பழி தீர்த்த ரஷ்யா… சிக்கலில் ஐந்தாவது ஐரோப்பிய நாடு: அச்சத்தில் பொதுமக்கள்


டென்மார்க்குக்கான எரிவாயு விநியோகத்தை ரஷ்யா துண்டித்துள்ளதாக அந்த நாட்டின் எரிவாயு நிறுவனங்கள் அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் விவகாரம் தொடர்பில் தமக்கு எதிரான நாடுகளை ரஷ்யா தொடர்ந்து பழி வாங்கி வருகிறது.
அந்த வரிசையில் ஐந்தாவது ஐரோப்பிய நாடாக டென்மார்க் இணைந்துள்ளது.

ஜூன் 1ம் திகதி முதல் ரஷ்ய எரிவாயு நிறுவனமான Gazprom டென்மார்க் நாட்டுக்கான எரிவாயு விநியோகத்தை துண்டிக்கவிருப்பதாக அறிவித்துள்ளது.
குறித்த தகவலை டென்மார்க்கின் Orsted நிறுவனம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

பழி தீர்த்த ரஷ்யா... சிக்கலில் ஐந்தாவது ஐரோப்பிய நாடு: அச்சத்தில் பொதுமக்கள்

உள்ளூர் நேரப்பட்டி காலை 6 மணி முதல் எரிவாயு விநியோகம் துண்டிக்கப்படும் என ரஷ்ய நிறுவனம் Gazprom தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் போருக்கு பின்னர் ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட, அதை எதிர்கொள்ளும் வகையில், தங்களிடம் எரிவாயு மற்றும் மின்சாரம் கொள்முதல் செய்யும் நாடுகள் உள்ளூர் பணத்திலேயே வர்த்தகம் மேற்கொள்ள வேண்டும் என ரஷ்யா அறிவித்தது.

மேலும், வாடிக்கையாளர்கள் இதற்கென ரூபிள் கணக்கு ஒன்றையும் துவங்க கோரியிருந்தது, மறுப்பு தெரிவிப்பவர்களுக்கு எரிவாயு விநியோகம் துண்டிக்கப்படும் எனவும், காலக்கெடு விதித்திருந்தது.

பழி தீர்த்த ரஷ்யா... சிக்கலில் ஐந்தாவது ஐரோப்பிய நாடு: அச்சத்தில் பொதுமக்கள்

இந்த நிலையில், தற்போது டென்மார்க் மீது ரஷ்யா பழி தீர்த்துள்ளது. நேற்று நெதர்லாந்தின் எரிவாயு விநியோகத்தை ரஷ்யா துண்டித்திருந்தது.
மே 21ம் திகதி பின்லாந்தின் எரிவாயு விநியோகத்தையும் ஏப்ரல் மாதத்தில் போலந்து மற்றும் பல்கேரியாவின் எரிவாயு விநியோகத்தையும் ரஷ்யா துண்டித்திருந்தது.

இதனிடையே தங்கள் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்க டென்மார்க் மற்றும் ஜேர்மனியில் உள்ள அதன் சேமிப்பு வசதிகளில் எரிவாயு நிரப்பிக் கொண்டிருப்பதாக Orsted நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

ரஷ்யாவில் இருந்து நேரடியாக தங்கள் நாட்டுக்கு எரிவாயு விநியோகம் முன்னெடுக்கப்படுவதில்லை எனவும், ரஷ்யாவால் தங்களுக்கான எரிவாயு விநியோகத்தை நேரடியாக துண்டிக்க முடியாது எனவும், இதனால் தற்போதைய சூழலில் பொதுமக்கள் அச்சப்படத் தேவை இல்லை எனவும் Orsted நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இருப்பினும், எரிவாயு கட்டாயம் தேவை என்பதால் ஐரோப்பிய சந்தையில் இருந்து கொள்முதல் செய்வது தொடர்பில் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என Orsted நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

பழி தீர்த்த ரஷ்யா... சிக்கலில் ஐந்தாவது ஐரோப்பிய நாடு: அச்சத்தில் பொதுமக்கள்

இதனிடையே, இந்த ஆண்டு இறுதிக்குள் ரஷ்யாவில் இருந்து 90% அளவுக்கு எண்ணெய் இறக்குமதியை குறைக்க இருப்பதாக ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் முடிவு செய்ததன் பின்னரே ரஷ்யாவின் இந்த நடவடிக்கை பாய்ந்துள்ளது.

ரஷ்யாவின் இந்த அதிரடி நடவடிக்கையால் சந்தையில் எரிவாயு விலை 5% அளவுக்கு அதிகரித்துள்ளது.
ரஷ்யாவின் இந்த அதிரடி முடிவு வாடிக்கையாளர்களை கட்டாயம் பாதிக்கும் என்றே கூறப்படுகிறது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு பின்னர் ஐரோப்பாவின் எரிசக்தி விலை கடுமையாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.