கடலூரின் துணை மேயர் பதவியை கேட்கும் தவாக – கூட்டணி கட்சிகள் உடன் திமுக ஆலோசனை

உள்ளாட்சிப் பதவிகளுக்கான தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்ந்தெடுப்பது குறித்து கூட்டணி கட்சிகளுடன் இடப்பங்கீடு பேச்சுவார்த்தை அமைச்சர் கே.என் நேரு தலைமையில் நடைபெற்றது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அமைச்சர் கே.என் நேருவின் இல்லத்தில், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தை கட்சி, மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கூட்டணி கட்சி பிரதிநிதிகளுடன் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.  இடப்பங்கீடு குறித்த இந்தப் பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் சார்பில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி, … Read more

பிப்ரவரியில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1,33,026 கோடியாக உயர்வு

நாட்டின் ஜிஎஸ்டி வசூல் சென்ற பிப்ரவரி மாதத்தில் ஒரு லட்சத்து 33 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 26 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 18 சதவிகிதம் அதிகமாகும். அதேநேரம், சென்ற ஜனவரி மாதத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு வசூலான ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 986 கோடி ரூபாயுடன் ஒப்பிடும்போது குறைந்துள்ளது. ஜிஎஸ்டி வசூலில் … Read more

“அஜித்துக்கு அரசியலுக்கு வரும் எண்ணமில்லை” – அஜித் மேலாளர் சுரேஷ் சந்திரா ட்வீட்

“அஜித்துக்கு அரசியலுக்கு வரும் எண்ணமில்லை”  என்று அஜித் சார்பில், அஜித் மேலாளர் சுரேஷ் சந்திரா ட்வீட் செய்துள்ளார். ‘வலிமை’ படம் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான 24 ஆம் தேதி வெளியானதால் ’அஜித் அரசியலுக்கு வருகிறார்’ என்று ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் பேசியதாக ஊடகம் ஒன்றில் வெளியான செய்திக்கு மறுப்புத் தெரிவித்து அஜித் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் அஜித் சார்பாக விளக்கம் கொடுத்துள்ளார். அவரது அறிக்கையில், ”அஜித்குமாருக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை. … Read more

கீவ் நகரில் இந்தியர்கள் முழுமையாக வெளியேற்றம்: வெளியுறவுத்துறை| Dinamalar

புதுடில்லி: உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் இருந்த இந்தியர்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டு விட்டனர் என வெளியுறவுத்துறை தெரிவித்து உள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தன் சிரிங்காலா கூறியது, உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்பதற்காக அடுத்த மூன்று நாட்களில் சுமார் 26 விமானங்கள் இயக்கப்பட உள்ளனன . புடா பெஸ்ட் புகாரெஸ்ட் நகரங்களை தவிர சுலோவாகியா போலந்து நகரங்கள் வழியாக இந்தியர்கள் மீட்கப்படுவர். கீவ் நகரில் இந்தியர்கள் யாரும் இப்போது இல்லை, இந்தியர்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டு உள்ளது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு … Read more

'மாறன்' எமோஜிக்கள் வெளியீடு

தியேட்டர்களுக்கு வரும் படங்களுக்குத்தான் அதன் தயாரிப்பாளர்கள் பெரிய அளவில் பிரமோஷன்கள் செய்ய வேண்டுமென நினைப்பார்கள். முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களுக்குத்தான் இப்போதெல்லாம் பிரமோஷன்கள் அதிகமாக இருக்கின்றன. மீடியம் பட்ஜெட், ஸ்மால் பட்ஜெட் படங்களை அதன் நடிகர்கள், நடிகைகள் கூட அதிகம் கண்டு கொள்வதில்லை. இந்த சமூக வலைத்தள யுகத்திலும் அதில் செயல்படும் ரசிகர்களை ஈர்க்க படங்களுக்கான 'எமோஜி'க்களை வெளியிடுவது அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழ் சினிமாவில் இதற்கு முன்பு 'மெர்சல், காலா, என்ஜிகே, பிகில், மாஸ்டர்' ஆகிய படங்களுக்கு சிறப்பு … Read more

போர் குற்றங்களில் ஈடுபட்டதா ரஷ்ய ராணுவம்? சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணை| Dinamalar

கார்கிவ்: போர் குற்றங்களில் ரஷ்ய ராணுவம் ஈடுபட்டதா என சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் தற்போது உக்ரைன் – ரஷ்யா போரில் ரஷ்ய ராணுவத்தின் மனித உரிமை மீறல் மற்றும் போர் குற்றங்கள் குறித்து வழக்கு பதியப்பட்டுள்ளது. கடந்த 2014ம் ஆண்டுக்குப் பின்னர் ரஷ்ய ராணுவம் மிகப்பெரிய மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளதாக வழக்கறிஞர் கரிம் கான் ஐசிசி நீதிபதிகளிடம் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த ஒரு வார காலமாக உக்ரைன் … Read more

19,000 கோடி ரூபாய் டெண்டரை ரத்து செய்த மத்திய அரசு..!

மத்திய அரசுக்குச் சொந்தமான பாரத் பிராட்பேண்ட் நிகாம் லிமிடெட் நிறுவனம் இந்தியாவில் 16 மாநிலங்களில் உள்ள கிராமங்களை ஆப்டிகல் ஃபைபர் அடிப்படையிலான அதிவேக பிராட்பேண்ட் நெட்வொர்க் சேவை மூலம் இணைப்பதற்காக 19,000 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டரை வெளியிட்டு இருந்தது. இந்த டெண்டரை கைப்பற்றத் தகுதியான விண்ணப்பதாரர்கள் இல்லாத காரணத்தால் மத்திய அரசின் உத்தரவின் படி பாரத் பிராட்பேண்ட் நிகாம் இந்த 19000 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டரை ரத்து செய்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி விதிகள் … Read more

ஸ்டாலின் புத்தக விழா: கூட்டாட்சி தத்துவத்தை முழங்கிய தலைவர்கள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய சுயசரிதை நூலான ‘உங்களில் ஒருவன்’ புத்தக வெளியீட்டு விழாவில், கலந்துகொண்ட தேசியத் தலைவர்கள் ராகுல் காந்தி, பினராயி விஜயன், உமர் அப்துல்லா, தேஜஸ்வி யாதவ் கூட்டாட்சித் தத்துவத்தை முழங்கினர். திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் எழுதிய சுயசரிதை நூலான ‘உங்களில் ஒருவன்’ புத்தகம் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் வெளியிடப்பட்டது. புத்தக வெளியீட்டு விழாவில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கேரள முதல்வர் பினராயி விஜயன், காஷ்மீர் முன்னாள் முதல்வர் … Read more

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக பறிமுதல்! 45 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூல்.!

இரண்டு நாட்களில் 431 கிலோ தடைசெய்யப்பட்ட நெகிழிகள் பறிமுதல் செய்யப்பட்டு 45,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,தமிழகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பொருட்களான உணவுப்பொருட்களை கட்ட பயன்படுத்தும் பிளாஸ்டிக் தாள், பிளாஸ்டிக்காலான தெர்மாக்கோல் தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகிதத் குவளைகள், பிளாஸ்டிக் குவளைகள், நீர் நிரப்ப பயன்படும் பைகள்/பொட்டலங்கள், பிளாஸ்டிக் தூக்கு பைகள், பிளாஸ்டிக் கொடிகள், பிளாஸ்டிக் விரிப்புகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகிதத் தட்டுகள், … Read more

தென்காசி: கண்டிப்பை மீறி காதல்; ஆத்திரத்தில் மகளை அரிவாளால் வெட்டிய தந்தை!

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆரியங்காவு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர், இருபது வயது நிரம்பிய ஒரு பட்டதாரி பெண். படிப்பை நிறுத்திவிட்டு தற்போது வீட்டில் இருக்கும் அவர், வீட்டில் இருந்தபடியே பீடி சுற்றும் தொழில் செய்து வருகிறார். காதல் அந்தப் பெண்ணுக்கும் அவர் சமூகத்தைச் சேர்ந்த ஒரு இளைஞருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அதுவே காதலாக மலர்ந்துள்ளது. இருவருக்கும் இடையேயான காதல் விவகாரம் பெண்ணின் தந்தையான வேலுச்சாமி என்பவரின் காதுகளை எட்டியதும் அவர் ஆத்திரம் … Read more