இலங்கை புதிய பிரதமராக தினேஷ் குணவர்தன நியமனம்| Dinamalar
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொழும்பு: இலங்கையின் புதிய பிரதமராக தினேஷ் குணவர்தனவை நியமனம் செய்து அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே அறிவித்துள்ளார். நம் அண்டை நாடான இலங்கை, கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. அன்னியச் செலாவணி கையிருப்பு இல்லாததால், பெட்ரோல், டீசல் வாங்க முடியாமல் இலங்கை திண்டாடுகிறது. இதனால், மின் உற்பத்தி தடை, விலைவாசி உயர்வு என, மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்தப் பிரச்னைகள் தீவிரமடைந்ததால், அரசுக்கு எதிராக மக்கள் கொந்தளித்தனர். … Read more