ஆப்கன் குண்டு வெடிப்பு19 பேர் உடல் சிதறி பலி| Dinamalar
காபூல் :ஆப்கானிஸ்தானில் கல்வி மையத்தில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில், மாணவர்கள் உட்பட 19 பேர் உயிரிழந்தனர்; 27 பேர் காயம் அடைந்தனர்.தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில், தலிபான்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதில் இருந்து, ஐ.எஸ்., பயங்கரவாதிகள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆங்காங்கே மனித வெடிகுண்டு தாக்குதல், துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. தலைநகர் காபூலில் தஷ்டி பர்சி பகுதியில், அந்நாட்டின் சிறுபான்மையினரான ஹஸாராஸ் எனப்படும் ஷியா பிரிவு முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர். இங்கு, … Read more