சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள மேர்காங் நகரத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள தன்னாட்சி பெற்ற அபா திபெத்தியன் – கியாங் பிராந்தியத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மேர்காங் நகரத்தில் ரிக்டர் அளவில் 6ஆக பதிவாகிய நிலநடுக்கம் 13 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நகரத்திற்கு தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினரோடு மோப்ப நாய்களும் அனுப்பி வைக்கப்பட்டு சேதங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. Source link