கனடாவில் மர்ம நபர்கள் கத்தியால் குத்தியதில் 10 பேர் உயிரிழப்பு

ஒட்டாவா: கனடாவில் நேற்று முன்தினம் அடுத்தடுத்து 13 இடங்களில் நிகழ்ந்த கத்திக்குத்து தாக்குதல் சம்பவங்களில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக 2 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். கனடாவின் சஸ்காட்செவன் மாகாணத்தில் பழங்குயின மக்கள் அதிகம் வசிக்கும் ‘ஜேம்ஸ் ஸ்மித் க்ரீ நேஷன்’ என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பழங்குடியின சமூகத்தினர் மத்தியில் நேற்று முன்தினம் மோதல் ஏற்பட்டது. இதில் இந்த கிராமத்திலும் அதன் அருகில் உள்ள … Read more

வாங்க வங்கதேச பிரதமரே ! ராணுவ அணிவகுப்பு மரியாதை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: இந்திய வந்துள்ள வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இரு நாட்டு உறவு மேம்பாடுகள் தொடர்பாக 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவுக்கு அரசு முறை பயணம் வந்துள்ள ஷேக்ஹசீனாவை பிரதமர் மோடி ஜனாதிபதி மாளிகையில் வரவேற்றார். இங்கு முப்படை வீரர்கள் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டார். இந்த வரவேற்பு முடிந்ததும் நிருபர்களிடம் பேசிய ஹசீனா; இந்தியா வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இரு நாட்டு … Read more

ஆப்கனில் ரஷ்ய தூதரகம் அருகே குண்டுவெடிப்பு: 2 அதிகாரிகள் உட்பட 8 பேர் உயிரிழப்பு

காபூல்: ஆப்கானிஸ்தானில் ரஷ்ய தூதரகம் அருகே நடந்த குண்டுவெடிப்பில் 2 தூதரக அதிகாரிகள் உட்பட 20 பேர் உயிரிழந்தனர். தலைநகர் காபூலில் உள்ள ரஷ்யத் தூதரகத்தில் நேற்று காலை விசா பெறுவதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தவர்கள் மீதுமனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்பில் ரஷ்ய தூதரக அதிகாரிகள் உட்பட 20 பேர் உயிரிழந்தனர் என ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. எனினும், குண்டுவெடிப்பில் ஏற்பட்டஉயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்து ஆப்கானிஸ்தான் தரப்பில் இதுவரை தகவல் வெளியிடவில்லை. … Read more

ஜிம்பாப்வேயில் தட்டம்மை: 700 குழந்தைகள் உயிரிழப்பு| Dinamalar

ஹராரே : ஜிம்பாப்வே நாட்டில் தட்டம்மை நோய்க்கு பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 700 ஆக உயர்ந்துள்ளது. தென் ஆப்ரிக்க நாடான ஜிம்பாப்வேயின் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து தட்டம்மை நோயால் ஏராளமான குழந்தைகள் பாதிக்கப்பட்டனர். இதுவரை 6,291 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 698 பேர் உயிரிழந்துள்ளனர். குழந்தைகளுக்கு தட்டம்மைக்கான தடுப்பூசி செலுத்த வேண்டும் என ஏராளமானோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ஆனால், ஜிம்பாப்வே நாட்டில் நவீன மருத்துவத்துக்கு மத … Read more

பிரிட்டன் பிரதமர் பதவி போட்டியில் ரிஷி சுனக் தோல்வி அடைந்தது ஏன்?

பிரிட்டனின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் தேர்வு செய்யப்பட்டார். இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்குக்கு பெரும்பான்மை கிடைக்காததால் பிரதமராகும் வாய்ப்பை இழந்தார். ரிஷி சுனக் ஆரம்பம் முதலே முன்னிலையில் இருந்தார். கன்சர்வேட்டிவ் எம்.பி.க்கள் வாக்களித்த 5 சுற்று தேர்தலில் ரிஷிக்கு அதிக வாக்குகள் கிடைத்தன. ஆனால், இறுதிகட்ட தேர்தலில் பங்கேற்ற கட்சி உறுப்பினர்கள், லிஸ் ட்ரஸுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதன்காரணமாக ரிஷி சுனக் தோல்வியை தழுவியுள்ளார். அவரது தோல்விக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. பிரிட்டிஷ் ராணி … Read more

சூடானில் கன மழைக்கு 112 பேர் பரிதாப பலி| Dinamalar

கய்ரோ : சூடானில் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 112 ஆக உயர்ந்துள்ளது. வடகிழக்கு ஆப்ரிக்க நாடான சூடானில் வழக்கமாக ஜூன் மாதம் துவங்கும் பருவ மழை இந்த ஆண்டு மே மாதமே துவங்கி விட்டது. இதுவரை பெய்து வரும் கன மழையால் நாடே வெள்ளக்காடாகி உள்ளது. மருத்துவமனைகள், பள்ளிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் 85 ஆயிரம் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. ஆங்காங்கே வீடுகள் இடிந்து பலர் பலியாகினர். இதுவரை அங்கு 112 பேர் உயிரிழந்துள்ளனர். வழக்கமாக ஜூன் … Read more

கனடாவில் கத்திக்குத்து: 10 பேர் பலி| Dinamalar

ரெஜினா : கனடாவில், வெவ்வேறு இடங்களில் ஒரே நாளில் நடந்த தொடர் கத்திக் குத்து சம்பவங்களில், 10 பேர் உயிரிழந்தனர்; 15 பேர் காயமடைந்தனர். வட அமெரிக்க நாடான கனடாவின் தெற்கே உள்ளது, சாஸ்கத்செவான் மாகாணம். அமெரிக்க எல்லையில் அமைந்துள்ள இந்த மாகாணத்தில், நேற்று முன்தினம் பல்வேறு இடங்களில் கத்திக் குத்து சம்பவங்கள் நடந்தன. இந்த தாக்குதலில், 10 பேர் உயிரிழந்தனர். பலத்த காயங்களுடன், 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலை, இரண்டு பேர் நடத்தியதாக … Read more

தென் கொரியாவில் சூறாவளி; மக்களுக்கு கடும் எச்சரிக்கை| Dinamalar

சியோல் : தென் கொரியாவில் மணிக்கு 290 கி.மீ., வேகத்தில், ‘ஹின்னம்னார்’ சூறாவளிப் புயல் நெருங்கி வருவதை அடுத்து கனமழையுடன் கூடிய பலத்த காற்று வீசி வருவதால் நாடு முழுதும் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிழக்காசிய நாடான தென் கொரியாவில், சமீபத்தில் கன மழை பெய்தது. தலைநகர் சியோல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கொட்டித் தீர்த்த மழையால் 14 பேர் உயிரிழந்தனர். கன மழை பெய்து சில வாரங்களே ஆன நிலையில், தென் கொரிய கடற்கரை … Read more

சீனாவில் பயங்கர நிலநடுக்கம்; 46 பேர் பலி

பிஜீங், சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் நேற்று மதியம் 12.25 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. லுடிங் நகரில் இருந்து 39 கிலோமீட்டர் தொலைவை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள பல்வேறு கட்டிடங்கள் அதிர்ந்தன. நிலநடுக்கத்தை தொடர்ந்து மக்கள் அலறியடித்துக்கொண்டு சாலைகள், வீதிகளில் தஞ்சமடைந்தனர். இந்நிலையில், இந்த நிலநடுக்கத்தில் 46 பேர் உயிரிழந்தனர். மேலும், 50 பேர் படுகாயமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களில் 29 … Read more