குருத்வாரா மீது வெடிகுண்டு தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூல் நகரில், குருத்வாரா மீது நடந்த வெடிகுண்டு தாக்குதல்களில் 2 பேர் உயிரிழந்தனர். தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், கர்தே பர்வான் என்ற பகுதியில் சீக்கியர்களின் வழிபாட்டு தலம் என அறியப்படும் குருத்வாரா அமைந்துள்ளது. இதில் இன்று காலை திடீரென பயங்கர வெடிகுண்டு சத்தம் கேட்டது. குருத்வாராவில், சீக்கிய பக்தர்கள் பலர் சிக்கி கொண்டு உள்ளனர். இதனை தொடர்ந்து, பயங்கரவாதிகளுக்கும், தாலிபான் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்தது. இந்த … Read more

இலங்கையைப் போல் பாகிஸ்தானும் சீனாவின் கடன் வலையில் சிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல்.!

இலங்கையைப் போல் பாகிஸ்தானும் சீனாவின் கடன் வலையில் சிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லாகூர் பசுமை ரயில் திட்டத்திற்காக சீனாவிடம் இருந்து 55.6 மில்லியன் டாலர் கடனை பாகிஸ்தான் பெற்றுள்ளது. ஏற்கனவே கடும் பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான் சிக்கியுள்ள நிலையில், இந்த கடன் தொகையை 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் தவறாமல் திருப்பி செலுத்துமாறு சீனா நெருக்கடி கொடுத்து வருகிறது. பாகிஸ்தான் ஸ்டேட் வங்கியின் அன்னிய செலாவணி கையிருப்பு கடந்த மார்ச் மாத நிலவரப்படி, … Read more

பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் வான்வழி தாக்குதல்.!

பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் வான்வழி தாக்குதல்களை நடத்தினர். காசாவில் இருந்து வந்த ராக்கெட்டை வானிலேயே தாக்கி அழித்ததாக தெரிவித்துள்ள அவர்கள், அதற்கு பதிலடியாக காசாவின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். தெற்கில் உள்ள இஸ்ரேலிய நகரமான ஆஷ்லெலான் மற்றும் காசா முனையின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக சைரன்கள் ஒலித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதல்களால் அழிவுகள் ஏற்பட்டிருப்பதாக பாலஸ்தீனிய ஊடகம் தெரிவித்துள்ளது. Source link

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.1,910 கோடி அபராதம் விதித்தது மெக்சிகோ நீதிமன்றம்.!

அவதூறான வலைதள பதிவுக்காக கூகுள் நிறுவனத்துக்கு ஆயிரத்து 910 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கூகுள் நிறுவனம் அவதூறு செய்தி பரப்பியதாக வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கில், மெக்சிகோ சிட்டி நீதிமன்றம் இந்த தீர்ப்பு வழங்கியுள்ளது. கருத்துச் சுதந்திரம் மற்றும் பிற அடிப்படைக் கொள்கைகளை குறைத்து மதிப்பீடும் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.  Source link

உக்ரைனில் அமெரிக்க வீரர்களைச் சிறைபிடித்த ரஷ்ய ராணுவம்.!

உக்ரைனில் அமெரிக்க முன்னாள் ராணுவவீரர்கள் இருவர் சிறைபிடிக்கப்பட்டது குறித்த வீடியோவை ரஷ்ய அரசு ஊடகம் வெளியிட்டுள்ளது. உக்ரைனில் ரஷ்யப் படைகளை முறியடிக்க உக்ரைன் ராணுவத்துக்குத் துணையாக ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா ஆகியவற்றின் முன்னாள் ராணுவ வீரர்கள் பலர் போரிட்டு வருகின்றனர். அவர்களில் இருவரை ரஷ்யப் படையினர் சிறைபிடித்துள்ளனர். இந்நிலையில் ஜேம்ஸ் லாங்மேன் என்கிற மற்றொரு வீரரையும் காணவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.  Source link

பிராம்புரா அட்வென்ச்சர் பார்க்கில் தலைகீழாக கட்டப்பட்டுள்ள வீடு.. சுற்றுலாப்பயணிகளை வியப்பு..!

ருமேனியாவின் அவ்ரிக் நகரத்தில் உள்ள ஃபேகராஸ் மலையடிவாரத்தில் அமைந்துள்ள பிராம்புரா அட்வென்ச்சர் பார்க்கில் தலைகீழாக கட்டப்பட்டுள்ள வீடு சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. 7 டிகிரி சாய்வாக கட்டப்பட்டுள்ள அந்த வீட்டில் சிறிய சிறிய பொருட்கள் கூட தலைகீழாகவே வைக்கப்பட்டுள்ளன. பார்க் வளாகத்திற்குள் உணவகம், மதுபான பார், சிறிய உயிரியல்பூங்கா மற்றும் குழந்தைகளை மகிழ்விக்கும் பல்வேறு சிறப்பம்சங்களும் உள்ளன.  Source link

ரஷ்ய வீர்களுக்கு உக்ரைன் விவசாயிகள் பரிசு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கீவ்: ரஷ்யாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தங்கள் வயலில் விளைந்த செர்ரிப் பழங்களை விவசாயிகள் விஷமாக்கினர். அதனை சாப்பிட்ட ரஷ்ய வீரர்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது தங்களது பரிசு என விவசாயிகள் கூறுகின்றனர். உக்ரைன் மீது கடந்த 3 மாதங்களாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இதனையடுத்து ரஷ்யா மீது உலக நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன. இருப்பினும் இதனை கண்டு கொள்ளாத ரஷ்யா சமீபத்தில் டான்பாஸ் நகரை … Read more

புயல் மற்றும் மோசமான வானிலையால் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமான சேவை நிறுத்தம்.. சுற்றுலா பயணிகள் வேதனை..!

அமெரிக்காவில் புயல் மற்றும் மோசமான வானிலை காரணமாக 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிப்புக்குள்ளாகின. கோடைகால விடுமுறை மற்றும் நினைவு தின விடுமுறைகளை கொண்டாட காத்திருந்த மக்கள் வேதனைக்குள்ளாகினர்.  மிஸ்ஸெசசெபி, விர்ஜிணா, நியூ யார்க், வாஷிங்டன் உள்ளிட்ட மாகாணத்தில் வீசிய புயல் காற்று மற்றும் மோசமான வானிலையால் ஆயிரத்து 700-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. மேலும் 8 ஆயிரத்து 800 விமானங்கள் தாமதாக இயக்கப்பட்டன. Source link

ஜூலியன் அசாஞ்சேவைநாடு கடத்த அனுமதி| Dinamalar

லண்டன்:அமெரிக்க அரசின் ரகசியங்களை வெளியிட்ட வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜூலியன் அசாஞ்சேவை நாடு கடத்த, பிரிட்டன் அரசு அனுமதி அளித்துள்ளது.ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்தவர் ஜூலியன் அசாஞ்சே, 50. பத்திரிகையாளரும், சமூக ஆர்வலருமான இவர், ‘விக்கிலீக்ஸ்’ என்ற இணையதளம் வாயிலாக உலகின் பல்வேறு நாட்டு அரசுகளின் ஊழல்களை வெளியிட்டார். இதில், அமெரிக்க ராணுவ ரகசியங்களை வெளியிட்டதாக அசாஞ்சே மீது வழக்கு தொடுக்கப்பட்டு, 2019ல் ஐரோப்பிய நாடான பிரிட்டனில் உள்ள பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், அமெரிக்க அரசின் கோரிக்கையை … Read more

இலங்கையை போலவே சீனாவின் கடன் வலையில் சிக்கியுள்ள பாகிஸ்தான்

சீனாவின் கடன் வலைக்குள் சிக்கி சின்னா பின்னமாகியுள்ள இலங்கையின் பாதையில் பாகிஸ்தானும் செல்கிறது. லாகூர் ஆரஞ்ச் லைன் திட்டத்திற்கு வழங்கியுள்ள 55.6 மில்லியன் அமெரிக்க டாலர்களை, 2023  நவம்பர் மாதத்திற்குள் திருப்பிச் செலுத்துமாறு சீனா சமீபத்தில் கோரியது பாகிஸ்தானிற்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. பொருளாதார நிலை ஏற்கனவே மிக மோசமாக உள்ளபாகிஸ்தான் செய்வதறியாமல் திகைத்து நிற்கிறது. இதற்கிடையில், மார்ச் மாத இறுதியில், வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தியதன் காரணமாக, ஸ்டேட் பாங்க் ஆஃப் பாகிஸ்தான் வைத்திருக்கும் அந்நியச் … Read more