கன்னத்தில் அதிக கொழுப்பு உள்ளதா? இதனை எப்படி குறைக்கலாம் தெரியுமா?


பொதுவாக நம்மில் சிலருக்கு கன்னங்களில் அதிக கொழுப்பு நிறைந்து கொழு கொழுவென காணப்படுவதுண்டு.

இதனை எளிய முறையில் குறைக்க ஒரு சில பயிற்சிகள் உள்ளன. தற்போது அவை என்ன என்பதை இங்கு பார்ப்போம். 

  • இரு கன்னங்களையும் சப்பையாக வைத்துக்கொள்ளவும். உதட்டைக் கூப்பிக்கொள்ளவும்.  30 வினாடிகள் வரை மூச்சைப் பிடித்துக்கொண்டு, உதடுகளை அப்படியே வைத்திருக்க வேண்டும். பின்னர் உதடுகளை விடுவிடுத்து, மூச்சையும் மெதுவாக விட வேண்டும்.  இதேபோல தொடர்ந்து காலையும், மாலையும் பத்து முறை செய்ய வேண்டும்.
  • வாய்க்குள் காற்றை இழுத்து அடக்கிக்கொள்ள வேண்டும். இரு உதடுகளையும் ஒன்றோடு ஒன்று ஒட்டி வைத்து, காற்றை நன்கு அடக்கிக்கொள்ள வேண்டும். பிறகு காற்றை ஒருபுறக் கன்னத்தில் இருந்து மறுபுற கன்னத்துக்கு மாற்ற வேண்டும். இப்படி மாறி மாறிச் செய்ய வேண்டும்.  தினமும் ஐந்து நிமிடங்களுக்கு இந்தப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
  • மூச்சை நன்றாக இழுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் மெதுவாக வாய் வழியாக மூச்சை விட வேண்டும்.  தினமும் காலை, மாலை என நான்கு முறை தொடர்ந்து இந்தப் பயிற்சியைச் செய்ய வேண்டும்.
  • தலையைப் பின்னால் சாய்த்து அண்ணாந்து பார்க்க வேண்டும்.  இப்படிப் பார்ப்பதால், தொண்டைப் பகுதி நீளமாகக் காணப்படும். உதட்டைக் குவித்து, வானத்துக்கு முத்தம் கொடுப்பதைப் போல வைத்துக்கொள்ள வேண்டும்.  இதேநிலையில் உதடுகளை பத்து நிமிடங்கள் வரை குவித்து வைத்திருக்க வேண்டும். பிறகு மெதுவாக உதடுகளை விடுவிக்க வேண்டும்.  பத்து முறை மீண்டும் மீண்டும் இப்படிப் பயிற்சி செய்ய வேண்டும்.
  • கன்னங்களைச் சுற்றி எண்ணெயைத் தடவ வேண்டும்.  பின்னர் கன்னங்கள் அகலும் அளவுக்கு உதடுகளை விரித்துச் சிரிக்க (சிரிப்பதுபோல வைத்திருக்க) வேண்டும். பத்து நிமிடங்கள் வரையில் உதடுகளை அப்படியே வைத்திருக்க வேண்டும். பிறகு கன்னங்களை விடுவிக்காமல் புன்னகையை மெதுவாக நிறுத்தி, உதடுகளை பழையநிலைக்குக் கொண்டுவர வேண்டும்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.