அரசு ஊழியர்கள் செம ஹேப்பி – முதல்வர் ஜாக்பாட் அறிவிப்பு!

ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த 700 அரசு ஊழியர்களை
பணி நிரந்தரம்
செய்து, அதற்கான பணி நியமன ஆணையை, முதலமைச்சர் வழங்கி உள்ளார்.

டெல்லியில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின் போது அளித்த வாக்குறுதிகளில் ஒன்று தான், ஒப்பந்த அரசு ஊழியர்களை பணி நிரந்தரம் செய்வது.

இந்நிலையில்,
டெல்லி
நீர்வளத் துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்த 700 அரசு ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் செய்ததற்கான பண நியமன ஆணையை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரினால் வழங்கினார். இது தொடர்பான நிகழ்ச்சி, டெல்லி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இது குறித்து ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், சமூக வலைதளமான ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து உள்ளதாவது:

நாங்கள் சொன்னதைச் செய்துள்ளோம். இன்று மற்றொரு வாக்குறுதி நிறைவேற்றப்பட்டு உள்ளது. டெல்லி நீர்வளத் துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் 700
அரசு ஊழியர்கள்
பணி நிரந்தரம் செய்யப்பட்டனர்.

அந்த ஊழியர்களுக்கு அரசு வேலைக்கான நிரந்தரச் சான்றிதழை நானே வழங்கினேன். அவர்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்களின் பெரிய கனவு நனவாகி உள்ளது. அனைவருக்கும் நல்வாழ்த்துகள். டெல்லி அரசின் அனைத்துத் துறைகளிலும் உள்ள அனைத்து தற்காலிக ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதே எனது எண்ணம்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.