#லைவ் அப்டேட்ஸ் உக்ரைன்- ரஷியா போர்: ரஷியா, பெலாரஸ் எல்லை நாடுகளுடன் உக்ரைன் பேச்சுவார்த்தை

31.3.2022 22.30: அகழிகள் தோண்டியபோது கதிர்வீச்சு வெளிப்பட்டதையடுத்து ரஷிய படைகள் செர்னோபில் அணுமின் நிலையத்தை விட்டு வெளியேறத் தொடங்கியதாக உக்ரைனின் அரசு மின் நிறுவனம் கூறி உள்ளது. 21.00: ரஷியாவிலிருந்து எரிசக்தி இறக்குமதியில் இந்தியாவுக்கு அமெரிக்கா எந்த ஒரு சிவப்பு கோடும் போடாது. ஆனால், கொள்முதல் செய்வதில் வேகமான நடவடிக்கையை விரும்பவில்லை என டெல்லி வந்துள்ள அமெரிக்காவின்  தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் தெரிவித்தார். 16.04: டொனஸ்க் பிராந்தியத்தில் ரஷியா இரவு முழுவதும் ஒயிட் பாஸ்பரஸ் வெடிபொருளை … Read more

நம்பிக்கையில்லா தீர்மானத்தை திரும்பப்பெற்றால் நாடாளுமன்றத்தை கலைக்க தயார் – இம்ரான்கான்

லாகூர், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு மீது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன. இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது நாடாளுமன்றத்தில் இன்று விவாதம் நடைபெற்று வருகிறது.  இந்த விவாதத்தை தொடர்ந்து தீர்மானத்தின் மீது வரும் 3-ம் தேதி வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்த வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்கவில்லை என்றால் இம்ரான்கான் அரசு கவிழும். இதற்கிடையில், இம்ரான்கான் அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை பாகிஸ்தான் முட்டாஹிதா குவாமி இயக்கம் (எம்கியூஎம்) கட்சி விலக்கிக்கொண்டு எதிர்க்கட்சி … Read more

பொருளாதார நெருக்கடி | மின் பற்றாக்குறை காரணமாக இருளில் மூழ்கிய இலங்கை தெருக்கள்

கொழும்பு: மின்சாரத்தை மிச்சப்படுத்துவதற்காக இலங்கையில் தெருவிளக்குகள் அணைக்கப்படுவதாக அந்நாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார். இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால் அங்குள்ள 22 மில்லியன் மக்கள் தினமும் 13 மணிநேரம் மின்வெட்டால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் மின்சாரத்தை மிச்சப்படுத்துவதற்காக இலங்கையில் தெருவிளக்குகள் இரவில் அணைக்கப்படுவதாக இலங்கை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இலங்கை மின்சாரத்துறை அமைச்சர், பவித்ரா வன்னியராச்சி செய்தியாளர்களிடம் பேசியதாவது: மின்சாரத்தை சேமித்து உதவுவதற்காக நாடுமுழுவதும் உள்ள தெரு விளக்குகளை அணைக்குமாறு அதிகாரிகளுக்கு ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளோம். இந்தியாவிலிருந்து 500மில்லியன் … Read more

கொலம்பியாவில் விமானம் அவசரமாக தரையிறங்கியதை அடுத்து 21,000 பயணிகள் பாதிப்பு

  கொலம்பியாவில் விமானம் ஒன்று அவசரமாக தரையிறங்கியதை அடுத்து, 21 ஆயிரம் பயணிகள் பாதிப்பிற்குள்ளாகினர். கொலம்பியாவின் நியோனெக்ரோ (Rionegro) சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லாத்தம் (Latam) ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஏர்பஸ் ஏ320-200 ரக விமானம் புறப்பட்டது. அப்போது, விமானம் தரையிறங்க உதவும் கியர் புறப்பட்ட சிறிது நேரத்தில் கீழே விழுந்ததால், விமானம் உடனடியாக புறப்பட்ட இடத்திற்கே அவசரமாக திரும்பியுள்ளது. இதில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அந்நாட்டு விமான போக்குவரத்து துறை இயக்குனர் பஜார்டோ (Fajardo) … Read more

பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை சந்திக்க தயார்- இம்ரான் கான்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசு மீது பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன. நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இன்று விவாதம் நடைபெற இருந்த நிலையில் பாராளுமன்றம் திடீரென ஞாயிற்றுக் கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே, ஞாயிற்றுக்கிழமை நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்த வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்கவில்லை என்றால் இம்ரான்கான் அரசு கவிழும். பாகிஸ்தானில் மொத்தம் 342 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. தீர்மானத்தை தோற்கடிக்க 172 உறுப்பினர்களின் ஆதரவு … Read more

இலங்கையில் அதிபருக்கு எதிராக வலுக்கும் போராட்டம்..!

இலங்கையில் அதிபருக்கு எதிராக வலுக்கும் போராட்டம் அதிபர் இல்லத்தை முற்றுகையிட முயன்ற மக்கள் கூட்டம் அதிபர் இல்லம் முன் போலீசார் குவிப்பு – பலத்த பாதுகாப்பு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது இலங்கை அரசு அதிபர் மாளிகையை முற்றுகையிட மக்கள் திரண்டதால் பதற்றம் Source link

யாருக்கும் தலைவணங்கப் போவதில்லை : இம்ரான்கான்| Dinamalar

இஸ்லாமாபாத்: நான் பாகிஸ்தான் சுதந்திரத்திற்குப் பிறகு பிறந்த நாட்டின் முதல் தலைமுறையைச் சேர்ந்தவன். யாருக்கும் தலைவணங்கப் போவதில்லை என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறினார். பாக்., பிரதமர் இம்ரான்கான் மீது எதிர்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டுவந்துள்ளன. வரும் 3-ம்தேதி இம்ரான் மீது பார்லி.,யில் இது குறித்த வாக்கெடுப்பு நடத்த உள்ளது. அதுவரையில் பார்லி., ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் இம்ரான்கான் அந்நாட்டு தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.அப்போது அவர் கூறியதாவது: இந்த பேச்சு நேரலையானது. பதிவு … Read more

தினமும் எகிறி அடிக்கும் கொரோனா…நாடு முழுவதும் விரைவில் பொது முடக்கம்?

பொது முடக்கம், தடுப்பூசி போன்றவற்ரால் உலக அளவில் கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் தற்போது வெகுவாக குறைந்து வருகிறது. எனினும் சில நாடுகள் இன்னும் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தவித்து வருகின்றன. குறிப்பாக ஆசிய நாடுகளை இன்னும் கொரோனா முற்றிலும் விடுவதாக இல்லை. இதற்கு தென்கொரியாவில் சமீப நாட்களாக அன்றாடம் பதிவாகி வரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும், அதன் விளைவான மரணங்களுமே உதாரணம். அங்கு நேற்று முன்தினம் 3. 47 லட்சம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று … Read more

பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்து விலகும் பேச்சுக்கே இடமில்லை-இம்ரான்கான் திட்டவட்டம்

பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்து விலகும் பேச்சுக்கே இடமில்லை என இம்ரான்கான் திட்டவட்டம் நாடாளுமன்றத்தில் நடைபெற உள்ள நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்கொள்ளத்தயார் – இம்ரான்கான் Source link

ரஷ்ய வெளியுறைவுத்துறை அமைச்சர் டில்லி வருகை: அமெரிக்கா, ஆஸி., அதிருப்தி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: ரஷ்ய வெளியுறைவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் டில்லி வருகைக்கு அமெரிக்கா, ஆஸி., அரசுகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளன. கடந்த ஒரு மாத காலத்துக்கும் மேலாக நடைபெற்று வரும் உக்ரைன் -ரஷ்யா போரில் இந்தியா நடுநிலை வகித்து வருகிறது. இது ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளை அதிருப்தி அடையச் செய்துள்ளது. காலாகாலமாக ரஷ்யாவுடன் வர்த்தகத் தொடர்பில் உள்ள இந்தியா இதர குவாட் நாடுகளான அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளைப் … Read more