உதயநிதியே இப்படி சொல்லிட்டாரே ? வருத்தத்தில் விஜய் ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும் தயாரிப்பாளராவும் திகழ்பவர் உதயநிதி. இவர் தற்போது சட்டமன்ற உறுப்பினராகும் பணியாற்றி வருகின்றார். இவரது நடிப்பில் தற்போது
நெஞ்சுக்கு நீதி
மற்றும்
மாமன்னன்
ஆகிய படங்கள் உருவாகி வருகின்றது

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் மாமன்னன் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. மேலும் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவான நெஞ்சுக்கு நீதி திரைப்படம் மே 20 ஆம் தேதி வெளியாகின்றது. இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார்.

மீண்டும் வழக்கு தொடரும் மேலூர் தம்பதிகள்..புது பிரச்சனையில் தனுஷ்..!

இந்நிலையில் ரெட் ஜெயண்ட் சார்பில் உதயநிதி தற்போது பல படங்களை வாங்கி வெளியிட்டு வருகின்றார். அதில் ஒன்றுதான் விஜய்யின் நடிப்பில் வெளியான
பீஸ்ட்
திரைப்படம். கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களின் கலவையான விமர்சனங்களை சந்தித்துள்ளது.

இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசை வெல்லுங்கள்

மேலும் இப்படத்துடன் வெளியான
KGF
திரைப்படம் சிறப்பாக இருப்பதால் பீஸ்ட் படத்தின் வசூலும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகின்றது. இந்நிலையில் இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் உருவான தி வாரியர் படகின் பாடல் வெளியிட்டு விழாவில் பேசிய உதயநிதி, தெலுங்கு படங்கள் தற்போது பான் இந்திய படமாக மாறிவருகின்றது.

எனவே தமிழ் படங்களை ரசிகர்கள் ஓடவைக்கின்றார்களோ இல்லையோ நல்ல படங்கள் எந்த மொழியாக இருந்தாலும் ஓடவைக்கின்றார்கள். இருப்பினும் நான் தமிழ் படங்களை குறைகூறவில்லை. நல்ல படங்களை ரசிகர்கள் ஓடவைப்பார்கள் என பேசியுள்ளார் உதயநிதி. இதன் மூலம் பீஸ்ட் படத்தை விட KGF நல்ல படம் என உதயநிதி மறைமுகமாக கூறியதாக ரசிகர்கள் கருத்து தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் படங்கள விட நல்ல படங்கள் ஓடுது Beast -ஐ கலாய்தாரா உதயநிதி?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.