பாராளுமன்றத்தில் 1990 ஆண்டுக்கு பின் வரலாற்று சாதனையை பதிவு செய்த பாஜக.! 

பஞ்சாப், அசாம், திரிபுரா, நாகாலாந்து, இமாச்சலப் பிரதேசம், ஆகிய 6 மாநிலங்களில் காலியாகும் 13 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிகளுக்கு சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் நாகாலாந்து, இமாச்சல பிரதேசத்தில் தலா ஒரு உறுப்பினர் பதவியை போட்டியின்றி பாஜக கைப்பற்றியது. நேற்று நடைபெற்ற தேர்தலில், அசாமில் இரண்டு உறுப்பினர்கள் மற்றும் திரிபுராவில் ஒரு உறுப்பினர் பதவியை வென்றது. இதன்மூலம் மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 100 ஆக உயர்ந்துள்ளது. இதனால் 1990 – ஆம் ஆண்டுக்கு பிறகு நூறு … Read more

KKR vs PBKS: வான்கடேவில் வீசிய ரசல் புயல்; பள்ளத்தில் பம்மி பதுங்கிய பஞ்சாப்!

இத்தொடரில், பெரும்பாலும் டாஸும் பனிப்பொழிவுமே கைகோர்த்து போட்டியின் முடிவை இறுதி செய்கின்றன என்பதாலும், எவ்வளவு ரன்கள் எடுத்தாலும் அவற்றின் தாகம் தீருவதில்லை என்பதாலும் ‘பௌலிங்கே பலம்’ என்னும் வியூகத்தோடு ஆறாவது, ஏழாவது பௌலிங் ஆப்சன்களோடு போட்டியை அணிகள் அணுகத் தொடங்கிவிட்டன. ரபாடா என்ட்ரி பஞ்சாப்புக்கு பலம் சேர்த்திருக்க, கடந்த போட்டியில் ஷெல்டன் ஜாக்சன் நிகழ்த்திய விக்கெட் கீப்பிங் வித்தைகளை எல்லாம் ஒதுக்கி வைத்து இன்னொரு பௌலிங் ஆப்சனாக ஷிவம் மவியைச் சேர்த்து சாம் பில்லிங்ஸிற்கு க்ளவுஸினை மாட்டி … Read more

சென்னையில் பட்டதாரி பெண்ணிற்கு ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 10 லட்சம் ரூபாய் மோசடி செய்த தம்பதி கைது.!

சென்னையில் பட்டதாரி பெண்ணிற்கு ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 10 லட்சம் ரூபாய் மோசடி செய்த தம்பதியை போலீசார் கைது செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் லாலாபேட்டையைச் சேர்ந்த பி.எட் பட்டதாரியான மீரா, ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதி அரசு பணிக்காக முயன்று வந்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு ராணிப்பேட்டையைச் சேர்ந்த சுகுமாரன் என்பவர் மூலம் சென்னையைச் சேர்ந்த சுந்தர் குமார் – பிரியா தம்பதி மீராவுக்கு அறிமுகமாகியுள்ளனர். பள்ளிக்கல்வித்துறையில் அதிகாரிகள் பலரைத் தெரியும் எனக் கூறிய அந்தத் … Read more

ஏப்ரல் 1: தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஏப்ரல் 1) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,52,857 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் … Read more

திடீரென 'மன்மதலீலை' வெளியாவதில் ஏற்பட்ட சிக்கல்…! விளக்கமளித்த பட குழு…!

மன்மத லீலை’ திரைப்படம் திட்டமிட்டப்படி வெளியாகாத நிலையில் படதரப்பினர் விளக்கம் அளித்துள்ளனர்.வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ மன்மதலீலை ’. இந்த படத்தில் ஹீரோவாக அசோக் செல்வன் நடித்துள்ளார். அவருக்குஜோடியாக சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன் ஆகிய மூவரும் நடித்துள்ளனர். வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக இருந்த மணிவண்ணன் என்பவர் இந்தப் படத்தின் கதையை எழுதியுள்ளார். நெட்டிசன் கேட்ட ‘ஒத்த’ கேள்வி: யாஷிகாவின் பதிலால் ஆடிப்போன ரசிகர்கள்…! பிரேம்ஜி இசையமைத்துள்ள இப்படத்துக்கு தமிழ் … Read more

தனியார் பேருந்தில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லப்பட்ட சுமார் 5 கோடி ரூபாய் பணம் பறிமுதல்

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் தனியார் பேருந்தில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லப்பட்ட சுமார் 5 கோடி ரூபாய் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் வீரவல்லி டோல்கேட் அருகே ஆந்திராவில் இருந்து குண்டூர் நோக்கி சென்ற தனியார் பேருந்தில் மாவட்ட எஸ்.பி., ராகுல் தேவ் ஷர்மா தலைமையிலான போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது லக்கேஜ் வைக்கும் இடத்தில் பணம் பண்டல் பண்டலாக பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து பணத்தை பறிமுதல் … Read more

உமேஷ் யாதவ் வெறித்தனம்! 137 ஓட்டங்களுக்கு பஞ்சாப் அணி ஆல்-அவுட்

2022 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 8-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.இப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பஞ்சாப் அணி முதலில் துடுப்பாட காலத்தில் இறங்கியது. தொடக்க வீரராக களமிறங்கிய அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் 1 ஓட்டம் மட்டுமே எடுத்த நிலையில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன் … Read more

பாஜகவுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

புது டெல்லி: பாஜகவுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பாஜகவுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு நாட்டை காக்க ஒன்றிணைய வேண்டும் என்றார், தொடர்ந்து பேசிய அவர், ஒற்றுமையே வலிமை என்பதை உணர்ந்து பாஜக அல்லாத கட்சிகளுடன் கொள்கை ரீதியான நட்பை காங்கிரஸ் கட்சி கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

கடின உழைப்பும் தகுதியும் உள்ளவர்களுக்கு மட்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு- ராகுல்காந்தி உறுதி

பெங்களூரு: கர்நாடகா மாநிலத்திற்கு சென்றுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, பெங்களூருவில் உள்ள அம்மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள், எம்எல்ஏக்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது: அடுத்த ஆண்டு மே மாதம் தேர்தல் நடைபெற உள்ள கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்கு 150 இடங்களில் வெற்றி பெறுவதை இலக்காக கொள்ள வேண்டும்.  கடின உழைப்பும் தகுதியும் மட்டுமே தேர்தல் சீட்டு யாருக்கு கிடைக்கும் என்பதை தீர்மானிக்கும். ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டர்களும் தலைவர்களும் மக்களின் பிரச்சினைகளுக்காக … Read more

இலங்கையில் அவசரநிலை பிரகடனம்- அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவிப்பு

கொழும்பு: இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.   மேலும் உணவு பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்பட எரிப்பொருட்களுக்கு தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.  பெட்ரோல் நிலையங்களில் வாகன ஓட்டிகள் பல மணி நேரம் காத்துக் கிடக்கும் நிலை காணப்படுகிறது.  தினமும் 13 மணி நேரம் வரையில் மின்வெட்டு அமலில் உள்ளதால் பொதுமக்களின் மக்களின் இயல்பு  வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் கொழும்பு நகரில் உள்ள அதிபர் … Read more