30 ஆயிரம் லஞ்சம் உதவி மின்பொறியாளர் கைது

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கனூர் ரெட்டியபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சசிக்குமார். இவர் தனது விவசாய தோட்டத்திற்கு இலவச மின் இணைப்பு வழங்கக் கோரி உத்தப்பநாயக்கனூர் உப மின்நிலைய உதவி மின்பொறியாளர் சக்திவேலை அணுகினார். அதற்கு சக்திவேல் ரூ.40 ஆயிரம் லஞ்சம் தந்தால் இலவச மின் இணைப்பு வழங்குவதாக கூறியுள்ளார். லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுரைப்படி நேற்று சசிக்குமார், ரூ.30 ஆயிரம் பணத்தை உதவி மின்பொறியாளர் சக்திவேலுவிடம் வழங்கினார். அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை  போலீசார், சக்திவேலை … Read more

ஏர் இந்தியா உள்ளிட்ட விமான நிறுவனங்களுக்கு 17 ஆயிரம் கோடி இழப்பு

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து, கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சர்வதேச விமான சேவை கடந்த 27ம் தேதி முதல் தொடங்கியது. இதனால், இந்தியாவில் வாரத்துக்கு வெளிநாட்டு நிறுவனங்களின் 1,783 சேவைகளும், உள்நாட்டு விமான நிறுவனங்களின் 1,465 சேவைகளும் கிடைக்கின்றன. கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2021ம் ஆண்டு  டிசம்பர் வரையிலான 2 ஆண்டு காலத்தில், ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், அலையன்ஸ் ஏர் நிறுவனங்களுக்கு ₹17,302 கோடி … Read more

லோக்பால் அமைப்பு உத்தரவுப்படி சி.பி.ஐ., முதல் முறையாக வழக்கு| Dinamalar

புதுடில்லி:’லோக்பால்’ எனப்படும், அரசு ஊழியர்கள் மீதான ஊழல் புகார்களை கண்காணிக்கும் அமைப்பின் உத்தரவுப்படி, முதல் முறையாக, அரசு ஊழியர் ஒருவர் மீது, சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்து உள்ளது. தேசிய கலாசார சொத்துக்கள் பாதுகாப்பு ஆய்வகத்தின் முன்னாள் இயக்குனராக இருந்தவர் மானேகர் சிங்.இவர், உத்தர பிரதேசத்தின் லக்னோ, கர்நாடகாவின் மைசூரு ஆகிய இடங்களில், தேசிய கலாசார சொத்துக்கள் பாதுகாப்பு ஆய்வகத்தின் கட்டடங்களை கட்டும் ஒப்பந்தத்தை, வி.கே.சிங் கன்ஸ்ட்ரக் ஷன் என்ற கட்டுமான நிறுவனத்திடம் வழங்கினார். இதில், பல்வேறு முறைகேடு … Read more

தமிழில் 8 ஆண்டுகளுக்கு பிறகு ஹீரோவாக நடிக்கும் அஜ்மல்

பிரணயகாலம் என்ற மலையாள படத்தில் அறிமுகமான அஜ்மல், அஞ்சாதே படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். அதன்பிறகு டின் 07 ஏஎல் 4777, திருதிரு துறுதுறு, உள்பட சில படங்களில் நடித்தார். கோ படத்தின் மூலம் வில்லன் ஆனார். அதன்பிறகும் ஹீரோவாக நடித்த அஜ்மல் கடைசியாக வெற்றிச் செல்வன் என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். இதில் அஜ்மலுக்கு ஜோடியாக ராதிகா ஆப்தே நடித்தார். இந்த படத்திறகு பிறகு அஜ்மல் பல படங்களில் நடித்தாலும் வில்லன், இரண்டாவது நாயகன் கேரக்டரில் … Read more

பஞ்சாப், அரியானாவின் கூட்டுத் தலைநகராக சண்டிகர் தொடரும்: அரியானா முதல் மந்திரி

சண்டிகர், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து அரியானா தனியாக பிரிக்கப்பட்ட போது, இரு மாநிலங்களுக்கும் பொதுவான தலைநகராக சண்டிகர் இருக்கும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து யூனியன் பிரதேசமான சண்டிகரை பஞ்சாப் 60 சதவீதமும் ஹரியானா 40 சதவீதமும் நிர்வகித்து வந்தன.  இந்த நிலையில், சண்டிகரில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் அனைவரையும், மத்திய சேவை விதிகளின் கீழ் கொண்டுவரும் அறிவிப்பை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அண்மையில் வெளியிட்டார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த  பஞ்சாப் முதல் மந்திரி … Read more

கொல்கத்தா அணி சிறப்பான பந்துவீச்சு : 137 ரன்களுக்கு பஞ்சாப் அணி ஆல்- அவுட்

மும்பை, ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் கடந்த மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்று வரும்  8-வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  -பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி பஞ்சாப் அணி பேட்டிங் செய்ய முதலில் களமிறங்கியது. தொடக்க வீரராக களமிறங்கிய அணியின் கேப்டன் … Read more

இந்தியாவை ஆதரிக்கும் "ஒரு சக்தி வாய்ந்த நாடு" பாகிஸ்தான் மீது கோபத்தில் உள்ளது- இம்ரான் கான்

லாகூர், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு மீது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன. இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது நாடாளுமன்றத்தில் நேற்று விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தை தொடர்ந்து தீர்மானத்தின் மீது வரும் 3-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்த வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்கவில்லை என்றால் இம்ரான்கான் அரசு கவிழும். இதற்கிடையில், இம்ரான்கான் அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை பாகிஸ்தான் முட்டாஹிதா குவாமி இயக்கம் (எம்கியூஎம்) கட்சி விலக்கிக்கொண்டு எதிர்க்கட்சி … Read more

தான் ரஷ்யா சென்றதால் இந்தியாவை ஆதரிக்கும் சக்திவாய்ந்த நாடு பாகிஸ்தான் மீது கோபம் – இம்ரான் கான்

இஸ்லாமாபாத் பாதுகாப்பு உரையாடலில் பேசிய இம்ரான் கான், நாட்டிற்கு ஒரு சுதந்திரமான வெளியுறவுக் கொள்கை முக்கியமானது என்று வலியுறுத்தினார். மேலும், பாகிஸ்தானால் அதன் உச்சக்கட்டத் திறனைத் தொட முடியாததற்குக் காரணம் மற்ற சக்தி வாய்ந்த நாடுகளைச் சார்ந்திருக்கும் குறைபாடுதான் காரணம் என்று கூறினார். தனக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு முன்னதாக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சமீபத்தில் அதிபர் விளாடிமிர் புதினை சந்திக்க ரஷ்யாவிற்கு சென்றதால், இந்தியாவை ஆதரிக்கும் ஒரு சக்திவாய்ந்த நாடு பாகிஸ்தான் … Read more

11ம் வகுப்பு மாணவியுடன் திருமணம்.. 45 வயது நபர் மீது பாய்ந்தது போக்சோ..!

16 வயது சிறுமியை திருமணம் செய்த 46 வயது நபரை காவல்துறையினர் கைது செய்தனர். கோவை, ரத்தினபுரி பகுதியை சேர்ந்தவர் செந்தில. இவருக்கு அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், அந்த சிறுமியிடம் காதலிப்பதாக கூறிய செந்தில் திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். இந்நிலையில், அவரை திருப்பதி அழைத்து சென்று திருமணம் செய்ததோடு பல இடங்களில் தங்கவைத்து பாலியல் வன் கொடுமையும் செய்துள்ளார். சிறுமியை காணது அவர் பெற்றோர் காவல்துறையில் … Read more

“ஆன்லைனில் படிக்கும்போது மாணவர்கள் தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்!" – மோடி அறிவுரை

டெல்லி, டால்கடோரா மைதானத்தில் நடைபெற்ற ‘பரிக்‌ஷா பே சர்ச்சா’ நிகழ்ச்சியில் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் பயமின்றி தேர்வை எதிர்கொள்ளும் விதமாக மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். மாணவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்குப் பிரதமர் மோடி பதிலளித்தார். பிரதமர் மோடி அப்போது பேசிய அவர், “தேர்வு என்பது வாழ்க்கையின் ஒரு அங்கம். தேர்வில் நாம் பெற்ற அனுபவம் வாழ்வில் கைகொடுக்கும். பல்வேறு பண்டிகைகளுக்கு மத்தியில் பொதுத்தேர்வுகள் வர … Read more