எலான் மஸ்க் மீது ட்விட்டர் நிறுவனம் வழக்கு
ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிய எலான் மஸ்க் மீது அந்நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. 44 பில்லியன் டாலர் கொடுத்து ட்விட்டரை வாங்க ஒப்புக் கொண்ட எலான் மஸ்க், ஒப்பந்தத்தின் படி போலி கணக்குகள் குறித்து தரவுகளை நிறுவனம் வழங்கவில்லை எனக் கூறி ட்விட்டரை வாங்கும் முடிவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில் ஒப்பந்தத்தில் அனுமதித்த தொகைக்கு ட்விட்டரை வாங்க எலான் மஸ்கிற்கு உத்தரவிடுமாறு அந்நிறுவனம் அமெரிக்காவின் டெலவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. Source link