ரோகித் சர்மாவின் குணங்களை ஹர்திக் பாண்டியா வெளிப்படுத்தி வருகிறார்- சுனில் கவாஸ்கர்

மும்பை, 15-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறு விறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற 43-வது லீக் ஆட்டத்தில் டூ பிளஸிஸ் தலைமையிலன பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைடன்ஸ் அணி வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் அறிமுக அணியான குஜராத் அணி நடப்பு தொடரில் 8-வது வெற்றியை பதிவு செய்துள்ளது. பேட்டிங், பந்துவீச்சு என அசத்தும் குஜராத் அணி 16 புள்ளிகளுடன் … Read more

#லைவ் அப்டேட்ஸ்: நீண்ட காலத்திற்கு கெர்சானில் வலுவான செல்வாக்கை செலுத்த விரும்பும் ரஷியா..!!

கீவ்,  உக்ரைன் மீதான ரஷிய போர், உலகளவில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த போர் தொடர்பாக இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகள் பின்வறுமாறு:- மே 01,  12.05 p.m நீண்ட காலத்திற்கு உக்ரைனின் கெர்சானில் வலுவான செல்வாக்கை செலுத்த ரஷியா விரும்புகிறது: இங்கிலாந்து மாஸ்கோ சார்பு நிர்வாகத்தை நிறுவுவதன் மூலம் கெர்சன் நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரஷியா தனது கட்டுப்பாட்டை சட்டப்பூர்வமாக்க முயன்றதாக இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது. புதிய அரசாங்கம் உக்ரைன் … Read more

கடற்றொழிலாளர்களுக்கு முக்கிய வானிலை அறிவிப்பு

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 மே 01ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. காங்கேசந்துறையிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாகபொத்துவில் வரையான ஆழம் குறைந்த மற்றும் ஆழம் கூடிய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் … Read more

மின்வெட்டு புகார் கூறிய இ.பி.எஸ்; நேரில் அழைத்துச் சென்று விளக்குகிறேன் என செந்தில் பாலாஜி பதில்

Senthil Balaji explains EPS electricity resistance issue: சேலத்தில் தனது இல்லத்திலும் இரண்டு மணி நேரமாக மின்வெட்டு ஏற்பட்டதாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதற்கு, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடிக்கடி மின் தடை ஏற்பட்டு வருகிறது. கோடைக்காலத்தில் அதிக பயன்பாடு மற்றும் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக இந்த மின் தடை ஏற்படுவதாக கூறப்படுகிறது. அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது குறித்து எதிர்கட்சிகள் கேள்வி … Read more

கள்ளக்குறிச்சி அருகே 16 வயது சிறுமி கடத்தல்.! 

சங்கராபுரத்தில் 16 வயது சிறுமியை கடத்திச் சென்ற இளைஞரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.  தமிழகத்தில் நாளுக்கு நாள் பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் எதிரான குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பாலியல் தொல்லை, கடத்தல் சம்பவங்கள் உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து உள்ளது. இந்நிலையில், கள்ளக்குறிச்சி அருகே 16 வயது சிறுமியை கடத்திச் சென்ற இளைஞரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.  சங்கராபுரம் அடுத்த பாசார் காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரின் மகன் … Read more

“மின் தடை குறித்து தவறான தகவல்களைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை!" – அமைச்சர் செந்தில் பாலாஜி

கரூரில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில், தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டார். பழைய அரசு மருத்துவக் கல்லூரி வாளகத்தை மீண்டும் அரசு தலைமை மருத்துவமனையாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை, நேரில் ஆய்வு செய்தார். பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த செந்தில் பாலாஜி, “தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் செய்தியாளர்களைச் சந்தித்து தமிழகத்தில் மின்வெட்டு குறித்து உண்மைக்கு புறம்பான தவறான தகவல்களை அளித்து வருகிறார். அவர் பரப்பும் பொய் பிரசாரம் குறித்து, செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. … Read more

நெல்லையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் மாணவர் உயிரிழந்த விவகாரம்.. உடற்கல்வி ஆசிரியர்கள் இருவர் சஸ்பெண்ட்.!

நெல்லையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் 12ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்த விவகாரத்தில், உடற்கல்வி ஆசிரியர்கள் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பள்ளக்கால் பொதுக்குடி அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படிந்து வந்த செல்வசூர்யா என்ற மாணவருக்கும், 11ஆம் வகுப்பு மாணவர் ஒருவருக்கும் சமுதாயக் கயிறு கட்டுவதில் ஏற்பட்ட பிரச்சனை மோதலாக மாறியது. இருவருக்கும் ஆதரவாக அவரவர் நண்பர்கள் ஒன்று கூடி, கற்களை வீசி தாக்கிக் கொண்டதில், பலத்த காயமடைந்த மாணவர் செல்வசூர்யா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். … Read more

இந்தியாவில் இன்று நினைவுகூரப்பட வேண்டியவர் அம்பேத்கர்: திருமாவளவன்

சென்னை: இந்தியாவைப் பொருத்தவரையில் இன்று நினைவுகூரப்பட வேண்டியவர் அம்பேத்கர் என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் தனது மே தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ”அமெரிக்க தேசத்தின் சிகாகோ வீதிகளில் நடந்த தொழிலாளர்களின் போராட்டம்தான் எட்டுமணி நேர வேலை உள்ளிட்ட பல உரிமைகளை மீட்டளித்தது. எனினும், இந்திய தொழிலாளர் வர்க்கம் இன்று நுகரும் உரிமைகள் யாவும் புரட்சியாளர் அம்பேத்கரின் கடின உழைப்பால் விளைந்தவையே ஆகும். அவரது பங்களிப்பை … Read more

டெல்லி, வடமேற்கு இந்தியாவில் நாளை முதல் வெப்ப அலை சற்று குறையும்: வானிலை ஆய்வு மையம்

புதுடெல்லி: திங்கள்கிழமை முதல் டெல்லி மற்றும் வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவின் சில பகுதிகளில் வெப்ப அலை குறைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) இன்று தெரிவித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே முந்தைய ஆண்டை விட வெப்பநிலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. கோடை தொடங்கியது முதலே உஷ்ணம் வாட்டி வதைக்கிறது. இந்த ஆண்டிலும் விதிவிலக்கில்லாமல் கோடை வெயில் தொடங்கிய ஏப்ரல் முதல் வாரத்திலேயே வெப்பம் உயர்ந்தது. பல்வேறு மாநிலங்களிலும் வெப்பநிலை 40 – 45 … Read more

ஆப்கன் பயணிகள் பேருந்து குண்டுவெடிப்பு: ஐஎஸ் பொறுப்பேற்பு

ஆப்கானிஸ்தானில் பயணிகள் பேருந்தில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில், “ ஆப்கனில் கடந்த வாரத்தில் தொடர்ச்சியாக ஐஎஸ் தீவிரவாதிகள் தொடர் குண்டு வெடிப்பு நடத்தி வருகின்றன. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மசூதியில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதலில் 10 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர் மற்றும் பஸ்ஸில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் ஒரு பெண் உயிரிழந்தார். 3 பேர் பலியாகினர். இந்த நிலையில் பஸ்ஸில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாதிகள் … Read more