ஜாதியை இழிவுபடுத்தி பேசிய வழக்கில் நடிகை முன்முன் தத்தாவுக்கு இடைக்கால முன்ஜாமீன்: பஞ்சாப் – அரியானா ஐகோர்ட் உத்தரவு

மும்பை: குறிப்பிட்ட பிரிவினரின் ஜாதியை இழிவுபடுத்தி பேசிய விவகாரத்தில் நடிகை முன்முன் தத்தாவுக்கு இடைக்கால முன் ஜாமீனை பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றம் வழங்கி உள்ளது. பிரபல ஹிந்தி ‘டிவி’ தொடர் நடிகை முன்முன் தத்தா கடந்த சில மாதங்களுக்கு முன் சமூக வலைதளங்களில் வெளியிட்ட வீடியோ, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில், குறிப்பிட்ட ஜாதியை இழிவுபடுத்தும் வகையில் அவர் பேசியதாக கூறப்படுகிறது. இவ்விவகாரம் பூதாகரமாக வெடித்ததால், குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த சிலர் பல மாநில போலீசாரிடம் … Read more

உண்மையாக காதலித்த ஜாக்குலினை விட்டுவிடுங்கள் : மோசடி மன்னன் வேண்டுகோள்

பல கோடி மோசடியில் ஈடுபட்டு தற்போது சிறையில் இருப்பவர் இடைத்தரகரும் மோசடி மன்னனுமான சுகேஷ் சந்திரசேகர். 21க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகள் அவர் மீது போடப்பட்டுள்ளது. இவர் பெங்களூருவைச் சேர்ந்தவர். இவருக்கும் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்ணான்டசுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியானது. இருவரும் நெருக்கமாக இருக்கும் படங்களும் வெளியானது. இதனால் மோசடி வழக்கை நடத்தி வரும் அமலாக்கத் துறையினர் ஜாக்குலின் பெர்ணான்டசுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினார்கள். இந்த நிலையில் டில்லி திஹார் சிறையில் இருக்கும் … Read more

புவி வெப்பமயமாதலால் உருகும் எவரெஸ்ட் சிகரம்;- ஆய்வு தகவல்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் காட்மண்டு: புவி வெப்பமயமாதலால் எவரஸ்ட் சிகரம் உருகி வருவதாக ஆய்வு தகவல் அளித்துள்ளது. உலகம் முழுவதும் தற்போது புவி வெப்பமயமாதல் அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து உலகின் உயரிய சிகரங்களில் உயரம் குறைந்து வருவதும் துருவப் பகுதிகளில் பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் அதிகரிப்பதும் வாடிக்கையாகிவிட்டது.முன்னதாக அண்டார்டிகாவில் ராட்சத மலை ஒன்று இரண்டாகப் பிளந்து தனியாக கடல் பரப்பின்மீது மிதந்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல தற்போது நேபாளத்தில் உள்ள உலகின் உயரமான … Read more

உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு?

லக்னோ, உத்தரப்பிரதேசத்தின் துறவி முதல் மந்திரியான  யோகி ஆதித்யநாத்திடம் இரண்டு துப்பாக்கிகளுடன் ரூ.1.54 கோடி மதிப்பிலான சொத்தும் இருப்பது தெரிந்துள்ளது. இந்த தகவல், அவர் போட்டியிடும் கோரக்பூரில் தாக்கல் செய்த மனுவில் வெளியாகி உள்ளது. மேலும், யோகி ஆதித்யநாத்திடம்  தங்கநகைகளும் உள்ளன. இவர் தனது மனுத்தாக்கலில் குறிப்பிட்டபடி, ரூ.49,000 மதிப்பிலான தங்கசெயின் உள்ளது. இதர தங்கநகைகளின் மதிப்பு ரூ.26,000 என குறிப்பிட்டுள்ளார்.  தற்போதைய கையிருப்பாக ஒரு லட்சம் ரூபாய் ரொக்கமாக உள்ளது.  டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தின் எஸ்பிஐ … Read more

ஜூனியர் உலக கோப்பை இறுதிப்போட்டி; டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங்!

ஆன்டிகுவா, 14-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) வெஸ்ட்இண்டீசில் நடந்து வருகிறது. இதில் ஆன்டிகுவாவில் இன்று நடைபெறும் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.  யாஷ் துல் தலைமையிலான இந்திய அணி லீக் சுற்றில் தென்ஆப்பிரிக்கா, அயர்லாந்து, உகாண்டாவையும், கால்இறுதியில் வங்காளதேசத்தையும், அரைஇறுதியில் ஆஸ்திரேலியாவையும் வீழ்த்தி கம்பீரமாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. டாம் பிரிஸ்ட் தலைமையிலான இங்கிலாந்து அணி லீக் சுற்றில் வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம், கனடாவையும், … Read more

பேஸ்புக் மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய் சரிவு

சான் பிரான்சிஸ்கோ, சமூக ஊடக நிறுவனமான பேஸ்புக், அடுத்தகட்டமாக மெய்நிகர் ஆன்லைன் உலகமான ‘மெட்டாவெர்ஸ்’ நோக்கி தன்னுடைய கவனத்தை செலுத்தி வருவதால், அதனை பிரதிபலிக்கும் வகையில், நிறுவனத்தின் பெயரை மெட்டா என சில மாதங்களுக்கௌ முன்பு மாற்றம் செய்தது. இந்நிலையில் வியாழன் காலை மெட்டாவின் பங்குகள் 26 சதவிகிதம் சரிந்தன, இது இந்த நிறுவனம் இதுவரை கண்டிராத மிகப்பெரியது வீழ்ச்சியாகும். நிறுவனத்தின் வரலாற்றில் முதன்முறையாக கடந்த காலாண்டில் மெட்டாவின் பயனர் எண்ணிக்கை குறைந்ததைத் தொடர்ந்து, இந்த திடீர் … Read more

எஸ்பிஐ நிகரலாபம் ரூ.8432 கோடி.. தனியார் நிறுவனங்களுக்கு டஃப் கொடுக்கும் PSU..!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ அதன் காலாண்டு முடிவினை வெளியிட்டுள்ளது. அதன் படி நிகரலாபம் 62% அதிகரித்து, 8432 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே கடந்த ஆண்டின் இதே காலாண்டில் 5196 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வங்கியானது ஒரு காலாண்டில் அதிகளவிலான லாபத்தினை பதிவு செய்துள்ளது. வருவாய் மொத்த வருவாய் விகிதமானது 78,352 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 75,981 கோடி ரூபாயாக இருந்தது. இதே எஸ்பிஐ குழுமத்தின் நிகர லாபம் … Read more

திருமாவளவன் பெயரில் போலி கணக்குகள் : புகார் அளித்த விசிக எம்எல்ஏ

Social Media Fake ID Complaint Update From VCK : விடுலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் குறித்து சமூகவலைதளங்களில் போலி கணக்கு தொடங்கி அவதூறு கருத்துக்களை பரப்பி வருவோர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறனர். மேலும் இந்த தேர்தலுக்காக அரசியல் தலைவர்கள் பலரும் … Read more

நீட் தேர்வுக்கு நாங்கள் காரணம் இல்லை., திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பரபரப்பு அறிக்கை.!

திமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் இன்று விடுத்துள்ள அறிக்கையில், “மத்திய அரசால் 2010-இல் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட போதே மத்தியத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு கொடுத்து வந்த ஆதரவைத் தி.மு.க. விலக்கி கொண்டிருந்தால் இன்று நீட் தேர்வு வந்திருக்காது” என்று அ.தி.மு.க. அரசின் 10 ஆண்டு தோல்வியை மறைக்க – “கூவத்தூர்” கொண்டாட்டத்திற்குப் பிறகு நடைபெற்ற அ.தி.மு.க. ஆட்சியில் நீட் தேர்வினைச் செயல்படுத்தி – மாணவர்களின் தற்கொலைக்குக் காரணமாக இருந்த அ.தி.மு.க. ஆட்சியில் துணை முதலமைச்சர் … Read more

“டி.வி-யை ஆன் செய்தால் ஸ்டாலின் வந்தாரு… போனாரு… ரிப்பீட்டு!'' – ஜெயக்குமார் தாக்கு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “அ.தி.மு.க ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் மற்றும் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். பொங்கல் தொகுப்பு என்ற பெயரில் குப்பையைத்தான் கொடுத்தனர். தேர்தல் உள்ளாட்சியில் மகளிருக்கான 50 சதவிகித இட ஒதுக்கீடு திட்டத்தை மோசடி மூலம் தி.மு.க தனது திட்டம் எனக் கூறிவருகிறது. தொலைகாட்சியை ஆன் செய்தாலே ஆணழகன் ஸ்டாலின் … Read more