வெள்ளத்தில் மிதக்கும் வீடுகள் ரெடி! வைரலாகும் ஜப்பானின் புதிய டெக்னாலஜி

கிழக்கில் கடல் சூழ அமைத்துள்ள ஜப்பானில் வருடா வருடம் வெள்ளம், சுனாமி, நில நடுக்கம், கடல் கொந்தளிப்பு என பல்வேறு இயற்கை சீற்றங்கள் நிகழ்வதும் அதிலிருந்து மக்கள் விரைந்து தேறுவதுமே வழக்கமாக அமைந்துவிட்டது. சொல்லப்போனால், அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருப்பினும் அங்கு மக்களின் வாழ்வாதாரம் ஒவ்வொரு வருடமும் முதலலில் இருந்து தொடங்குவதுபோல் தொடங்கவேண்டிய நிலை பெரும்பாலான மக்களுக்கு ஏற்பட்டு விடுகிறது. பலர் வீடுகளை இழந்து, வீட்டிலுள்ள பொருட்கள் வெள்ளத்தில் அடித்துச்சென்று பரிதாப நிலைக்கு செல்கின்றனர். … Read more

வேற்றுகிரக வாசிகள் குறித்த நாசாவின் ஆய்வு; செவ்வாய் கிரகத்தில் ஆதாரம் கிடைத்ததா

செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலம் மற்றும் நிலப்பரப்பைப் ஆராய்ச்சி செய்வதில் விஞ்ஞானிகள் எப்போதுமே ஆர்வத்துடன் ஆராய்ச்சிகளை  மேற்கொண்டு வருகின்றனர். மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்களை கண்டுபிடிக்கும் பணியை நாசா மேற்கொண்டு வரும் நிலையில்,  நாசா நடத்திய புதிய ஆய்வக சோதனையில், வேற்று கிரகவாசிகளின்  தடயங்களைக் கண்டறிய, ஒரு புதிய உத்தியைக் கொண்டு வர வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் உள்ளது.  செவ்வாய் கிரகத்தில் வேற்றுகிரக வாசிகளின் இருப்பை கண்டறியும் பணியை மேற்கொண்டு … Read more

தன்னை வசைபாடிய பார்வையாளரை நோக்கி துப்பிய ஆஸ்திரேலிய வீரர்.. அபராதம் விதிப்பது குறித்து நிர்வாகம் ஆலோசனை..!

பார்வையாளரை நோக்கி துப்பிய, ஆஸ்திரேலிய வீரருக்கு அபராதம் விதிப்பது குறித்து, விம்பிள்டன் நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. விம்பிள்டன் டென்னிஸ் தொடரில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் பங்கேற்றுள்ள ஆஸ்திரேலிய வீரர் நிக் க்ரியோஸ் முதல் சுற்று ஆட்டத்தின் போது, தன்னை வசைபாடிய பார்வையாளரை நோக்கி துப்பினார். இதேபோல, Line Umpiresஐ 90 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனவும் திட்டினார். இந்த தவறுகளை எல்லாம் நிகி ஒத்துக்கொண்டுள்ள நிலையில் அவருக்கு அபராதம் விதிப்பது குறித்து விம்பிள்டன் நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. … Read more

பிலிப்பைன்ஸ் அதிபராக முன்னாள் சர்வாதிகாரி மகன் பதவியேற்பு

மணிலா: பிலிப்பைன்ஸின் முன்னாள் சர்வாதிகாரியான பெர்டினாண்ட் மார்க்கோஸின் மகனான பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் பிலிப்பைன்ஸ்ஸின் அதிபராக பதவியேற்றார். பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் ரோட்ரிகோ டுட்ரேட் சர்ச்சைகளின் நாயகர். இவர் பிலிப்பைன்சில் யாரேனும் போதைப் பொருட்களைப் பயன்படுத்தினாலும்,விற்றாலும் அவர்களை சுட்டுக் கொல்ல ஆணை பிறப்பித்தவர். சட்டம் என்ன சொல்கிறது என்பதைப் பற்றி டுட்ரேட் அச்சம் கொண்டது இல்லை. இதன் காரணமாக உலகம் முழுவதிலுள்ள மனித உரிமை அமைப்புகள் இவருக்கு வலுவான் கண்டனங்கள் தெரிவித்து வந்தன. இந்த நிலையில் பிலிப்பைன்ஸ் … Read more

உலகில் 110 நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிப்பு

உலகில் 110 நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. கொரோனா தொற்று முடிவடையவில்லை என்று தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதனோம் கேப்ரியாசெஸ், கொரோனா தொற்று உருமாறி வருவதாக தெரிவித்தார். வேகமாக பரவும் ஒமிக்ரான் துணை வகைகளான BA.4 மற்றும் BA.5 ஆகியவை அமெரிக்காவில் பதிவாகியுள்ள கொரோனா தொற்றில் 50 சதவீதம் இருப்பதாக கணிப்பிடப்பட்டுள்ளது.  Source link

கோடை கால முகாமில் திடீர் தீ விபத்து… நூற்றாண்டு கால பழமையான கட்டடம் எரிந்து சேதம்

அமெரிக்கா மேரிலேண்ட் மாகாணத்தில் கோடை கால முகாமில் பற்றிய தீ விண்ணை முட்டும் அளவுக்கு கரும் புகையை கக்கியது. 102 ஆண்டுகள் பழமையான கட்டடத்தின் உணவு பரிமாறும் அறையில் முதலில் தீப் பற்றியதாக கூறப்படுகிறது. தீ மெல்ல பரவி கட்டடம் முழுவதும் பரவி கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது. சம்பவ நேரத்தில் முகாமில் குழந்தைகள் உள்ளிட்ட யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. நூறு வீரர்கள் தீயணைப்பு பணியில் ஈடுபட்டனர்.  Source link

இலங்கையில் கடுமையான தட்டுப்பாடு : எரிபொருள் வழங்க வலியுறுத்தி மருத்துவர்கள் போராட்டம்..!

தங்களுக்கும் எரிபொருள் வழங்க வலியுறுத்தி இலங்கையில் மருத்துவத்துறை ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். கடுமையான தட்டுப்பாடு உள்ளதால், இலங்கையில் அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டுமே எரிபொருள் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் தங்களுக்கும் எரிபொருள் வழங்க வலியுறுத்தி மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவத்துறை ஊழியர்கள் தலைநகர் கொழும்புவில் போராட்டம் நடத்தினர். Source link

சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக வழக்கு.. பிரபல பாப் பாடகர் கெல்லிக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை..!

பாலியல் குற்ற வழக்கில், அமெரிக்காவைச் சேர்ந்த பாப் பாடகர் கெல்லிக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. “I Believe I Can Fly” என்பது உள்ளிட்ட பிரபல பாடல்களை பாடிய பாப் பாடகர் ஆர்.கெல்லி, பல பெண்களையும், சிறுமிகளையும் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கைது செய்யப்பட்டார். 9 மாதங்களுக்கு முன்பு அவர் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. Source link

கார், பைக்கை ஒன்றிணைத்து உருவான ஹைபிரிட் மின்சார வாகனம்

இங்கிலாந்தில் கார் மற்றும் இரு சக்கர வாகனத்தை மாடலாக கொண்டு உருவாக்கப்பட்ட ஹைபிரிட் மின்சார வாகனம் பொது மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. நார்தன் லைட் மோட்டார்ஸ் தொடக்க நிலை நிறுவனம் உருவாக்கி உள்ள இலகு ரக வாகனம், ஒருவர் சொகுசாக பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சாலையில் வாகனம் சோதனை ஓட்டம் நடைபெற்ற நிலையில், கூடுதல் அம்சங்களுடன் வாகனம் விரைவில் வெளிவர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   Source link

சர்வதேச அலைச் சறுக்கு தொடரில் பட்டம் வென்ற பிரேசில் வீரர் மற்றும் ஒலிம்பிக் சாம்பியனான ஹவாய் வீராங்கனை.!

சர்வதேச அலைச் சறுக்கு தொடரின் ரியோ ப்ரோ சுற்றில் பிரேசில் வீரர் மற்றும் ஒலிம்பிக் சாம்பியனான ஹவாய் வீராங்கனை பட்டம் வென்றனர். பிரேசிலில் உள்ள Saquarema கடற்பகுதியில் நடந்த சர்வதேச அலைச் சறுக்கு தொடரின் 8-வது சுற்று ஆட்டத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். ஆடவர் பிரிவில் பிரேசில் வீரர் பிலிபே டொலிடோ, பட்டியலில் 10 புள்ளிகள் பெற்று மற்ற வீரர்களை பின்னுக்குத் தள்ளி 4-வது முறையாக பட்டம் வென்றார். மகளிரில் உலக … Read more