ஆப்கானிஸ்தான் மாணவர்கள் இந்தியாவில் படிப்பை தொடர விசா வழங்குமாறு தலிபான் அரசு கோரிக்கை..!

ஆப்கானிஸ்தான் மாணவர்கள் இந்தியாவில் தங்கள் படிப்பை மீண்டும் தொடங்க விசா வழங்குமாறு இந்தியாவிடம் தலிபான் அரசு கோரிக்கை விடுத்துள்ளது. கொரோனா தொற்றுக்கு முன்பு 13 ஆயிரம் மாணவர்கள் இந்தியாவில் படித்து வந்ததாக தெரிவித்துள்ள தாலிபான் அரசு, மாணவர்களின் விசா தொடர்பாக காபூலில் உள்ள இந்திய தூதரகத்திடம் எடுத்துச் செல்லப்படும் என்றும் தெரிவித்துள்ளது.   Source link

அரஃபா உரை: மெக்காவில் இனி தமிழிலும் ஒலிக்கும்

மெக்கா: சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவில் இனி தமிழிலும் அரஃபா உரை வாசிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மெக்காவின் தலைவர் அப்துல்ரஹ்மான் அல்-சுதைஸ் கூறும்போது, “மதினா, மெக்காவின் வளர்ச்சிக்கும், சேவைக்கும் சவுதி அரசு அனைத்து ஆதரவையும் வழங்கி வருகிறது. அரஃபா உரை மொழிபெயர்பு இந்த வருடம் ஐந்தாவது வருடத்தில் நுழைந்துள்ள நிலையில், இத்திட்டம் 14 மொழிகளை உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஆங்கிலம், பிரெஞ்சு, மலாய், உருது, பெர்சியன், சீன மொழி, துருக்கிய மொழி, ஸ்பெனிஷ் போன்ற மொழிகளில் … Read more

நெருங்கும் பக்ரீத் பண்டிகை – வறுமை அதிகரித்ததால் கால்நடைகளை வாங்க முடியாமல் தவிக்கும் மக்கள்..!

ஆப்கானிஸ்தானில் வறுமை அதிகரித்துள்ளதால் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கால்நடைகளை வாங்க முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். இஸ்லாமியர்களின் இரண்டு முக்கிய பண்டிகைகளுள் ஒன்றான பக்ரீத் பண்டிகை கொண்டாட்டங்கள் ஆப்கனில் வருகின்ற 9ம் தேதி தொடங்குகிறது. வழக்கமாக பண்டிகையையொட்டி கால்நடை விற்பனை அதிகரிக்கும் நிலையில், தற்போது மக்கள் பலர் வறுமையால் வாடுவதால் சந்தைகளில் கால்நடைகள் விற்பனை குறைந்துள்ளதாக வியாபாரிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர். Source link

சுதந்திர தின அணிவகுப்பில் துப்பாக்கிச்சூடு – 22 வயது இளைஞர் கைது!

அமெரிக்காவில் சுதந்திர தின அணிவகுப்பில் துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபரை போலீசார் கைது செய்தனர். அமெரிக்காவின் 246வது சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது. சுதந்திர தினத்தையொட்டி அந்நாட்டில் பல்வேறு மாகாணங்களில் சுதந்திர தின அணிவகுப்புகள், கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிலையில், அந்நாட்டின் இல்லினாய்ஸ் மாகாணத்தின் சிகோகோ நகரின் புறநகர் பகுதியில் உள்ள ஹைலண்ட் பூங்காவில் சுதந்திர தின அணிவகுப்பு , அந்நாட்டு நேரப்படி காலை 10 மணிக்கு தொடங்கியது. அப்போது, சுதந்திர தின அணிவகுப்பில் கலந்து கொண்டிருந்த … Read more

சுதந்திர தினப் பேரணியில் துப்பாக்கிச்சூடு – 6 பேர் பலி

அமெரிக்க சுதந்திர தினத்தை ஒட்டி நேற்று சிகாகோ நகரில் பேரணி நடைபெற்றது. அப்போது அப்பகுதியில் உள்ள கட்டடத்தில் இருந்து கூட்டத்தினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் 6 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து, தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் காரில் தப்பி ஓடிய நிலையில், போலீசார் அவரை விரட்டிப் பிடித்தனர். அவரிடமிருந்து உயர் ரக துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. கைதான நபரின் பெயர் ராபர்ட் க்ரிமோ ஆகும். அவருக்கு 22 வயதே ஆகிறது. … Read more

அமெரிக்க சுதந்திர தினத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு.. அலறியடித்து மக்கள் அச்சத்தில் ஓடும் காட்சி இணையத்தில் வைரல்..!

அமெரிக்க சுதந்திரதின கொண்டாட்டத்தின் போது, இல்லினாய்ஸ் மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்த நிலையில், துப்பாகிச்சூட்டின் போது மக்கள் அச்சத்தில் ஓடும் காட்சிகள் வெளியாகியுள்ளது. குழந்தைகளுடன் இருந்த பெண்கள் உள்பட அப்பகுதியில் குழுமியிருந்த அனைவரும் துப்பாக்கிசூடு சத்தம் கேட்டவுடன் அலறியடித்து ஓடினர். 

விம்பிள்டன் டென்னிஸ் : ரஃபேல் நடால் கால் இறுதிக்கு முன்னேற்றம்..!

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் முன்னணி வீரர் ரஃபேல் நடால், கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். அவர், நான்காவது சுற்று ஆட்டத்தில், நெதர்லாந்து வீரர் பொட்டிக்கை (Botic) 6க்கு4, 6க்கு2 7க்கு6 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தினார். ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன் பட்டங்களை வென்றுள்ள நடால், விம்பிள்டன் பட்டத்தையும் வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மகளிர் பிரிவில், ரூமேனியாவின் சிமோனா ஹாலேப், ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசாவை 6க்கு1 6க்கு2 என்ற நேர் செட் கணக்கில் … Read more

அமெரிக்க துப்பாக்கிச் சூடு | அதிநவீன துப்பாக்கியுடன் 22 வயது இளைஞர் கைது; முற்றுப்புள்ளி வைப்பாரா பைடன்?

சிகாகோ: அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடந்த சுதந்திர தின பேரணியில் துப்பாக்கிச் சூடு நடத்தி 6 பேர் உயிரைப் பறித்த சந்தேக நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். 22 வயதே நிரம்பிய அந்த இளைஞரின் பெயர் ராபர்ட் இ க்ரைமோ என தெரியவந்துள்ளது. சிதறி ஓடிய பொதுமக்கள்: அமெரிக்க சுதந்திர தினத்தை ஒட்டி நடந்த பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கண்கவர் அணிவகுப்பு, குழந்தைகளின் கொண்டாட்டம், இசை நிகழ்ச்சிகள் என அந்த இடமே மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்திருந்தது. … Read more

குளோரின் வாயு கசிந்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 300-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி.!

ஈராக்கில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து குளோரின் வாயு கசிந்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 300-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சுஹர் மாவட்டத்தில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து திடீரென குளோரின் வாயு கசிவு ஏற்பட்டது. தொடர்ந்து, சுத்திகரிப்பு நிலையத்தில் பணியில் இருந்தவர்கள், அக்கம் பக்கத்தில் வசித்தவர்கள் என 300-க்கும் அதிகமானோருக்கு கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். Source link

அமெரிக்காவில் சுதந்திர தின அணிவகுப்பில் திடீர் துப்பாக்கிச் சூடு.. அலறிய மக்கள்.. 6 பேர் சுட்டுக் கொலை!

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் ஜூலை 4 சுதந்திர தின அணிவகுப்பில் துப்பாக்கிச் சூடு நடத்தி 6 பேர் உயிரிழப்புக்கு காரணமான நபரை போலீசார் கைது செய்தனர். சிகாகோ நகரின் ஹைலேண்ட் பூங்காவில் சுதந்திர தின அணிவகுப்பில் ஈடுபட்டவர்களை நோக்கி மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பினான். 6 பேர் கொல்லப்பட்ட நிலையில், 40-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடையதாக ராபர்ட் கிரிமோ என்பவனை கைது செய்து போலீசார் விசாரித்து … Read more