Month: February 2022
இந்திய இசைக்குயில் மவுனம் ஆனது: லதா மங்கேஷ்கர் காலமானார்
மஹாராஷ்டிராவின் மும்பையை சேர்ந்த, ‛பாலிவுட்' பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர்(92). கடந்த 70 ஆண்டுகளாக பல்வேறு மொழிகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார். இவருக்க கடந்த 8 ம் தேதி கோவிட் தொற்று உறுதியானது. தெற்கு மும்பையில் உள்ள ‛பிரீச் கேண்டி' மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ‛வென்டிலேட்டர்' மூலம் சுவாசித்து வருகிறார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக சில நாட்களுக்கு முன்னர் டாக்டர்கள் தெரிவித்திருந்தனர். அவரது உடல் நிலை மோசமடைந்துள்ளதாகவும், உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் நேற்று … Read more
சூப்பரான வாய்ப்பு.. சாமனியர்களுக்கு இது வாங்க சரியான தருணம்.. ஏன் என்ன காரணம்..!
தங்கத்தின் தேவையானது நடப்பு ஆண்டில் கொரோனாவுக்கு முந்தைய நிலையை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அதிக சேமிப்பு மற்றும் வளர்ந்து வரும் பொருளாதார வளர்ச்சி விகிதம் மீண்டு வந்து கொண்டுள்ள நிலையில், தேவையானது தொடர்ந்து அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 2021ம் ஆண்டின் தொடக்கத்தில் தங்கத்தின் தேவையானது மீண்டு வரத் தொடங்கியுள்ளது. ஸ்டார்ட் அப் ஊழியர்களுக்கு ஜாக்பாட் தான்.. சம்பள உயர்வுடன் கூடிய சலுகைகள்..! ஓமிக்ரான் தாக்கம் நாட்டில் தற்போது ஓமிக்ரான் தாக்கம் என்பது அதிகரித்து வந்தாலும், பணவீக்கமும் … Read more
சுற்றுலா பயணிகளை மீண்டும் அனுமதிப்பது தொடர்பாக ஆஸ்திரேலியாவில் தீவிர ஆலோசனை!
சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு நாட்டின் எல்லைகளை மீண்டும் திறப்பதற்கான நாள் வெகு தொலைவில் இல்லை என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். இந்த வாரம் பாராளுமன்றம் இது குறித்து விவாதிக்கும் என்றும் அவர் கூறினார். 2020 ஆண்டு மார்ச் மாதத்தில் கொரோனா பரவல் (Corona Virus) தொடங்கியதில் இருந்து, தனது எல்லைகளை மூடிய ஆஸ்திரேலியா, அதன் குடிமக்கள், புலம்பெயர்ந்தோர், சர்வதேச மாணவர்கள் மற்றும் சில பணியாளர்களை மட்டுமே அனுமதிக்கும் வகையில், கடுமையான கட்டுபாடுகளை விதித்திருந்த … Read more
சாய்னா பற்றி சர்ச்சை பதிவு: போலீஸ் வீடியோ கான்ஃபரன்சில் சித்தார்த் விளக்கம்
Actor Siddharth explain to police about tweet against Saina: பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு எதிராக ட்வீட் செய்ததற்காக சர்ச்சையில் சிக்கிய நடிகர் சித்தார்த், சென்னை காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவில் காணொலி வாயிலான விசாரணையில் ஆஜராகி, சாய்னாவிடம் மன்னிப்பு கேட்டுவிட்டதாக காவல்துறையிடம் தெரிவித்தார். கடந்த ஆண்டு இறுதியில் பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணத்தில் பாதுகாப்பு விதிகள் மீறப்பட்ட விவகாரம் தொடர்பாக பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து கூறி இருந்தார். … Read more
ட்விஸ்டனா இதான் ட்விஸ்ட்.! ஒரே இரவில் ஆட்டத்தை மாற்றிக்காட்டிய ஓபிஎஸ்.! அதிர்ச்சியில் திமுகவினர்.!
தேனி : அதிமுகவில் இருந்து விலகி, திமுகவில் இணைந்த மாவட்ட மகளிரணி நிர்வாகி ஒருவர், மீண்டும் அதிமுகவில் இந்த சம்பவம், அம்மாவட்ட அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக மாவட்ட மகளிரணி நிர்வாகியும், போடி நகர இணைச் செயலாளராகவும் இருந்து வந்தவர் முனியம்மாள். இவர் கடந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் போடி 24 வது வார்டில் வெற்றி பெற்று கவுன்சிலராக பொறுப்பு வகித்து உள்ளார். இந்த முறை அவருக்கு அதிமுகவில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனை அடுத்து அதிமுகவில் … Read more
சிவகாமியின் சபதம் – செல்லப்பிள்ளை- பகுதி- 5 |ஆடியோ வடிவில் கேட்க!
தமிழில் வெளியான புகழ்பெற்ற வரலாற்றுப் புதினமான கல்கியின் சிவகாமியின் சபதம் ஆனந்த விகடன் பதிப்பக்கத்தில் புத்தகமாக வெளிவந்து வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது அதை ஒவ்வொரு பகுதியாக ஆடியோ வடிவில் Vikatan Audio யூடியூப் தளத்தில் கேட்கலாம். பொன்னி நதி தன் பல்லாயிரம் கைகளாலும் வளப்படுத்திப் பொன் கொழிக்கச் செய்யும் கீழைச் சோழ நாட்டில் செங்காட்டங்குடி என்ற கிராமம் செழித்து விளங்கிற்று. இந்தக் கிராமத்தில் மாமாத்திரர் என்று பட்டம் பெற்ற பழங்குடியில் பிறந்த பிள்ளை … Read more
லதா மங்கேஷ்கர் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் <!– லதா மங்கேஷ்கர் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் –>
பாடகி லதா மங்கேஷ்கர் மறைவுக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள செய்தியில், இந்தியாவின் இசைக்குயில் லதா மங்கேஷ்கர் மறைந்த செய்தியால் மிகுந்த வேதனையடைவதாகக் குறிப்பிட்டுள்ளார். 80 ஆண்டுக்காலம் பரந்து விரிந்த அவரது இசைவாழ்வில் தனது தேன்குரலால் ஒவ்வொரு இந்தியரின் இதயத்தையும் வருடிச் சென்றதாகக் குறிப்பிட்டுள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் இசை ஆர்வலர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். Source link
'பாஜகவிற்கு பல்லக்கு தூக்குவதே அதிமுகவின் தலையாய பணி': அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு
சென்னை: சமத்துவ விரோத பாஜகவுக்குப் பல்லக்கு தூக்குவதே அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தலையாய பணி என தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: “எங்கள் முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் துவங்கவிருக்கும் அனைத்து இந்திய சமூகநீதிக் கூட்டமைப்பில் சேருவதற்கு விடுத்த அழைப்பை ஏற்க மறுத்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவிற்கும் சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம், எங்களை ஏன் அழைக்கிறீர்கள்” என்று சொல்ல 7 பக்க அறிக்கை அளித்திருப்பது … Read more
ஹிஜாப் தடையால் பெண் கல்வி பாதிக்கப்படும்: கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி
பெங்களூரு: ஹிஜாப் தடையால் பெண் கல்வி மேலும் பாதிக்கப்படும் என ஐக்கிய ஜனதா தள தலைவரும் கர்நாடக முன்னாள் முதல்வருமான குமாரசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். முன்னதாக, கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு மகளிர் பி.யூ. கல்லூரியில் கடந்த டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிந்து வந்த 6 முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து 6 மாணவிகளும் ஹிஜாப் அணிந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கல்லூரி நிர்வாகம் தங்களது உடை … Read more