பா.ஜ.க கல்யாணராமன் மீதான குண்டர் சட்டம் ரத்து; ஐகோர்ட் உத்தரவு

பாஜக செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன், கடந்த ஆண்டு ஜனவரியில் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில், நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்து பேசியதாக புகார்கள் எழுந்தன. கல்யாணராமனின் சர்ச்சை கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், இஸ்லாமியார்கள் போராட்டம் நடத்தியதையடுத்து, கல்யாணராமனை போலீசார் கைது செய்தனர். மேலும், பாஜக செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் மீது தமிழகம் முழுவதும் புகார்கள் குவிந்ததை அடுத்து அவர் மீது குண்டர் சட்டம் உட்பட பல்வேறு சட்டத்தின் கீழ் … Read more

சென்னையில் அனைவருக்கும் இலவச பேருந்து பயணம் – மருத்துவர் அன்புமணி இராமதாஸின் சூப்பர் ஆலோசனை.!

சென்னையை அடுத்த எழும்பூரில் உள்ள மெட்ராஸ் ஸ்கூல் ஆப் சோஷியல் ஒர்க் கல்லூரியில் “பருவநிலை மாற்றம்” தொடர்பான கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. இந்த கருத்தரங்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பா.ம.க இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவிக்கையில், “பருவ காலநிலை மாற்றம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஆனால் இது குறித்து பல மாணவர்களிடையே குறைவான விழிப்புணர்வே உள்ளது. இந்தக் காலநிலை மாற்றத்தினால் வருங்கால தலைமுறையினருக்கு தான் மிக அதிகமான … Read more

“இந்தியா விரும்புவதை வழங்க நாங்கள் தயார்..!" – ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் பேட்டி

உக்ரைனில் 37-வது நாளாக ரஷ்யப்படையினர் உக்ரேனியப் படைகளுடன் போர் நடத்தி வரும் சூழலில், ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ்(Sergey Lavrov) இரண்டு நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தடைந்தார். பிப்ரவரி 24 முதல் உக்ரைனில் நடைபெற்றுவரும் இந்தப் போர் தொடர்பாக அமெரிக்கா, கனடா, ஐரோப்பா உட்பட மேற்கு நாடுகள் பலவும் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பைக் கண்டித்து பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. ஆனால், இந்தியா இந்த விவகாரத்தில் ரஷ்யா, உக்ரைன் என எந்த நாட்டுக்கும் ஆதரவளிக்காமல் தொடர்ந்து நடுநிலை … Read more

கழற்றிவிட்ட காதலி – சபதமெடுத்த காதலன்.. “ஜோக்கர் ஜோடி” திருடர்களின் பின்னணி.!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சுற்றுவட்டாரத்தில் ஜோக்கர் முகமூடி, குடை சகிதம் சென்று 3 மாதங்களில் 10க்கும் மேற்பட்ட திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட “ஜோக்கர் ஜோடி” திருடர்களில் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். வசதி இல்லாதவன் என்பதால் கழற்றிவிட்ட காதலி முன் கோடீஸ்வரனாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்பதற்காக திருடர்களாக மாறியது தெரியவந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் உட்கோட்ட காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட குளச்சல், கருங்கல், நித்திரவிளை, வெள்ளிச்சந்தை, கொல்லங்கோடு பகுதிகளில் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர், நவம்பர், … Read more

'4.5 லட்சம் அங்கன்வாடிகளில் குடிநீர், கழிவறை வசதி இல்லை' – மத்திய அரசு அதிர்ச்சி பதில்

சென்னை: நாட்டில் 4.5 லட்சம் அங்கன்வாடிகளில் குடிநீர், கழிவறை வசதிகள் இல்லை என மத்திய அரசு அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளது. நாட்டிலுள்ள அங்கன்வாடிகள் நிலை குறித்து மாநிலங்களவையில் திமுக எம்.பி. கனிமொழி என்.வி.என்.சோமு கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி அளித்த பதிலில், “கடந்த மூன்றாண்டுகளில் 13.99 லட்சம் அங்கன்வாடிகள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டு, அதில் 13.89 லட்சம் அங்கன்வாடிகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. இதில் 12.55 லட்சம் அங்கன்வாடிகள் … Read more

கடம்பூர் பேரூராட்சி தேர்தல் தகராறு: ஆவணங்களை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கடம்பூர் பேரூராட்சி தேர்தலில் ஏற்பட்ட தகராறு தொடர்பான புகார்கள், அதுதொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள், சாட்சியங்கள் உள்ளிட்டவை குறித்த ஆவணங்களை தாக்கல் செய்ய மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் பேரூராட்சி தேர்தலை ரத்து செய்து பிப்ரவரி 7-ம் தேதி மாநில தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து பேரூராட்சியில் உள்ள 3 வார்டுகளின் சுயேச்சை வேட்பாளர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். 1-வது வார்டு சுயேச்சை வேட்பாளர் எஸ்.வி.எஸ்.பி.நாகராஜா, 2-வது … Read more

11 ஆண்டுகள்… தொடரும் யுத்தம்… – சிரியா சந்தித்த பேரிழப்புகள் – ஒரு பார்வை

“என் நாடு என்னைப் போலவே மிகச் சிறியது எங்கள் நிலம் எரிந்து கொண்டிருக்கிறது வெடிகுண்டு சத்தத்தால் எங்கள் புறாக்கள் பறப்பதில்லை எங்கள் வானம் கனவு கண்டுகொண்டிருக்கிறது, அந்த நாட்களைக் கேட்டு எங்களது குழந்தைப் பருவத்தை திருப்பித் தாருங்கள்” என்ற பாடலை சவுதியின் வாய்ஸ் நிகழ்ச்சியில் பாடிய க்யூனா என்ற சிரிய சிறுமியை சர்வதேச அரசியலைக் கவனிக்கும் யாரும் மறந்திருக்க முடியாது. பானா அல்பெட், அய்லான், ஓம்ரான் இந்தப் பெயர்களும் அப்படித்தான்.இவர்கள் அனைவரும் சிரிய போரின் தாக்கத்தை நம் … Read more

ஜி.வி. பிரகாஷின் 'செல்ஃபி' படம் எப்படி இருக்கு..?: முழு விமர்சனம் இதோ..!

இசையமைப்பாளராக இருந்து தற்போது ஹீரோவாக கலக்கி வருபவர் ஜி.வி. பிரகாஷ் குமார் . இவர் நடிப்பில் கடைசியாக கடந்த ஆண்டு வெளியான ‘பேச்சுலர்’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்நிலையில் தற்போது ஜி.வி. பிரகாஷ் மற்றும் கெளதம் மேனன் நடிப்பில் ‘ செல்ஃபி ‘ படம் வெளியாகியுள்ளது. வர்ஷா பொல்லம்மா, வாகை சந்திரசேகர், சங்கிலி முருகன், தங்கதுரை ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கவுதம் மேனனின் மனைவியாக சிறிய கதாபாத்திரத்தில் நடிகை வித்யா நடித்துள்ளார். இன்ஜினியரிங் … Read more

ரூ.399க்கு அதிவேக ஃபைபர் இன்டர்நெட் – சூப்பர் ஆஃபர்களுடன் டாடா டெலி பிராட்பேண்ட்!

வீட்டில் இருந்து அலுவலக பணிகளை பலர் மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு சிறந்த பிராட்பேண்ட் சேவை தேவைப்படுகிறது. பல நிறுவனங்கள் சேவைகளை அளித்தாலும், குறைந்த கட்டணத்தில் நல்ல வேகத்துடன் இன்டர்நெட் சேவை வழங்குநர்கள் குறைவாகவே உள்ளனர். இந்த குறையை முற்றிலுமாகப் போக்க TATA TELE BROADBAND பயனர்களுக்காக குறைந்த விலை இன்டர்நெட் சேவையை வழங்குகிறது. டாடாவின் Fiber ஆப்டிக்ஸ் சேவை, அதிவேக பிராட்பேண்டை இல்லத்தில் கொண்டு சேர்க்கிறது. இதனால், குறைந்த செலவில் வேலைகளை நிறைவாக செய்ய முடியும். டாடா … Read more

ஆளுங்கட்சி எம்பியை நோக்கி முட்டை வீச்சு தாக்குதல்

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க பயணித்த வாகனம் மீது இன்று முட்டை வீச்சு தாக்குதல்  மேற்கொள்ளப்பட்டுள்ளது.  வெல்லவாய பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்த வேளை இவ்வாறு  தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இவர் ஆளுங்கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. Source link