இலங்கையில் ஏற்பட்டுள்ள பஞ்சம் இந்தியாவுக்கும் வர வாய்ப்புள்ளது- சீமான்

திருச்சி:

2015 ஆம் ஆண்டு திருச்சி எடமலைப்பட்டி புதூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழக அரசை விமர்சித்து பேசியது தொடர்பாக தொடர்ந்த அவதூறு வழக்கில் ஆஜராவதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று திருச்சி வந்தார்.

பின்னர் திருச்சி நீதிமன்ற வளாகத்தில் உள்ள குற்றவியல் நீதிமன்றம் எண் 2-ல் ஆஜராகினார். இந்த வழக்கில் மீண்டும் அவரை ஏப்ரல் 21 ஆம் தேதி ஆஜராக வேண்டுமென நீதிபதி திரிவேணி உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பாக ஜனாதிபதியை தமிழக முதல்வர் சந்திப்பது நல்ல வி‌ஷயம் தான். நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பாக மாநாடு ஒன்றை கூட போடலாம்.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவு அல்ல பஞ்சம். இதே நிலை தான் நமக்கும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் வரும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளவும். ஏனென்றால் நம்முடைய பொருளாதார கொள்கை அப்படி உள்ளது. அனைத்தையும் தனியாருக்கு தாரை வார்த்துக் கொடுத்தால் நிலைமை அப்படித்தான் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது வக்கீல் பிரபு மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.