யுவனின் புது பாடல்

யுவனின் புது பாடல்

யுவனின் புது பாடல்

3/2/2022 2:36:06 PM

யுவன் சங்கர் ராஜா மற்றும் துவணி பானுஷாலி இருவரும் பாடிய பாடல் மார்ச் 3ம் தேதி வெளியாக இருப்பதாக யுவன் சங்கர் ராஜா அறிவித்துள்ளார். இது இசை ஆல்பத்துக்காக பாடிய பாடலா அல்லது ஏதேனும் படத்துக்கான பாடலா என்பது நாளை பாடல் வெளியாகும்போது தெரிந்துவிடும் என கூறப்படுகிறது. இது குறித்த வீடியோவை யுவன்சங்கர் ராஜா தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

இந்த பாடலை எதிர்நோக்கி அவரது ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பாடலுக்கான வீடியோவில் யுவனும் பாடகி துவணியும் தோன்றுகிறார்கள். இந்த பாடல் கலர்ஃபுல்லாக படமாக்கப்பட்டுள்ளதாம். பாடல் வெளியான பிறகு இணையதளத்தில் பிரபலமாகும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.