பிரபல திருடனாக நடிக்கும் ரவிதேஜா

பிரபல திருடனாக நடிக்கும் ரவிதேஜா

பிரபல திருடனாக நடிக்கும் ரவிதேஜா

4/4/2022 10:00:31 AM

‘த காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தின் தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வாலின் அபிஷேக் தயாரிக்கும் பிரமாண்ட பான் இண்டியா படம் டைகர் நாகேஸ்வரராவ். ஜிவி பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். மதி ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தில் ரவி தேஜாவுக்கு ஜோடியாக நூபுர் சனோன் மற்றும் காயத்ரி பரத்வாஜ் ஆகியோர்  நடிக்கின்றனர். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகவுள்ளது.
இது ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதிகளில் புகழ்பெற்ற ஒரு திருடனின் கதை.

ஓடும் ரெயில்களில் கொள்ளை அடிப்பதும் சிறைச்சாலைகளில் இருந்து விதவிதமாக தப்புவது இவனது ஸ்டைல், ஆந்திர சிறைகளில் டைகர் நாகேஸ்வரராவ் செக்கியூரிட்டி சிஸ்டம் என்கிற அமைப்பே இருக்கிறதாம். அதாவது அவர் தப்பித்ததை அடிப்படையாக கொண்டு சிறையின் பாதுகாப்பில் மாற்றம் செய்தார்களாம். சென்னை புழல் சிறையில் இருந்தும் தப்பித்திருக்கிறார். அவரின் வாழ்க்கைதான் தற்போது படமாகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.