சாதாரண மனிதனாக வாழ விருப்பம் : நடிப்பிற்கு பிரேக் கொடுத்த ஸ்பைடர் மேன் ஹீரோ

பிரபல ஹாலிவுட் நடிகர் ஆண்ட்ரு கார்பீல்ட். பாய் ஏ, லயன்ஸ் பார் லாம்ப்ஸ் படங்களில் நடித்த அவர் பின்பு ஸ்பைடர் மேன் ஆனார். தி அமேஸிங் ஸ்பைடர்-மேன், அமேஸிங் ஸைபடர்-மேன் 2, ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம் படங்களில் நடித்து உலக புகழ் பெற்றார். இதுதவிர 99 ஹோம்ஸ், டிக், டிக்…பூம், உட்பட பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக அண்டர் த பேனர் ஆப் ஹெவன் என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்து வந்தார்.

இந்த நிலையில் தான் நடிப்பில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: நடிப்புக்கு கொஞ்சம் ஓய்வு கொடுக்கப் போகிறேன். அடுத்து என்ன செய்ய வேண்டும்; நான் யாராக இருக்க வேண்டும் என்பதை மறுபரிசீலனை செய்ய இருக்கிறேன். சிறிது காலம் சாதாரணமான மனிதனாக இருக்க விரும்புகிறேன். என்று அவர் கூறியிருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.