சியும் பக்குவமும் அவர்களுக்குக் கிடையாது என்று அமெரிக்க நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு உலகம் முழுவதும் இருந்து கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. 16 வயது வளர் இளம் பெண் ஒருவர், தான் பள்ளி மாணவியாக இருப்பதால், “குழந்தையைப் பெற்றுக் கொள்ளத் தயாராக இல்லை” என்றுகூறி, கருக்கலைப்பு சேய்யக் கோரி நீதிமன்றத்தை அணுகியதற்கு இவ்வாறு தீர்ப்பு வழங்கியுள்ளதாக AFP செய்தி வெளியிட்டுள்ளது. முன்னதாக, கருக்கலைப்பு செய்யக் … Read more

கார்க்கிவ் நகரில் ரஷ்யப் படைகளின் குண்டுவீச்சில் 3 பேர் உயிரிழப்பு, 10 பேர் காயம்

உக்ரைனின் கார்க்கிவ் நகரில் ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில் 3 பேர் உயிரிழந்ததாகவும் 10 பேர் படுகாயம் அடைந்ததாகவும முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கார்க்கிவ் நகரில் ரஷ்யாவின் குண்டுவீச்சுத் தாக்குதலால் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு தீப்பிடித்து எரிந்ததால் உயிச்சேதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரான கார்க்கிவ்வை கடந்த பிப்ரவரிமாதம் பெரும் படைதிரட்டி ரஷ்யா கைப்பற்றிய போதும் உக்ரைன் வீரர்களின் பலமான எதிர்ப்பு காரணமாக அதனைத் தனது கட்டுக்குள் கொண்டு வர இயலவில்லை. Source link

தன்னை கடித்த பாம்பை கடித்து துப்பிய 2 வயது சிறுமி!| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் அங்கரா : துருக்கியில், தன்னை கடித்த பாம்பை 2 வயது சிறுமி கடித்துக் கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்காசிய நாடான துருக்கியின் பிங்கோல் அருகே கண்டூர் என்ற கிராமத்தில் வசிக்கும் 2 வயது சிறுமி, வீட்டுக்கு பின்புறம் உள்ள தோட்டத்தில் விளையாடிக் கொண்டு இருந்தாள். அப்போது ஒரு பாம்பு அவளது உதட்டை கடித்தது. பதிலுக்கு சிறுமியும் அந்தப் பாம்பை பிடித்து கடிக்கத் துவங்கினாள். அந்தப் பாம்பு சிறுமியிடம் இருந்து தப்பிக்க … Read more

பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரானுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி..!

பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரானுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி, காட்டுத்தீயை கையாள்வதில் அந்நாட்டிற்கு இந்தியா துணை நிற்கும் என உறுதியளித்தார். இது குறித்து சமூகவலைதளங்களில் தெரிவித்துள்ள பிரதமர், இந்தியா – பிரான்ஸ் இடையிலான ஒத்துழைப்பு தொடர்பாகவும், உலகளாவிய மற்றும் பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகள் குறித்தும் விவாதித்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும், உணவு மற்றும் ஆற்றல் பாதுகாப்பில் உலகளவில் நிலவும் சவால்களை எதிர்கொள்ள இணைந்து பணியாற்ற இருவரும் ஒப்புக்கொண்டதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார். Source link

ஆக.,24ல் நாடு திரும்புகிறார் கோத்தபய ராஜபக்சே| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொழும்பு : ‘இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே வரும் 24ல் இலங்கை திரும்புவார்’ என அவரது உறவினர் கூறினார். இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியதை அடுத்து அங்கு அத்தியாவசியப் பொருட்களின் விலை உச்சத்துக்கு சென்றது. இதனால் வெகுண்டெழுந்த மக்கள் கடந்த மாதம் அதிபர் மற்றும் பிரதமர் மாளிகையை முற்றுகையிட்டனர். இதையடுத்து ஜூலை 13ல் அங்கிருந்த தப்பிச் சென்ற அதிபர் கோத்தபய ராஜபக்சே மாலத்தீவு சென்றார். பின் அங்கிருந்து … Read more