புச்சா படுகொலை குறித்து விசாரணை நடத்தவேண்டும் – ஐ.நா.பொது செயலாளர் வலியுறுத்தல்

நியூயார்க்: உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 40-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. ஒரு மாதத்தைக் கடந்தும் ரஷிய படைகளின் தாக்குதல் நீடித்து வரும் நிலையில் உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்றவில்லை. குறிப்பாக தலைநகர் கீவ், கார்கிவ் ஆகிய நகரங்களைக் கைப்பற்ற ரஷிய ராணுவம் கடுமையாக தாக்குதல்களை நடத்தியது. ரஷிய தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது.  இதற்கிடையே, உக்ரைனின் புச்சா நகரில் உள்ள ஒரு வெகுஜன புதைகுழியில் சுமார் 300 பேர் புதைக்கப்பட்டதாகவும், அந்த … Read more

உக்ரைன் துறைமுக நகரில் பரபரப்பு| Dinamalar

லீவ்-உக்ரைனின் துறைமுக நகரமான ஒடேசாவில், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் எரிபொருள் கிடங்கு மீது, ரஷ்ய படையினர் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, கடந்த பிப்ரவரி, 24ம் தேதி முதல் ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு உக்ரைன் ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் கருங்கடலுக்கு அருகே அமைந்துள்ள, உக்ரைனின் துறைமுக நகரமான ஒடேசாவில், ரஷ்ய படையினர் நேற்று அதிகாலை தாக்குதல் நடத்தினர். … Read more

இலங்கையில் அவசரநிலையை எதிர்த்து போராட்டம்: சமூக ஊடகங்கள் முடக்கம்

கொழும்பு: இலங்கையில் அவசரநிலை மற்றும் ஊரடங்கு உத்தரவைக் கண்டித்து கொழும்பில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நேற்று ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். இலங்கை அந்நியச் செலாவணி தட்டுப்பாடு மற்றும் கடும் பொருளாதார சிக்கலில் சிக்கித் தவிக்கிறது. உணவு, எரிபொருளுக்கு மக்கள் திண்டாடுகின்றனர். மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது. இதைக் கண்டித்து அதிபர் கோத்தபய ராஜபக்ச வீட்டை பொதுமக்கள் முற்றுகையிட்டு நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீஸ் வாகனங்கள் கொளுத்தப்பட்டன. … Read more

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அதிகாலையில் பொதுமக்கள் மீது மர்மநபர் துப்பாக்கிச் சூடு.. 6 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர், 10 பேர் காயமடைந்துள்ளனர். கலிபோர்னியாவின் சாக்ரமெண்டோ நகரத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அப்போது பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவன் குறித்து எந்தத் தகவலும் வெளியாகாத நிலையில், அவனைத் தேடி வருவதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் குறித்த தகவலை போலீசார் வெளியிடவில்லை. குற்றவாளி குறித்து தகவல் தெரிந்தால் தெரியப்படுத்துமாறு போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர். Source link

இலங்கையில் 36 மணிநேர ஊரடங்கு முடிவுக்கு வந்தது

கொழும்பு: இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் பொதுமக்கள் கடும் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உணவு பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தினமும் 13 மணி நேரம் வரையில் மின்வெட்டு அமலில் உள்ளதால் பொதுமக்களின் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடிகளுக்கு அதிபர் அதிபர் கோத்தபய ராஜபக்சே எடுத்த முடிவுகளே காரணம் எனக்கூறி எதிர்க்கட்சியினரும், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோத்தபய பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது. … Read more

சீனாவில் அதிகரிக்கும் கொரோனா: ஊரடங்கிற்கு பொதுமக்கள் எதிர்ப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பீஜிங் : சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்கு கடும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதற்கு, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். நம் அண்டை நாடான சீனாவில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஷாங்காய் நகரில் கடந்த 24 மணி நேரத்தில் 438 பேரிடம் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 7,788 பேர் அறிகுறிகள் இல்லாமல் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது, அதற்கு முந்தைய … Read more

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் உத்தரவு: புதிய பிரதமரை எதிர்க்கட்சிகள் அறிவித்ததால் அரசியலில் பெரும் குழப்பம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நாடாளுமன்ற துணை சபாநாயகர் நிராகரித்தார். இதையடுத்து, இம்ரான் கான் பரிந்துரையை ஏற்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் உத்தரவிட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் இணைந்து புதிய பிரதமரை அறிவித்துள்ளதால் அங்கு பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் பணவீக்கம் அதிகரித்து, பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக எண்ணெய், அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. விலைவாசி உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். … Read more

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று அமைச்சரவையில் உள்ள 26 அமைச்சர்களும் பதவி விலகல்.!

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று அமைச்சரவையில் உள்ள 26 அமைச்சர்களும் பதவி விலகினர். பிரதமர் மஹிந்த ராஜபக்சே தொடர்ந்து பதவியில் நீடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   கொரோனாவால் சுற்றுலாத்துறை முடக்கம், அந்நியச் செலாவணி வீழ்ச்சி, பண வீக்கம், அத்தியாவசிய பொருட்கள் இமாலய விலையேற்றம், உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு, மின் தடை, கடும் பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் இலங்கை கடும் நிதி பற்றாக்குறையில் சிக்கித் தவிக்கிறது. அதிபர் கோத்தபயவுக்கு எதிராக போர்க் கொடி தூக்கியதால் போராட்டத்தை கட்டுப்படுத்த … Read more

இன்று ஏப்.,04:சர்வதேச கேரட் தினம்| Dinamalar

கடந்த 2003 ஆம் ஆண்டு உலகெங்கிலும் கேரட் மற்றும் அதன் ஆரோக்கிய நன்மைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த உருவாக்கப்பட்டது.உலகம் முழுவதும் உள்ள கேரட் ஆர்வலர்களின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 4 ஆம் தேதி, சர்வதேச கேரட் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஏப்ரல் 4, 2012 அன்று பிரான்ஸ், இத்தாலி, ஸ்வீடன், ரஷ்யா, ஆஸ்திரேலியா, யுனைடெட் கிங்டம் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் கொண்டாட்டங்கள் அறிவிக்கப்பட்டதன் மூலம் இந்த நாள் மிகவும் பிரபலமாகி வருகிறது. தற்போதைய கால … Read more

பிரான்சில் புதிதாக ஒரே நாளில் 1.02 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு

பாரீஸ், உலக அளவில் இதுவரை 49.14 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 61.75 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.  பிரான்சில் கொரோனா வைரஸ் மற்றும் ஓமைக்ரான் பரவலால், நாடு முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இந்நிலையில் அந்நாட்டு சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,02,266 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பிரான்சில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது … Read more