விமான எரிபொருள் விலை 2 சதவீதம் அதிகரிப்பு

புதுடெல்லி: விமான இயக்கத்திற்கு ஜெட் எரிபொருள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 15 நாட்களுக்கு ஒரு முறை என மாதத்தில் 1 மற்றும் 16-ந்தேதிகளில் சர்வதேச நிலையை பொறுத்து விமானத்துக்கான ஜெட் எரிபொருள் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த மாதம் 16-ந்தேதி எப்போதும் இல்லாத வகையில் ஜெட் எரிபொருள் விலை 18.3 சதவீதம் உயர்த்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில் விமான எரிபொருள் விலை இன்று 2 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது. ஒரு கிலோ லிட்டருக்கு 2,258.54 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது … Read more

ஆசிரியர்களை பள்ளிக்கு உள்ளேயும், வெளியேயும் கண்காணிக்க கூறிய தனி நீதிபதி உத்தரவு ரத்து

மதுரை: ஆசிரியர்களை பள்ளிக்கு உள்ளேயும், வெளியேயும் கண்காணிக்க கூறிய தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை பட்டதாரி ஆசிரியர் முத்து வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

'தேர்வுகளால் பெற்றோருக்கே பதற்றம்; நீங்கள் பதற்றம் அடைய வேண்டாம்': பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டிய பிரதமர் மோடி..!!

டெல்லி: பொதுத்தேர்வு எழுத உள்ள பள்ளி மாணவர்களின் தேர்வு மன அழுத்தத்தை போக்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் கலந்துரையாடினார். பரீட்சைகளை கண்டு பல இடங்களில் மாணவர்கள் கவலை கொள்கிறார்கள். சில நேரங்களில் தேர்வு முடிவு எவ்வகையில் இருக்கும் என்ற கவலையில் தற்கொலை போன்ற விபரீத முடிவுகள் எடுக்கின்றனர். இவை அனைத்தும் தவறு என்பதை வலியுறுத்தும் வகையிலும், பரீட்சைகளுக்கு முன்கூட்டியே தயாராக வேண்டும் என்பதை வலியுறுத்தியும் ஆண்டுதோறும் பரீக்ஷா பே சர்ச்சா என்ற நிகழ்ச்சி மூலம் … Read more

தொடர்ந்து உயரும் நூல் விலை – அதிர்ச்சியில் பின்னலாடை உற்பத்தியாளர்கள்

இந்த மாதத்திற்கான நூல் விலை கிலோவுக்கு ரூ.30 உயர்ந்துள்ளதால் திருப்பூரில் தொழில்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருப்பூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக இருப்து நூல் ஆகும். இந்நிலையில், தொழில் துறையினர் தங்களுக்கு ஆர்டர்கள் கிடைத்தவுடன், அதற்கேற்றபடி நூல்களை மொத்தமாக கொள்முதல் செய்து ஆடைகளை தயாரிப்பாளர்கள். நூல் விலை உள்பட மூலப்பொருட்களின் விலையை கருத்தில் கொண்டு ஆடைகளின் விலை நிர்ணயம் … Read more

டில்லியில் அரசு பள்ளிகளை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின்| Dinamalar

புதுடில்லி: டில்லி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், அம்மாநில முதல்வர் கெஜ்ரிவாலுடன் இணைந்து அரசு முன்மாதிரி பள்ளிகளை ஆய்வு செய்தார். டில்லி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், இன்று காலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார். தொடர்ந்து முதல்வர் கெஜ்ரிவாலையும் சந்தித்தார். தொடர்ந்து, இருவரும் மேற்கு வினோத் நகரில் உள்ள அரசு பள்ளிகளை பார்வையிட்டனர். அவர்களுடன் துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவும் சென்றார். அங்கு பள்ளி மாணவிகள், ஸ்டாலினை பூகொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து, டில்லியில் அரசு பள்ளிகள் … Read more

'ஆர்ஆர்ஆர்' சர்ச்சைகளுக்கு ஆலியா பட் விளக்கம்

ராஜமவுலி இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான 'ஆர்ஆர்ஆர்' படத்தின் கதாநாயகிகளில் ஒருவராக பாலிவுட் நடிகையான ஆலியா பட் நடித்திருந்தார். ஆனால், படத்தில் அவருக்கு முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரமே அமைந்தது என விமர்சனங்கள் எழுந்தன. அதனால், கோபமடைந்த ஆலியா அவரது சமூக வலைத்தள பக்கங்களில் இருந்து 'ஆர்ஆர்ஆர்' சம்பந்தப்பட்ட சில பதிவுகளை நீக்கியதாகவும், இயக்குனர் ராஜமவுலியை 'அன்பாலோ' செய்துவிட்டதாகவும் சர்ச்சை எழுந்தது. இருப்பினும் அடுத்த சில நாட்களிலேயே 'ஆர்ஆர்ஆர்' படம் பாலிவுட்டில் 100 கோடி வசூலைக் கடந்தது குறித்து … Read more

தங்கம் விலை ரூ.3600-க்கு மேல் வீழ்ச்சி.. வாங்க சரியான இடமா..ஆபரண தங்கம் நிலவரம் என்ன?

தங்கம்(gold) விலையானது இந்த வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று, பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் சர்வதேச சந்தையில், அதன் எதிரொலியாக இந்திய சந்தையிலும் சற்று சரிவில் காணப்படுகின்றது. இது முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியினை கொடுத்துள்ளது எனலாம். அதேசமயம் ஆபரணத் தங்கத்தின் விலையானது சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது தங்க ஆர்வலர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தினையே கொடுத்துள்ளது. இது சமீபத்திய உச்சமான 55,558 ரூபாயில் இருந்து பார்க்கும்போது 10 கிராமுக்கு 3,600 ரூபாய்க்கு மேலாக சரிவில் காணப்படுகின்றது. ரூ.4800 … Read more

முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் – மாவட்ட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக ஆராய்வு

முல்லைத்தீவு மாவட்டத்தின் நடப்பாண்டுக்கான முதலாவது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்; மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நேற்று (31) இடம்பெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதனின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மற்றும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணை தலைவருமான காதர் மஸ்தான் ஆகியோரின் இணை தலைமையில் நடைபெற்றது. இதன்போது மத்திய மற்றும் மாகாண அமைச்சுக்களால் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டதுடன் அவை … Read more

Kitchen Tips: முட்டைகளை பிரிட்ஜில் சேமிக்கலாமா? கூடாதா?

முட்டைகளை சேமிப்பதற்கான சரியான வழி என்ன என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? சில நாடுகளில் முட்டைகளை பிரிட்ஜில் சேமித்து வைக்கக்கூடாது என்று நம்பப்படுகிறது, ஏனெனில் அது முட்டையின் சுவையை பாதிக்கலாம். மற்ற இடங்களில் முட்டைகளை பிரிட்ஜில் சேமித்து வைப்பதே முட்டைகளின் ஆயுளை அதிகரிப்பதற்கான சரியான வழி என்று நம்பப்படுகிறது. முட்டைகளின் புத்துணர்ச்சியைத் தக்கவைத்துக்கொள்வதற்கான சரியான வழியைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இங்கே. முட்டைகளை சேமிக்க சரியான வழி என்ன? சிலர் முட்டைகளை சாதாரண அறை … Read more

என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே.., தயாராக இருங்கள்., மருத்துவர் இராமதாஸ் பரபரப்பு கடிதம்.!

தொண்டர்களுக்கு சற்றுமுன் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் எழுதியுள்ள கடிதத்தில், “நாமின்றி சமூகநீதியில்லை… நிச்சயம் வெல்வோம் கலங்காதே., என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே! வன்னியர் 10.50% உள் இடஒதுக்கீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு உங்களுக்கு கவலையையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கக் கூடும். இனி என்ன செய்யப் போகிறோம் நாம்? என்ற உங்களில் பலரின் ஏக்கத்தையும் நான் அறிவேன். உங்களின் ஏக்கத்தைப் போக்குவதற்காகவும், உண்மையை விளக்குவதற்காகவும் தான் பாட்டாளிகளாகிய உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். தமிழ்நாட்டில் கல்வி … Read more