யார் இந்த மனிஷா ருபேட்டா: பாகிஸ்தானின் முதல் இந்து பெண் டிஎஸ்பி!

பாகிஸ்தானில் இந்துக்கள் சிறுபான்மையினர். அந்நாட்டு இந்துக்கள் அரசுத் துறையில் குறைவாகவே பணியில் உள்ளனர். அதிலும், உயர் பொறுப்புகளுக்கு இந்துக்கள் தேர்வாவது கடினமான விஷயமாகவே பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், மனிஷா ரூபேட்டா என்ற இந்து பெண் அந்நாட்டின் முதல் பெண் டிஎஸ்பியாக பதவியேற்றுள்ளார். பாகிஸ்தானில் அரசு அதிகாரிகளாக பெண்கள் நியமிக்கப்படுவது அரிதான விஷயமாக பார்க்கப்படும் நிலையில், அதிலும், இந்து பெண் ஒருவர் டிஎஸ்பியாக பதவியேற்றுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். மனிஷா ருபேட்டாவின் குடும்பம் பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில் … Read more

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு மீண்டும் கொரோனா!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை அவரது வெள்ளை மாளிகை மருத்துவர் கெவின் ஓ கார்னர் உறுதி படுத்தியுள்ளார். “ஜோ பைடனுக்கு (79) சனிக்கிழமை ஆன்டிஜென் சோதனை மேற்கொள்ளப்பட்டத்தில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கு முன்பு தொடர்ந்து நான்கு நாட்கள் எடுக்கப்பட்ட சோதனையில் கொரோனா இல்லை என்று தெரிய வந்த நிலையில், சனிக்கிழமை எடுக்கப்பட்ட சோதனயில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. கண்டிப்பான தனிமைப்படுத்தும் நடைமுறைகளை அதிபர் … Read more

டென்மார்க் பகுதியை சேர்ந்த பரோயே தீவுகளில் வேட்டை கும்பல் அட்டூழியம்.. 100 டால்பின்கள் கொன்று குவிப்பு!

டென்மார்க் பகுதியை சேர்ந்த பரோயே தீவுகளில் 100-க்கும் மேற்பட்ட பாட்டில்நோஸ் (bottlenose) டால்பின்களை வேட்டை கும்பல் காட்டுமிராண்டித்தனமாக கொன்ற சம்பவம் சர்வதேச அளவில் விலங்குகள் நல ஆர்வலர்களிடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. தொலைதூர தீவுக்கூட்டத்தில் வசிக்கும் வேட்டைக்காரர்கள் கொக்கிகள், கத்திகள் மற்றும் ஈட்டிகளால் டால்பின்களை கொன்றதால், விரிகுடா கடற்பகுதியே சிவப்பு நிறமாக மாறியுள்ளது.  Source link

அண்டை நாடுகளை தேர்வு செய்ய முடியுமா? பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிரத்யேக பேட்டி

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்துக் கொண்ட பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி, ஜீ மீடியாவிற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பல விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார். அமெரிக்காவிற்கு எதிரான பாகிஸ்தான் அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கையில் பொருள் இல்லை என்று முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கூறியதில் எந்த அர்த்தமும் இல்லை என்று கூறிய பிவாலவல் பூட்டோ சர்தாரி, அனைத்து நாடுகளுடனும் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதாக தெரிவித்தார். இந்தியாவுடனான உறவைப் … Read more

வங்கதேசத்தில் பஸ் மீது ரயில் மோதி 11 பேர் உயிரிழப்பு

சிட்டகாங்: வங்கதேசத்தில் பஸ் மீது ரயில் மோதியதில் 11 பேர் உயிரிழந்தனர். வங்கதேசத்தின் சிட்டகாங் மாவட்டம் மிர்ஷாராய் உபாசிலா பகுதியிலிருந்து நேற்று முன்தினம் மாணவர்கள் மற்றும் பயிற்சி மையத்தின் ஆசிரியர்களை மினி பஸ் ஒன்று ஏற்றிச் சென்றது. இந்தபஸ், டாக்கா நோக்கிச் செல்லும்போது வழியில் ஆளில்லா ரயில்வே கிராசிங்கை கடக்க முயன்றுள்ளது. அப்போது அந்த வழியே வந்த பிரோவதி விரைவு ரயில், பஸ் ஆகியவை மோதிக்கொண்டன. இதில் 7 மாணவர்கள், 4 ஆசிரியர் உட்பட 11 பேர் … Read more

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு உதவ இந்தியா உறுதியுடன் உள்ளது – அதிபர் ரணிலுக்கு குடியரசு தலைவர் கடிதம்

புதுடெல்லி: இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு உதவ இந்தியா உறுதியுடன் உள்ளது என இலங்கை அதிபருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கூறியுள்ளார். நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக திரவுபதி முர்மு பதவியேற்றதற்கு, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க வாழ்த்து கடிதம் அனுப்பியிருந்தார். அதில் இரு நாடுகள் இடையேயான சுமுக உறவு மேலும் வலுப்பட உங்கள் தலைமை புதிய உத்வேகம் அளிக்கிறது. உங்களுடன் இணைந்து செயல்பட ஆவலுடன் இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். இதற்கு நன்றி தெரிவித்து … Read more

இலங்கையானது ஈராக்பார்லி., கட்டடத்தை உடைத்து போராட்டம்| Dinamalar

பாக்தாத்:ஈராக் பார்லி.,க்குள் இரண்டாவது முறையாக நேற்றும் புகுந்த ஷியா பிரிவு தலைவர் முக்தாதா அல் -சதர் ஆதரவாளர்கள் கட்டடத்தை உடைத்து சேதப்படுத்தினர். மேற்காசிய நாடான ஈராக்கில், 2021அக்டோபரில் பார்லி., தேர்தல் நடந்தது. அதில் எந்தக் கட்சிக்குமே பெரும்பான்மை கிடைக்காததால் அரசியல் குழப்பம் நிலவுகிறது. ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், இடைக்கால பிரதமராக முகமது அல் காதிமி பதவி வகித்து வருகிறார்.இதற்கிடையே, ஆட்சி அமைப்பது குறித்து நடந்த பேச்சில், முன்னாள் அமைச்சர் அல் – சூடானியை புதிய பிரதமராக … Read more

பஸ் மீது ரயில் மோதி 11 பேர் பலி| Dinamalar

டாக்கா:வங்க தேசத்தில் ஆளில்லா ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பஸ் மீது ரயில் மோதியதில் 11 பேர் உயிரிழந்தனர். வங்கதேசத்தின் சிட்டகாங் மாவட்டத்தில் ஆளில்லா ரயில்வே கேட் ஒன்று உள்ளது. இதை தலைநகர் டாக்காவுக்கு சென்ற மினி பஸ் கடக்க முயன்றபோது அதிவேகமாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று மோதியது. இதில் பயணித்த ஏழு மாணவர்கள் நான்கு ஆசிரியர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில் ‘விபத்தில் சிக்கிய பஸ் தண்டவாளத்தில் பல … Read more

அதிபர் மாளிகையில் சுருட்டிய ரூ.38 லட்சம் கோர்ட்டில் ஒப்படைப்பு| Dinamalar

கொழும்பு:இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே மாளிகையில் கைப்பற்றப்பட்ட 38 லட்சம் ரூபாய், நீதிமன்றத்தில் ஒப்படைக்கப் பட்டது. நம் அண்டை நாடான இலங்கை பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஆகியவற்றில் சிக்கி தவிக்கிறது.இவற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் கொதித்தெழுந்து, 9ம் தேதி அதிபர் மாளிகைக்குள் புகுந்தனர். அங்கிருந்த பொருட்களை சூறையாடினர்.போராட்டம் தீவிரமானதை அறிந்த கோத்தபய, அங்கிருந்து தப்பி, மாலத் தீவு சென்று பின் சிங்கப்பூர் சென்றார். இந்நிலையில் கோத்தபய மாளிகையில் கண்டெடுத்த, 38 லட்சம் … Read more

ஆடம்பர பொருள் இறக்குமதிதடையை நீக்கியது பாகிஸ்தான்| Dinamalar

இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில் ஆடம்பர பொருள் இறக்குமதிக்கு விதித்து இருந்த தடையை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.நம் அண்டை நாடான பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. கடந்த ஏப்ரலில் அந்நாட்டு பிரதமராக பொறுப்பேற்ற ஷெபாஸ் ஷெரீப் தலைமையில் கடந்த மே மாதம் அமைச்சரவை கூட்டம் நடந்தது. அதில், நாட்டின் பொருளாதாரத்தை சீரமைக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்துக்கு பின், அத்தியாவசியமற்ற மற்றும் ஆடம்பர பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டது. இதில் 860 பொருட்கள் இடம்பெற்று … Read more