மியான்மர்: ஊழல் வழக்கில் ஆங் சான் சூகிக்கு 6 ஆண்டுகள் சிறை

யாங்கூன், மியான்மர் நாட்டில் ஆட்சியை கடந்த ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதி ராணுவம் கைப்பற்றியது. மேலும், அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை கைது செய்து சிறை வைத்தது. ராணுவத்திற்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபடுதல், ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக ஆங் சாங் சூகி 10 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் ஆங் சான் சூகிக்கு மியான்மர் ராணுவ நீதிமன்றம் 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. 77 … Read more

சர்வதேச ​விண்வெளி மையத்தில் இந்திய தேசியக்கொடி..!

வாஷிங்டன், நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்தியர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, சர்வதேச விண்வெளி மையத்தில் இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. அந்தப் புகைப்படத்தை, அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் பணிபுரியும் இந்திய அமெரிக்க விஞ்ஞானி ராஜா சாரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இந்தியர்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். தனது பூர்விக ஊரான ஹைதராபாத் நகரம், வண்ண விளக்குகளால் ஒளிரும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். தினத்தந்தி Related Tags … Read more

சுதந்திர தினத்தில் ஐரோப்பாவின் உயரமான மலைச்சிகரத்தில் தேசியக்கொடியை ஏற்றி சாதனை படைத்த இந்தியாவின் பாவனா டெஹாரியா!

லண்டன், இந்திய மலையேற்ற வீராங்கனையான பாவனா டெஹாரியா ஐரோப்பாவின் மிக உயரமான மலைசிகரமான எல்ப்ரஸ் மலையில், இந்திய தேசியக்கொடியை பறக்கவிட்டு சாதனை படைத்தார். மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் உள்ள தமியா என்ற குக்கிராமத்தைச் சேர்ந்தவர் டெஹாரியா என்ற 30 வயதான பெண்மணி, ஆகஸ்ட் 15ம் தேதி(இன்று) மலைசிகரத்தை அடைய சரியாக திட்டமிட்டு இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். ரஷியா-ஜார்ஜியா எல்லையில் அமைந்துள்ள ஐரோப்பாவின் 5,642 மீட்டர் உயரமான சிகரத்தில், கடும் பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் சுதந்திர தினத்தன்று … Read more

சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியா வழங்கிய இலவச சைக்கிளில் சவாரி செய்த மடகாஸ்கர் பிரதமர்! வைரல் வீடியோ

அண்டனானரிவோ [மடகாஸ்கர்], இந்திய தேசத்தின் 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியாவின் தோழமை நாடான மடகாஸ்கருக்கு 15,000 சைக்கிள்களை இந்தியா வழங்கியுள்ளது. மடகாஸ்கர் மற்றும் கொமொரோஸ் நாட்டின் இந்திய தூதர் அபய் குமார் மற்றும் மடகாஸ்கர் பிரதமர் கிறிஸ்டியன் என்ட்சே ஆகியோர் ஒன்றாக இந்த சைக்கிள்களை ஓட்டினர். இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் நட்பு மற்றும் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக அவர்கள் ஒன்றாக சைக்கிள் ஓட்டினர். அண்டனானரிவோவில் செயல்பட்டு வரும் மடகாஸ்கர் மற்றும் கொமோரோஸ் நாட்டுக்கான … Read more

சல்மான் ருஷ்டியை கொல்ல முயன்ற நபருக்கும் ஈரானுக்கும் தொடர்பா.. திட்டவட்டமாக மறுத்த ஈரான்!

டெஹ்ரான், பிரபல எழுத்தாளரான சல்மான் ருஷ்டி (வயது 75) மீது கடந்த வாரம் கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சல்மான் ருஷ்டி விரிவுரை ஆற்ற இருந்த சமயத்தில் மேடையில் திடீரென ஏறிய நபர் சல்மானை கத்தியால் குத்தினார். இதில், சல்மானின் கழுத்தில் படுகாயம் ஏற்பட்டது. கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்த சல்மான் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். முதலில் அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. … Read more

மடாகஸ்கர் நாட்டிற்கு 15 ஆயிரம் சைக்கிள்களை வழங்கியது இந்தியா| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஆண்டானாரிவோ: இந்திய சுதந்திர தினத்தையொட்டி, மடாகஸ்கர் நாட்டிற்கு இந்தியா 15 ஆயிரம் மதிவண்டியை (சைக்கிள்) நன்கொடையாக வழங்கியது. இன்று நாடு முழுவதும் சுதந்திர தின பவள விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.இந்நிலையில் நட்பு நாடான மடகாஸ்கருக்கு 15,000 சைக்கிள்களை நன்கொடையாக இந்தியா வழங்கியுள்ளது. இந்தியா அனுப்பி வைத்த சைக்கிளை மடகாஸ்கர் பிரதமர் கிறிஸ்டியன் என்ட்சே, மடகாஸ்கர் நாட்டிற்கான இந்திய தூதர் அபய் குமாரும், ஆகிய இருவரும் சைக்கிள் சவாரி செய்து … Read more

ஸ்காட்லாந்தில் அமலுக்கு வந்தது – இலவச சானிட்டரி நாப்கின் உரிமை சட்டம்!

உலக பொது சுகாதார வரலாற்றில் முதல் நாடாக, பெண்களுக்கு சானிட்டரி பொருட்கள் இலவசமாக கிடைப்பதை உரிமையாக்கும் சட்டம், ஸ்காட்லாந்தில் அமலுக்கு வந்துள்ளது. ஐரோப்பிய நாடான பிரிட்டனின் ஒரு அங்கமாக திகழும் ஸ்காட்லாந்தில், கவுன்சில், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் பெண்களுக்கு, மாதவிடாய் தொடர்புடைய நாப்கின் உள்ளிட்ட பொருட்கள் இலவசமாக கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், மாதவிடாய் பொருட்கள் உரிமை சட்டம் இயற்றப்பட்டது. இந்த புதிய சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. கடந்த 2017 ஆம் … Read more

களை கட்டியது வாகா எல்லை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் அமிர்தசரஸ்: 75 வது சுதந்திர தின விழாவையொட்டி இந்தியா பாகிஸ்தான் எல்லையான வாகாவில் கொடியிறக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக துவங்கியது. இதில் நமது வீரர்களின் கம்பீர நடை பார்வையாளர்களை உற்சாகமடைய செய்தது நாடு முழுவதும் 75 வது சுதந்திர தினம் இன்று பிரமாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டில்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடி ஏற்றி உரை நிகழ்த்தினார். இதன் தொடர்ச்சியாக இன்று மாலை பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் … Read more

ஊழல் வழக்கில் ஆங்சான் சூச்சிக்கு 6 ஆண்டு சிறை: ராணுவ கோர்ட் தீர்ப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பாங்காக் : மியான்மரில் ஆட்சியில் இருந்து துாக்கி எறியப்பட்ட, நோபல் பரிசு பெற்ற மூத்த அரசியல் தலைவர் ஆங் சான் சூச்சிக்கு, 76, ஊழல் வழக்கில் ராணுவ கோர்ட். ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது ஆசிய நாடான மியான்மரில் 2020ல் நடந்த தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி வென்றது. ஆனால் அதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி அரசைக் கவிழ்த்து, ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது.அதைத் … Read more

76வது சுதந்திர தின விழா: இந்தியாவுக்கு உலக தலைவர்கள் வாழ்த்து!

76வது சுதந்திர தின விழாவை ஒட்டி, இந்தியாவுக்கு, உலகத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். இந்தியத் திருநாட்டின் 76-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை ஒட்டி, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடி ஏற்றி, வணக்கம் செலுத்தி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இதே போல், மாநில தலைநகரங்களில், மாநில முதலமைச்சர்கள் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினர். இந்நிலையில், 76வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் இந்தியாவுக்கு, … Read more