ரஷ்ய அரசு அதிகாரிகளுக்கு விசா வழங்க மறுத்த அமெரிக்கா..! – அமெரிக்கா கூறிய விளக்கம் என்ன..?

ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் வருடாந்திரக் கூட்டத்தில் பங்கேற்க ரஷ்யப் பேராளர்களுக்கு அமெரிக்கா இன்னும் விசா வழங்கவில்லை.நியூயார்க்கில் கூட்டம் நடைபெற திட்டமிடப்பட்டிருக்கிறது . வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரோவ் தலைமையில் 56 பேருக்கு ரஷ்யா விசா கோரியிருந்தது. ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸுக்கு அனுப்பிய கடிதம் அதிர்ச்சி தருவதாக ரஷ்யா கூறியது. 1947-ஆம் ஆண்டு கையெழுத்திட்ட ஐக்கிய நாட்டு நிறுவனத் தலைமையக ஒப்பந்தப்படி ஐக்கிய நாட்டு நிறுவனக் கூட்டத்தில் பங்கேற்க வெளிநாட்டு அரசு அதிகாரிகளுக்கு … Read more

இந்திய கர்ப்பிணி பெண் உயிரிழப்பு:: போர்ச்சுகல் அமைச்சர் ராஜினாமா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லிஸ்பன்:போர்ச்சுகலுக்கு சுற்றுலா சென்ற இந்திய கர்ப்பிணி பெண் உயிரிழந்த விவகாரத்தில், அந்நாட்டு சுகாதார அமைச்சர் மார்டா டெமிடோ ராஜினாமா செய்தார்.ஐரோப்பிய நாடான போர்ச்சுகலுக்கு இந்தியாவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் சுற்றுலா சென்று உள்ளனர். அப்போது, அந்த குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு, பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இந்நிலையில், அந்நாட்டின் சுகாதார அமைச்சர் மார்டா டெமிடோ, அவசர கால மகப்பேறு சிகிச்சைகளை தற்காலிகமாக நிறுத்த உத்தரவிட்டிருந்ததால், அந்தப் பெண் … Read more

தைவானுக்கு ஏவுகணை வழங்கும் அமெரிக்கா..? தைவான் பொருட்களுக்கு தடை விதிக்கிறதா சீனா..?

தைவான், சீனா ஆகிய நாடுகளுக்கு இடையே இருக்கும் மனகசப்புகளுக்கு இடையே தைவானுக்கு ஏவுகணை வழங்கும் முடிவை எடுத்துள்ளது அமெரிக்கா. போர் கப்பல்கள், விமானங்கள், போரில் தாக்கி அழிக்கும் திறன் கொண்டஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களை அமெரிக்கா,தைவானுக்குவழங்கமுடிவு செய்துள்ளது. தைவான் அரசு, சீனாவுக்கு எதிரான செயல்பாட்டில் ஈடுபட்டு வருவதாகஅந்நாடு குற்றம் சாட்டி வந்தது.இந்த நிலையில் கடந்த மாதம்அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி , சீனாவின்கடும்எதிர்ப்பையும் மீறி தைவானுக்கு சென்றது அந்நாட்டுக்கு மேலும்கோபத்தை உண்டாக்கியது. இதையடுத்து தைவானை மிரட்டும் விதத்தில் … Read more

போலந்திலும் இந்தியர் மீது தாக்குதல்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வார்சாவ்: ‘ இந்தியர்கள் ஒட்டுண்ணிகள்’, ஊடுருவல்காரர்கள் என போலந்து நாட்டில் இந்தியர் ஒருவரை அமெரிக்காவை சேர்ந்தவர் விமர்சித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் நகரத்தில் நான்கு இந்தியப் பெண்களை மெக்சிகோ அமெரிக்கப் பெண் இனரீதியாக வசைப்பாடி, தாக்குதலிலும் ஈடுபட்டார். அப்பெண், இந்தியர்களாகிய உங்களைப் பார்த்தால் எனக்கு வெறுப்பாக இருக்கிறது. வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்ள இந்தியர்கள் எல்லோரும் அமெரிக்காவுக்கு வந்துவிடுகின்றனர். … Read more

மிகைல் கோர்பசேவ் இறுதி நிகழ்வில் பங்கேற்காத புதின்

மாஸ்கோ: மிகைல் கோர்பசேவ் இறுதி நிகழ்வில் ரஷ்ய அதிபர் புதின் கலந்துகொள்ளாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சோவியத் யூனியனின் கடைசி அதிபராக அறியப்பட்ட மிகைல் கோர்பசேவ் வயது முதிர்வு காரணமாக மரணம் ஆகஸ்ட் 30-ஆம் தேதி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 91. பனிப்போர் முடிவுக்கு காரணமாக இருந்த மிகைலின் கோர்பசேவின் மரணம், ரஷ்ய மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் இறந்து நான்கு நாட்களுக்குப் பிறகு இன்று அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது. இந்த நிகழ்வில் ரஷ்யாவின் முக்கிய … Read more

இலங்கை திரும்பினார் கோத்தபய ராஜபக்சே – உச்சகட்ட பாதுகாப்பில் தலைநகர்!

இலங்கையில் இருந்து வெளியேறிய அந்நாட்டின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே இன்று அதிகாலை நாடு திரும்பினார். அண்டை நாடான இலங்கையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் கொந்தளிப்புக்கு உள்ளான அந்த நாட்டு மக்கள் இந்த நெருக்கடிக்கு அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினரே காரணம் என கூறி போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டம் கடந்த ஜூலை மாதம் 9 ஆம் தேதி தீவிரமடைந்த நிலையில் அப்போது அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே உடனடியாக … Read more

ஊழல் வழக்கில் மலேசிய முன்னாள் பிரதமர் மனைவிக்கு 10 ஆண்டு சிறை

கோலாலம்பூர்: வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் மலேசிய முன்னாள் பிரதமரின் மனைவிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் ஆட்சியில் அவரது மனைவி ரோஸ்மா மன்சோர் மின்சாரம் தொடர்பான ஒப்பந்தங்களில் லஞ்சம் பெற்று சொத்து குவித்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டது. இது தொடர்பாக நடைபெற்ற வழக்கில் ரோஸ்மா மீதான குற்றம் நிரூபணமானதால் அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோலாலம்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. … Read more

நீங்கள் ஒட்டுண்ணிகள், இன அழிப்பாளர்கள்; திரும்பிப் போங்கள் – போலந்தில் இந்தியர் மீது இனவெறி தாக்குதல் 

வார்சா: சமீபகாலமாக இந்தியர்கள் மீது வெளிநாடுகளில் இனவெறி தாக்குதல் நடைபெறுவது அதிகரித்துள்ளது. போலந்து நாட்டில் இந்தியர் ஒருவர் இனவெறி தாக்குதலுக்கு உள்ளாகும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில், தன்னை ஐரோப்பாவைச் சேர்ந்தவர், வெள்ளை இனத்தவர் என்று அறிமுகப்படுத்திக் கொள்ளும் அந்த நபர் இந்தியர் ஒருவர் இடைமறித்து சரமாரியாக வசைபாடுகிறார். அந்த நபரின் பேச்சில் இருந்து.. ”நீங்கள் இந்தியரா? நீங்கள் ஏன் இங்கு இருக்கிறீர்கள். நீங்கள் ஏன் உங்கள் நாட்டுக்கு திரும்பிச் செல்லக் கூடாது. எப்போதும் நீங்கள் இந்தியர்கள் … Read more

காசு என்னுது இடம் உன்னுது – இலங்கைக்கு தூது விட்ட நித்தியானந்தா

தமிழ்நாட்டைச் சேர்ந்த சாமியார் நித்தியானந்தா சர்ச்சையின் முழு வடிவம். நம் நாட்டில் பல பாலியல் புகார்களிலும், சர்ச்சைகளிலும் சிக்கிய நித்தியானந்தா இங்கு இருந்தால்தானே பிரச்னை என்று முடிவு செய்து கைலாசா என்ற தனி நாட்டினை உருவாக்கி அங்கு தற்போது இருக்கிறார். நாட்டுக்கு அதிபர் என்று தன்னைத் தானே அறிவித்துக்கொண்ட நித்தியானந்தா, கைலாசா நாட்டுக்கென்று தனி நாணயம், விசா என்று அதகளம் செய்தார். அதுமட்டுமின்றி கைலாசாவில் தொழில் தொடங்க வருபவர்களுக்கான் விசா இலவசம் என்று அறிவித்தார். கைலாசாவில் நித்தியானந்தாவுடன் … Read more

உச்சக்கட்ட பரபரப்பில் இலங்கை – நாடு திரும்பினார் கோத்தபய ராஜபக்சே

இலங்கையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் கொந்தளிப்புக்குள்ளான அந்த நாட்டு மக்கள் இந்த நெருக்கடிக்கு அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினரே காரணம் என கூறி போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டம் கடந்த ஜூலை மாதம்  9ஆம் தேதி தீவிரமடைந்த நிலையில் அப்போது அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே உடனடியாக பதவி விலக வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் படிக்க | NRI Remittances: கேரளத்தை பின்னுக்குத் தள்ளும் வட மாநிலங்கள், விவரம் … Read more