ஆப்கனில் குருத்வாராவில் பயங்கரவாதிகள் தாக்குதல்| Dinamalar
காபூல்: ஆப்கானிஸ்தானின் காபூலில் உள்ள கர்தே பர்வான் குருத்வாரா அருகே குண்டுவெடித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், குருத்வாராவில் சிக்கியுள்ள பக்தர்கள், வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். குருத்வாராவின் வாசல் அருகே நடந்த இரண்டு குண்டுகள் வெடித்ததில் ஆப்கானை சேர்ந்த 2 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிகிறது. குண்டுவெடிப்பை தொடர்ந்து, அருகில் இருந்த கடைகள் தீப்பிடித்து எரிந்தன.குருத்வாராவிற்குள்ளும் தீப்பிடித்து எரிவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. குருத்வாராவிற்குள் இரண்டு பயங்கரவாதிகள் உள்ளே இருந்ததாகவும் அவர்களை தலிபான் படையினர் பிடித்து வைத்துள்ளதாகவும் … Read more