6 மாதங்களுக்குள் அனைவருக்கும் கிரீன் கார்டு; அமெரிக்க அதிபர் ஆலோசனை குழு பரிந்துரை| Dinamalar

வாஷிங்டன் : ‘அமெரிக்காவில் நிரந்தரமாக வசிப்பதற்கான, ‘கிரீன் கார்டு’ கோரி தாக்கல் செய்யப்படும் விண்ணப்பங்கள் மீது, ஆறு மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும்’ என, அமெரிக்க அதிபருக்கான ஆலோசனை குழு பரிந்துரை செய்துள்ளது. இது, அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் வேலை பார்க்கும் வெளிநாட்டவர்களுக்கு, பல்வேறு வகை விசாக்கள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக, ‘எச்1பி விசா’ அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. கம்ப்யூட்டர் மென்பொருள் இன்ஜினியர்கள் உட்பட, தொழில்முறை பணிகளில் அதிக அளவில் இது வழங்கப்படுகிறது. இதை … Read more

கோதுமை ஏற்றுமதி தடையை இந்தியா மறுபரிசீலனை செய்ய வேண்டும் – அமெரிக்கா

ஏற்றுமதிக்கு தடை கோதுமை ஏற்றுமதி செய்கிற நாடுகளில் இந்தியாவும் ஒன்று. கடந்த 2021-22 நிதி ஆண்டில் நாட்டில் 70 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டது. நடப்பு ஆண்டில் இந்தியா 1 கோடி டன் கோதுமையை ஏற்றுமதி செய்ய எண்ணி இலக்கு வைத்து இருந்தது. ஆனால் சற்றும் எதிர்பாராத வகையில் இந்தியாவில் கோதுமை ஏற்றுமதிக்கு கடந்த 13-ந் தேதி தடை விதித்து வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் உத்தரவிட்டது. உள்நாட்டில் விலை ஏற்றத்தை தடுக்கிற நோக்கத்தில் பிறப்பிக்கப்பட்ட இந்த … Read more

ராணுவ புரட்சி முறியடிப்பு; மாலி அரசு அறிவிப்பு| Dinamalar

பமாகோ : மேற்கத்திய நாட்டின் பின்னணியில் உருவான ராணுவ புரட்சியை, வெற்றிகரமாக முறியடித்துள்ளதாக, மாலி அரசு அறிவித்துள்ளது.மேற்கு ஆப்ரிக்காவைச் சேர்ந்த மாலியில், ராணுவ தளபதி அசிமி கோய்டா, 2020 மற்றும் 2021ல் புரட்சி நடத்தி ஆட்சியை கைப்பற்றினார். இதற்கு, ஐேராப்பிய நாடான பிரான்ஸ் உள்ளிட்ட நாடு கள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதைத் தொடர்ந்து, மாலி – பிரான்ஸ் இடையிலான உறவில் விரிசல் அதிகரித்தது. மாலியில் தேர்தல் நடத்த பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் வற்புறுத்தி வந்தன. இதையடுத்து, … Read more

"பின்லாந்து, ஸ்வீடன் நாடுகளை நம்ப தயாராக இல்லை" – துருக்கி அதிபர் எர்டோகன்

அங்காரா, உக்ரைன் மீதான ரஷியயா படையெடுப்பை தொடர்ந்து, ரஷியாவின் அண்டை நார்டிக் நாடுகளான பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நோட்டோவில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளன. இருநாடுகளும் விரைவில் இணைவதற்கான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளன.  ரஷிய படையெடுப்பில் இருந்து பாதுகாப்பு வேண்டி தாங்கள் நேட்டோவில் இணையவுள்ளதாக இரு நாடுகளும் அறிவித்தன. ஆனால் நோட்டோ ராணுவ கூட்டமைப்பில் இணைய வேண்டுமென்றால் அதன் தற்போதைய உறுப்பினர்களான 30 நாடுகளின் ஒப்புதல் தேவைப்படுகிறது.  இந்தநிலையில், நோட்டோ ராணுவ கூட்டமைப்பில் இணைய விரும்பும் பின்லாந்து மற்றும் ஸ்வீடனின் … Read more

ஜமைக்காவில் அம்பேத்கர் சதுக்கம்: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார் 

புதுடெல்லி: அரசு முறைப் பயணமாக ஜமைக்காவுக்கு சென்றுள்ள இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், அங்கு இந்தியர்கள் அதிகம் வாழும் பகுதியில் உள்ள அம்பேத்கர் சதுக்கத்தைத் திறந்து வைத்தார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அரசு முறைப் பயணமாக மேற்கிந்தியத் தீவுகள் நாடான ஜமைக்காவுக்கு மே 15-ம் தேதி மாலை சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து திங்கள்கிழமை கிங்ஸ்டனில் உள்ள தேசிய மாவீரர் பூங்காவுக்கு சென்ற … Read more

கறுப்பின மாணவர்களின் உடைமைகளில் சிறுநீர் கழித்த வெள்ளையின மாணவன்; இனவெறி கொடூரம்!

கேப் டவுன் , தென்னாப்பிரிக்காவில் கறுப்பின மாணவர்களின் உடைமைகளில் வெள்ளை இன மாணவர் சிறுநீர் கழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேப் டவுன் அருகே உள்ள ஸ்டெல்லன்போஷ் பல்கலைக்கழகத்தின் குடியிருப்பில் உள்ள கறுப்பின மாணவர் அறைக்குள் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, ஒரு வெள்ளையின மாணவர் நுழைந்ததாக கூறப்படுகிறது. அந்த மாணவன் கறுப்பின மாணவர்களின் உடைமைகளில் சிறுநீர் கழித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவின்  புகழ்பெற்ற உயர்மட்ட பல்கலைக்கழக மாணவர் ஒருவர், தன்னுடன் பயின்று … Read more

கோதுமை ஏற்றுமதி தடையை நீக்க இந்தியாவுக்கு அமெரிக்கா கோரிக்கை| Dinamalar

நியூயார்க் : உலக மக்களின் நலன் கருதி, கோதுமை ஏற்றுமதிக்கு விதித்துள்ள தடையை நீக்கும்படி, இந்தியாவிடம் அமெரிக்கா கோரிக்கை வைத்துள்ளது. உலகில் கோதுமை உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்த ஓராண்டில், கோதுமை விலை, 14 – 20 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்தாண்டு வட மாநிலங்களில் கடுமையான வெப்பக் காற்று வீசுவதால், கோதுமை உற்பத்தி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், விலை உயர்வதை தடுக்கும் நோக்கில், சமீபத்தில் கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது. … Read more

பிரான்சில் 30 ஆண்டுகளுக்கு பிறகு பெண் பிரதமர் நியமனம்

அதிபர் தேர்தலில் வெற்றி பிரான்ஸ் நாட்டில் கடந்த மாதம் அதிபர் தேர்தல் நடந்தது. இதில் தொடர்ந்து 2-வது முறையாக அதிபர் பதவிக்கு மேக்ரான் போட்டியிட்டார். இந்த தேர்தலில் மேக்ரானுக்கும், தீவிர வலதுசாரி வேட்பாளர் மரைன் லூ பென்னுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவிய சூழலில் மேக்ரான் அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். அதை தொடர்ந்து இந்த மாத தொடக்கத்தில் தலைநகர் பிரான்சில் நடைபெற்ற விழாவில் மேக்ரான் பிரான்ஸ் அதிபராக 2-வது முறையாக பதவியேற்றார். பிரான்சில் கடந்த … Read more

இலங்கை எதிர்க்கட்சிகளுக்கு பின்னடைவு; பார்லி.,யில் நடந்த ஓட்டெடுப்பு தோல்வி| Dinamalar

கொழும்பு : இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை பதவி நீக்கம் செய்யக் கோரும் தீர்மானத்தின் மீது விவாதம் நடத்த, பார்லிமென்ட் நேற்று அனுமதிக்கவில்லை.நம் அண்டை நாடான இலங்கையின் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்ததை அடுத்து, இடைக்கால பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரனில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றார். மகிந்தவின் சகோதரரும், அதிபருமான கோத்தபய ராஜபக்சே பதவி விலகக் கோரி பொது மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிபரை பதவி நீக்கம் செய்வது தொடர்பான … Read more