பிபிசியின் அங்கீகாரம் ரத்து… 'போலி செய்திகளை' பரப்பியதாக குற்றசாட்டு..!

சட்டவிரோத போதைப் பொருள் வர்த்தகம் குறித்த விசாரணை ஆவணப்படத்தை பிபிசி அரபு வெளியிட்ட சில நாட்களுக்குப் பிறகு அதன் அங்கீகாரம் ரத்து குறித்த அறிவிப்பு வந்துள்ளது.

Porn scandal: BBC suspends presenter | ஆபாச பட விவகாரம்: பி.பி.சி., தொகுப்பாளர் சஸ்பெண்ட்

லண்டன் : ஆபாச பட விவகாரத்தில், பி.பி.சி., நிறுவனத்தின் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடான பிரிட்டனில், பரஸ்பர சம்மதத்துடன் பாலியல் உறவு வைத்துக் கொள்வதற்கான வயது, 16 ஆகும். அதே நேரத்தில், 18 வயதுக்குட்பட்டவர்களை ஆபாச படம் எடுப்பது குற்றமாகும். தலைநகர் லண்டனை தலைமையிடமாக வைத்து செயல்படும், பி.பி.சி., ஊடக நிறுவனத்தின் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருவர் மீது இது தொடர்பாக புகார் கூறப்பட்டுள்ளது. 17 வயதுக்குட்பட்ட … Read more

உஸ்பெகிஸ்தானில் முன்கூட்டியே நடந்த அதிபர் தேர்தல்

தாஷ்கண்ட், உஸ்பெகிஸ்தான் நாட்டின் அதிபராக ஷவ்கத் மிர்சியோயேவ் பதவி வகித்து வருகிறார். அங்கு அதிபரின் பதவிக்காலத்தை நீட்டிப்பது தொடர்பாக கடந்த ஏப்ரல் 30-ந் தேதியன்று பொதுமக்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதற்கு பெரும்பான்மை மக்கள் ஆதரவு அளித்ததால் அதிபர் பதவிக்காலம் 5 ஆண்டுகளில் இருந்து 7 ஆண்டுகளாக உயர்த்தவும், தேர்தலில் தொடர்ந்து 2 முறைக்கு மேல் போட்டியிடுவதற்கும் அந்த நாட்டின் பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டது. தற்போதைய அதிபர் மிர்சியோயேவின் பதவிக்காலம் வருகிற 2026-ம் ஆண்டு வரை உள்ளது. எனினும் … Read more

India assures Sri Lanka of solution to economic crisis | பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு இலங்கைக்கு இந்தியா உறுதி

கொழும்பு-‘பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு, இலங்கைக்கு இந்திய அரசு தொடர்ந்து ஆக்கப்பூர்வமான உதவிகளை செய்யும்’ என, மத்திய அரசு தெரிவித்து உள்ளது. நம் அண்டை நாடான இலங்கை, அன்னியச் செலாவணி கையிருப்பு குறைந்ததால் கடந்தாண்டு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியது. இந்த பிரச்னையில் இருந்து மீள்வதற்காக, முதல் நாடாக இந்தியா உதவிகளை அளிக்க முன்வந்தது. இதன்படி, 33,000 கோடி ரூபாய் அளவுக்கு இலங்கைக்கு கடன் உதவிகள் அளிக்கப்பட்டன. பொருளாதார சிக்கலில் இருந்து மீள்வதற்காக, ஐ.எம்.எப்., எனப்படும் சர்வதேச … Read more

உக்ரைனுக்கு கிளஸ்டர் குண்டுகளை வழங்க அமெரிக்கா முடிவு – 'இயலாமையின் வெளிப்பாடு' என ரஷியா விமர்சனம்

மாஸ்கோ, உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தனது படைகளை அனுப்பி தாக்குதலை தொடங்கியது. 500 நாட்களுக்கும் மேலாக நீடித்து வரும் இந்த போரில், மேற்கத்திய நாடுகளின் உதவியோடு ரஷியாவை எதிர்த்து உக்ரைன் போரிட்டு வருகிறது. இதனிடையே உக்ரைனின் பல்வேறு பகுதிகளை ரஷிய ராணுவம் தனது கட்டுப்பாடுக்குள் கொண்டு வந்துள்ளது. இந்த சூழலில் ரஷியாவிற்கு எதிரான தாக்குதலை தீவிரப்படுத்தும் முயற்சியில் உக்ரைன் ராணுவம் ஈடுபட்டு வருகிறது. இதற்காக இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தங்களுக்கு … Read more

US decides to supply banned cluster bombs to Ukraine | தடை செய்யப்பட்ட கொத்து குண்டுகள் உக்ரைனுக்கு வழங்க அமெரிக்கா முடிவு

வாஷிங்டன்-பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள, ‘கிளஸ்டர் பாம்’ எனப்படும் கொத்து குண்டு களை உக்ரைனுக்கு வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதற்கு பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, அதன் அண்டை நாடான ரஷ்யா, 500வது நாளாக நேற்றும் தாக்குதல் நடத்தியது. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவி செய்து வருகின்றன. இதனால் ரஷ்ய படை உக்ரைன் ராணுவத்தை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது. எனினும் … Read more

பாகிஸ்தான்: ஓட்டலில் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து – 6 பேர் பலி

லாகூர், பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணம் ஜீலம் நகரில் பிரபல ஓட்டல் உள்ளது. 3 மாடிகளை கொண்ட இந்த ஓட்டலில் இன்று எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் அடுக்குமாடி ஓட்டல் இடிந்து விழுந்தது. மேலும், ஓட்டலில் தீ பற்றி எரிந்தது. இந்த விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். ஆனால், இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 10 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த அனைவரும் … Read more

Worrying over the rise of religious parties in Germany | ஜெர்மனியில் தலை துாக்கும் மதவாத கட்சிகளால் கவலை

சோனேபர்க்,-ஜெர்மனியில், ஏ.எப்.டி., எனப்படும் ஜெர்மனிக்கு மாற்று என்ற தீவிர மதவாத கட்சி, சமீபத்தில் நடந்த தேர்தலில் வென்றுள்ளது. நாஜி படை காலத்துக்குப் பின், மதவாத கட்சி பிரபலமடைந்து வருவது, அங்குள்ள மற்ற கட்சிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடான ஜெர்மனியில், சோனேபர்க் என்ற நகரத்தில் நடந்த தேர்தலில், ஏ.எப்.டி., கட்சி வென்றுள்ளது. கடந்த 2013ல் துவக்கப்பட்ட இந்தக் கட்சி, புலம்பெயர்ந்து வந்துள்ள அகதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தக் கொள்கை, ஜெர்மனி மக்களிடையே … Read more

ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஜூலை 21-ந்தேதி வரை சிறை – இலங்கை கோர்ட்டு தீர்ப்பு

கொழும்பு, கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்யும் சம்பவங்கள் அவ்வபோது நிகழ்ந்து வருகின்றன. அந்த வகையில், நேற்று கடலுக்கு மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. மீனவர்களின் 2 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு இலங்கை கடற்படையினர் அழைத்து சென்றனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட மீனவர்கள் இலங்கை … Read more