உங்கள் பணத்தை மிச்சப்படுத்தும் ஒரே ஏசி!

இந்த ஆண்டின் கோடை காலம் தொடங்கிவிட்டது. முன்பை விட வெப்பம் அதிகளவில் உணரப்படுகிறது. இதனைத் தணிக்க மின்விசிறி, ஏசி, ஏர் கூலர்கள் உதவுகின்றன. கடந்த சில நாட்களாக பல நகரங்களில் வெப்பச் சலனம் நிலவுகிறது. வெப்பத்தை தணிக்க மக்கள் ஏசியை நாடிச் செல்கின்றனர். சந்தையில் பல தரத்தில் ஏசிக்கள் விற்கப்படுகிறது. இருப்பினும், இதன் செலவு வாங்குவதோடு நின்று விடுவதில்லை. அதன் பிறகு நம் பயன்பாட்டைப் பொறுத்து அதிகளவிலான மின்கட்டணத்தை செலுத்த வேண்டி இருக்கும். அதுமட்டும் இல்லாமல் பராமரிப்புக்காக … Read more

பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயமில்லை – தென்கொரிய சுகாதாரத்துறை அறிவிப்பு.!

தென்கொரியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால், பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்பட உள்ளது. வரும் திங்கட்கிழமை மக்கள் பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயமில்லை எனவும் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் கூட்டங்களிலும் விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்வுகளிலும் பங்கேற்கும் போது முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அதே போல, பொது போக்குவரத்தில் பயணிக்கும் போதும் முகக்கவசம் அணிய வேண்டுமென்ற உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்குமெனவும் தெரிவித்துள்ளனர். … Read more

குழந்தைகளின் மனிதநேய உறவுகளுக்குத் துணைபோகும் “அக்கா குருவி’’!

“அக்கா குருவி’’யாகத் தமிழில் வருகிறது “சில்ட்ரென் ஆப் ஹெவன்’’. உலகத் திரைப்பட வரிசையில் “சில்ட்ரன் ஆப் ஹெவன்’’ திரைப்படத்தை நேரம் கிடைக்கும் போதெல்லாம் பார்க்கிற பழக்கத்தை வைத்திருக்கிறேன். தொடக்கப் பள்ளிகளில் நாம் சந்தித்த வாழ்வியல் முறையை மீண்டும் எட்டிப் பார்க்க வைக்கும் அதிசயத்தை நான் உணர்வேன். வறுமையின் வடிவங்கள் இயல்பானவை. காலத்தின் வேகம் அளவிட முடியாதவை. ஆனால் கடந்த கால நினைவுகளின் தாக்கம் நம் இதய வலிகளை ஆறுதல் படுத்த உதவும். பகையைப் பொறுத்துப் போகச் சொல்லிய … Read more

உக்ரைனை மொத்தமாக முடித்துவிடுவோம்… புடினுக்கு இராணுவ தளபதிகள் அழைப்பு

புடின் எதிர்பார்த்ததுபோல உக்ரைனை எளிதாக கைப்பற்ற முடியாததால் விரக்தியடைந்துள்ள ரஷ்ய இராணுவத் தளபதிகள், உக்ரைன் மீது முழுமையாக போர் அறிவிக்கும்படி புடினுக்கு அழைப்பு விடுத்துள்ளார்கள். பிப்ரவரி மாத இறுதியில் உக்ரைனை ஊடுருவும்போது, தாங்கள் உக்ரைன் மீது போர் தொடுப்பதாகக் கூறாமல், உக்ரைனிலிருந்து நாஸிக்களை அகற்றுவதற்காகவும், உக்ரைனை இராணுவமயமற்றதாக்குவதற்காகவும் சிறப்பு இராணுவ ஆபரேஷன் ஒன்றை மேற்கொள்வதாகத்தான் அறிவித்தார் புடின். அதற்குக் காரணம், எளிதாக உக்ரைனைக் கைப்பற்றிவிடலாம் என அவரும் அவரது இராணுவத் தளபதிகளும் போட்ட தப்புக் கணக்குதான். ஆனால், … Read more

இந்தியாவின் புதிய ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் நாளை பதவியேற்பு…!

டெல்லி: இந்தியாவின் புதிய ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பான்டே நாளை பதவியேற்கிறார். இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக உள்ள மனோஜ் முகுந்த் நரவனே இன்றுடன் பனி ஒய்வு பெறுகிறார் இந்திய ராணுவத்தின் புதிய தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே  நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.  இதற்கு முன்பு துணை தலைமை தளபதியாக இருந்த லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே, புதிய ராணுவ தலைமை தளபதியாக நாளை பொறுப்பேற்ற உள்ளார். . இந்நிலையில், ராணுவத்தின் துணை தலைமைத் தளபதியாக பி.எஸ். ராஜூ நியமிக்கப்பட்டுள்ளாா். அவர் நாளை (மே 1-ஆம் தேதி) … Read more

பிளாஸ்டிக் குப்பையை எரிக்கும் நடமாடும் ஆலையை தொடங்க கூடாது- அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர். அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை பெருநகரில் காற்று மாசுபாட்டை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வரும் சூழலில், சென்னை மாநகராட்சியே குப்பைகளை எரியூட்டும் நடமாடும் ஆலையை அமைப்பதன் மூலம் காற்று மாசுபாட்டை திணிப்பது தவறான முன் உதாரணம் ஆகிவிடும். இலவசமாக தருகிறார்கள் என்பதற்காக நஞ்சை குடிக்க முடியாது. தங்க ஊசி என்பதற்காக கண்ணில் குத்திக் கொள்ள முடியாது என்பதைப் போல, சமூக பங்களிப்பு நிதியின் … Read more

முதல்-மந்திரிகள், தலைமை நீதிபதிகள் பங்கேற்ற கூட்டு கருத்தரங்கம்- பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

புதுடெல்லி: நாட்டில் உள்ள 25 ஐகோர்ட்டுகளின் தலைமை நீதிபதிகளுக்கான 39வது மாநாடு டெல்லியில் நேற்று நடந்தது. 6 ஆண்டுகளுக்கு பிறகு இந்த மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா தங்கள் சீரிய முயற்சியால் ஒரே ஆண்டில் 126 ஐகோர்ட்டு நீதிபதி பணியிடங்கள் நிரப்பப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். இதன் பிறகு நீதிமன்ற கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், காலி பணியிடங்களை நிரப்புதல். சட்ட சீர்திருத்தங்கள் உள்ளிட்ட 6 அம்சங்கள் குறித்து விவாதங்கள் நடைபெற்றது. … Read more

ஆப்கானிஸ்தானின் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு- 50 பொதுமக்கள் பலி

காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மேற்கு பகுதியில் உள்ள கலிபா ஷகிப் மசூதியில் ஏராளமானோர் தொழுகை செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று மசூதியில் பயங்கர குண்டு வெடித்தது. தொழுகையில் ஈடுபட்டிருந்த பலர் ரத்த வெள்ளத்தில் சிதறினர். இந்த குண்டு வெடிப்பில் 50க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்து கீழே கிடந்தனர். அவர்களை மீட்ட காவல்துறையினர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.  இதுகுறித்து மசூதியின் தலைவர் சையத் பசில் கூறும்போது, தொழுகையின் போது எங்களுடன் தற்கொலை தாக்குதல் நடத்தும் … Read more

தஞ்சை சப்பர விபத்தில் 11 பேர் இறந்தது தொடர்பாக ஒருநபர் குழு விசாரணையை தொடங்கியது

தஞ்சை : தஞ்சை சப்பர விபத்தில் 11 பேர் இறந்தது தொடர்பாக ஒருநபர் குழு விசாரணையை தொடங்கியது. விசாரணைக்கு முன் ஆட்சியர், எஸ்.பி. உள்ளிட்டோருடன் ஒருநகர் குழுவின் குமார் ஜெயிந்த ஆலோசனை மேற்கொண்டார்.

பெண் நீதிபதிகள் நீண்டநேரம் நீதிமன்றங்களில் அமர பயப்படக்கூடிய நிலைமைதான் தற்போது இருக்கிறது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா பேச்சு

டெல்லி: பெண் நீதிபதிகள் நீண்டநேரம் நீதிமன்றங்களில் அமர பயப்படக்கூடிய நிலைமைதான் தற்போது இருக்கிறது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா தெரிவித்திருக்கிறார். டெல்லியில் முதல்வர்கள் மற்றும் தலைமை நீதிபதிகளின் ஒருங்கிணைந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். ஐகோர்ட் தலைமை நீதிபதிகள் மாநாட்டின் 2வது நாளில் நடக்கும் நிகழ்வில் பல் மாநில முதல்வர்கள் பங்கேற்றுள்ளனர். உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மாநாட்டில் தமிழ்நாடு சார்பில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பங்கேற்றுள்ளார். பல மாநிலங்களில் உச்சநீதிமன்ற கிளைகள் அமைப்பது … Read more