Salman Rushdie: சல்மான் ருஷ்டி உடல்நிலையில் முன்னேற்றம் – பேச முடியும் என தகவல்!

அமெரிக்காவில், கத்தியால் குத்தப்பட்ட எழுத்தாளர் சல்மான் ருஷ்டி உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர், சல்மான் ருஷ்டி, 75. பிரபலமான எழுத்தாளராகிய இவர் எழுதிய, “சாத்தானின் வேதங்கள்” என்ற நூல், சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில், இஸ்லாமுக்கு எதிரான விஷயங்கள் இடம் பெற்றிருப்பதாக கூறி, அவருக்கு எதிராக கடும் போராட்டங்கள் நடந்தன. இதைத் தொடர்ந்து, எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு பல்வேறு தரப்பினர் மிரட்டல் விடுத்து வந்தனர். இந்நிலையில், … Read more

அமெரிக்காவில் சல்மான் ருஷ்டி மீது தாக்குதல் நடத்திய மர்ம நபர் யார்?

நியூயார்க்: அமெரிக்காவில் கத்தியால் குத்தப்பட்ட இந்திய வம்சாவளி எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு (75) தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மும்பையில் பிறந்த சல்மான் ருஷ்டி அங்கேயே பள்ளிக் கல்வியை முடித்தார். பிரிட்டனில் கல்லூரி கல்வியை நிறைவு செய்தார். பின்னர் பிரிட்டிஷ் குடியுரிமை பெற்று அந்த நாட்டிலேயே நிரந்தரமாக தங்கிவிட்டார். சாத்தானின் கவிதைகள் இதுவரை 14 புத்தகங்களை எழுதியுள்ள சல்மான் ருஷ்டி, புக்கர் பரிசு உள்ளிட்ட உயரிய விருதுகளையும் வென்றுள்ளார். கடந்த 2016-ம் ஆண்டில் அமெரிக்க அரசு அவருக்கு … Read more

சொத்துகளை முடக்கினால் உறவை முறித்து கொள்வோம் – அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை

மாஸ்கோ: ரஷ்யாவின் சொத்துகளை அமெரிக்கா முடக்கும்பட்சத்தில் அந்த நாட்டுடனான உறவை முறித்துக் கொள்ள ரஷ்யா தயங்காது என எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா அந்த நாட்டின் மீது சிறப்பு ராணுவ நடவடிக்கைக்கு கடந்த பிப்ரவரி 24-ல் உத்தரவிட்டது. இதையடுத்து, ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு உக்ரைன் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு தேவையான ராணுவ உதவிகளை அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து வழங்கி வருகின்றன. இந்த … Read more

பாம்பு நிபுணரை கடித்துக் கொன்ற பாம்பு: இரண்டாவது பாம்புக்கடி உயிருக்கு ஆபத்து

வடக்கு வர்ஜீனியாவில் உள்ள புல் ரன் மலைகள் காப்பகத்தில் (Bull Run Mountains Natural Area) பாம்புகளை கணக்கெடுக்கும் பணியில் இருந்த  மார்ட்டின் பாம்பு கடித்து இறந்து போனார். தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் பாம்புகளின் எண்ணிக்கையை பதிவு செய்வதற்கும் கணக்கிடுவதற்கும் கடுமையான மலைப் பயணங்களை மேற்கொண்ட மார்ட்டின் உலக புகழ்பெற்ற பாம்பு நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது வாழ்நாள் முழுவதையும் பாம்புகளுக்காகவே செலவழித்த அவரின் மரணமும் பாம்பு கடித்ததால் தான் ஏற்பட்டுள்ளது என்பது அதிர்ச்சியளிக்கிறது. டிம்பர் ரேட்லர் என்று … Read more

ஒரு நாளுக்கு ரூ.7,000 முதல் ரூ.10 ஆயிரம் வரை தன்னையே வாடகைக்கு விட்ட இளைஞர்

டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவை சேர்ந்தவர் ஷோஜி மோரிமோட்டோ (38). கல்லூரி படிப்பை நிறைவு செய்த அவர் பல்வேறு தனியார் நிறுவனங்களில் பணியாற்றினார். அந்த நிறுவனங்களில் ஏற்பட்ட கசப்புணர்வு காரணமாக கடந்த 2018-ம் ஆண்டில் எவ்வித முதலீடும் இல்லாமல் புதிய தொழிலை தொடங்கினார். இதுதொடர்பாக ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில். “கடைக்கு செல்வதற்கு ஆள் தேவை, விளையாடுவதற்கு ஆள் தேவை, எளிதான வேலைகளுக்கு ஆள் தேவை என்றால் என்னை வாடகைக்கு எடுத்து கொள்ளலாம். ஆனால் கடினமான வேலைகளை … Read more

தைவானை ஆதரிக்கும் உறுதியான நடவடிக்கைகள் தொடரும்- அமெரிக்கா

வாஷிங்டன், சீனாவிடம் இருந்து பிரிந்து தனிநாடாக உருவான தைவானை, தங்கள் நாட்டின் ஒரு பகுதி என கூறி சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்த சூழலில் சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி சமீபத்தில் தைவானுக்கு சென்றார். இதனால் ஆத்திரமடைந்த சீனா தைவான் மற்றும் அமெரிக்காவை மிரட்டும் வகையில் தைவானை நாலாபுறமும் சுற்றிவளைத்து போர்ப்பயிற்சியில் ஈடுபட்டது. சீனாவின் ஒரே நாடு கொள்கையை உறுதிப்படுத்த இது போன்ற போர்ப்பயிற்சிகள் தொடரும் எனவும் சீனா எச்சரித்துள்ளது. … Read more

ஹாரிபாட்டர் எழுத்தாளர் ரவுலிங்கிற்கு கொலை மிரட்டல்| Dinamalar

லண்டன்: பிரபல எழுத்தாளர் ஜே.கே. ரவுலிங்கிற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், சல்மான் ருஷ்டி கலந்து கொண்ட போது மர்ம நபர், சல்மான் ருஷ்டியை கத்தியால் சரமாரியாக குத்தினார். அவருடைய கழுத்து மற்றும் வயிற்றில் கத்தியால் குத்தப்பட்டுள்ளதால் அபாய கட்டத்தில் உள்ளதாகவும், பார்வை பறிபோக வாய்ப்புள்ளதாகவும் டாக்டர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் பிரபல இங்கிலாந்தை சேர்ந்த பெண் எழுத்தாளர் ஜே.கே.ரவுலிங். இவர் ஹாரிபாட்டர் என்ற கதாபாத்திரத்தை முதன்மையாக கொண்டவை. … Read more

சீனாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா – புதிதாக 2,144 பேருக்கு தொற்று உறுதி

பெய்ஜிங், உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தி விட்டது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன. இந்த நிலையில் சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இருப்பினும் தொற்று எண்ணிக்கை குறைவாக … Read more

நீர் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகள்.. இங்கிலாந்து மக்களுக்கு வந்த சோதனை

லண்டன், இங்கிலாந்தில் கோடைகாலத்தின் வெப்பநிலை அதிகரித்து வருவதால், தென் மேற்கு, தெற்கு மற்றும் மத்திய இங்கிலாந்தின் ஒரு சில பகுதிகள் மற்றும் கிழக்கு இங்கிலாந்து முழுவதுமாக வறட்சி அறிவிக்கப்பட்டு உள்ளது. வறட்சி பகுதிகளில் உள்ள குளங்கள், ஏரிகள் மற்றும் நீத்தேக்கங்களில் வழக்கத்தை விடவும் நீரின் அளவு குறைந்து கானப்படுகிறது. இதன் காரணமாக அப்பகுதி மக்களுகளின் நீர் பயன்பாட்டிற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் அதிகபட்சமாக நேற்று ஒருசில பகுதிகளில் 34.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. திங்கட்கிழமை லண்டனை … Read more