சமையல் எண்ணெய்களின் இருப்பு மற்றும் விலை கண்காணிப்பு – மத்திய அரசு

புதுடெல்லி, இந்தியாவில் சமையல் எண்ணெய் தேவையை பெருமளவு பூர்த்தி செய்வது பாமாயில் ஆகும். நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் பாமாயில் வினியோகிக்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளிலிருந்து 8.3 லட்சம் டன் பாமாயில் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் இந்தோனேசிய அரசு இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு பாமாயில் ஏற்றுமதி செய்வதற்கு திடீர் தடை விதித்துள்ளது. இதனால் இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை உயரும் என மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில், சமையல் எண்ணெய்களின் இருப்பு மற்றும் அதன் விலை உன்னிப்பாக … Read more

"கேப்டன்சி தனக்கானது இல்லை என ஜடேஜா உணர்ந்துவிட்டார்" – பிரபல வீரர் கருத்து..!!

மும்பை, 2008 ஆம் ஆண்டு ஐ.பி.எல். போட்டிகள் தொடங்கியதில் இருந்து தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 முறை  கோப்பையை வென்றுள்ளது.   அதற்கு முக்கிய காரணமாக கடந்த சீசன் வரை சென்னை அணியின் கேப்டனாக இருந்த தோனி இந்த முறை போட்டி தொடங்குவதற்கு 2 நாட்களுக்கு முன் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி, ரவீந்திர ஜடேஜாவிடம் கேப்டன் பொறுப்பை ஒப்படைத்தார். ஆனால் அது சென்னை அணிக்கு சாதகமாக அமையவில்லை. இதுவரை ஆடிய 8 … Read more

எகிப்தில் கால்வாயில் ரிக்சா கவிழ்ந்ததில் 8 குழந்தைகள் உயிரிழந்த சோகம்

கெய்ரோ, எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவில் இருந்து வடக்கே பெஹைரா மாகாணத்தில் உள்ள நகரத்தில் தொழிற்சாலையில் பணியாற்றியவர்களை ஏற்றி கொண்டு ரிக்ஷா ஒன்று அவர்களை வீட்டில் விடுவதற்காக புறப்பட்டு சென்று உள்ளது. அந்த ரிக்சா வண்டி அந்நாட்டின் நைல் ஆற்றின் டெல்டா பகுதியில் நீர்ப்பாசன கால்வாய் வழியே செல்லும்போது, திடீரென அதில் கவிழ்ந்தது. இதில் ரிக்சாவில் பயணித்த 12 பேரில் 8 குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர்.  மீதம் இருந்த 4 பேர் உயிர் தப்பியுள்ளனர். ரிக்சாவை ஓட்டி … Read more

லாக்கப் மரணத்தை மறைக்க பணம் கொடுத்த போலீஸ்: விக்னேஷ் சகோதரர் பேட்டி

ஏப்ரல் 18ஆம் தேதி இரவு 11 மணியளவில், வி விக்னேஷ் (வயது 23) மற்றும் அவரது  நண்பர்களும் (ஆட்டோ ஓட்டுநர் பிரபு மற்றும் சுரேஷ்) சென்னை நகரின் கெல்லிஸ் பகுதிக்கு அருகே போதைப்பொருள் (கஞ்சா மற்றும் பட்டாக்கத்தி) வைத்திருந்ததாகக் கூறி கைது செய்யப்பட்டனர். ஒரு நாள் கழித்து சென்னையில் உள்ள காவல்நிலையத்தில் 23 வயது இளைஞன் தாக்கப்பட்டு இறந்ததாக தகவல் வெளியானது. ஒரு வாரத்திற்குப் பிறகு, இந்த வழக்கில் அமைதியாக இருக்க காவல்துறை  பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ … Read more

பிரதமர் மோடி சொன்னதோடு நிறுத்தாமல், அதனை நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும் – அமைச்சர் துரைமுருகன்.!

நீதிமன்றங்களில் மாநில மொழிகளை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்று, பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இன்று வேலூர் மாவட்டம், வள்ளிமலை பகுதியில் தொழிலாளர் நாளை முன்னிட்டு, காட்பாடி ஊராட்சி சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகனிடம் செய்தியாளர் ஒருவர், “பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் … Read more

தஞ்சை தேர் விபத்து: `தமிழக அரசிடம் இரண்டு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படும்!' – ஒரு நபர் குழு தகவல்

தஞ்சாவூர் அருகே உள்ள களிமேடு கிராமத்தில் கடந்த 26-ம் தேதி இரவு நடைபெற்ற தேர்த் திருவிழாவில், மின்சாரம் தாக்கி மூன்று சிறுவர்கள் உட்பட 11 பேர் பலியாகினர். காயமடைந்த 17-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியது. களிமேடு தேர் விபத்து குறித்து ஆய்வு இதைத்தொடர்ந்து, விபத்து குறித்து விசாரிக்க வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த் தலைமையில், ஒருநபர் குழுவை … Read more

சென்னையில் மதுபோதையில் நண்பர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் இருவர் கொலை.!

சென்னையில் மதுபோதையில் நண்பர்கள் இடையே ஏற்பட்ட தகராறு இரட்டை கொலையில் முடிந்தது. திருவான்மியூர் மீனவ குப்பம் பகுதியைச் சேர்ந்த நண்பர்களான அருண், சதீஷ், தினேஷ் ஆகிய மூவரும் வேலையில்லாமல் வெட்டியாக ஊர் சுற்றி வந்துள்ளனர். நேற்றிரவு மூன்று பேரும் அதே பகுதியில் நடந்த 16ஆம் நாள் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த நிலையில், நன்றாக குடித்துவிட்டு உணவருந்தியுள்ளனர். அப்போது, விளையாட்டாக பேசிக் கொண்டிருந்த போது அருண் செருப்பைக் கழட்டி தினேஷ் மீது எரிந்ததாக கூறப்படுகிறது. இதில், தினேஷின் … Read more

காரைக்கால் புனித செபஸ்தியார் ஆலய தேர் பவனி

காரைக்கால் தக்களூரில் உள்ள புனித செபஸ்தியார் ஆலய ஆண்டுத் திருவிழா தேர் பவனி நேற்று இரவு நடைபெற்றது. தக்களூர் பகுதியில் உள்ள புகழ்பெற்ற புனித செபஸ்தியார் ஆலயத்தில், ஆண்டு தோறும் 10 நாட்கள் சிறப்பான வகையில் ஆண்டுத் திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.நிகழாண்டு திருவிழா கடந்த ஏப்.21 ம் தேதி இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி நாள் தோறும் மாலை சிறிய தேர் பவனி, 29 ம் தேதி 3 தேர் பவனி நடைபெற்றது.விழாவின் முக்கிய நிகழ்வான மின் … Read more

மும்பையில் ஏழுமலையான் கோயில் கட்ட மகாராஷ்டிரா அரசு 10 ஏக்கர் ஒதுக்கீடு

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தினர் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஏழுமலையான் கோயில் கட்ட தீர்மானித்து, அதனை நடைமுறைப்படுத்தி வருகின்றனர். ஆனால், பக்தர்கள் அதிகமுள்ள மும்பை நகரில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வாடகை இடத்தில் ஏழுமலையான் கோயில் மற்றும் தகவல் மையம் செயல்பட்டு வருகிறது. ஆயிரம் சதுர அடியில் தேவஸ்தானத்திற்கு அங்கு சொந்த இடம் இருந்தாலும் அந்த சிறிய இடத்தில் கோயில் கட்ட முடியாத நிலை இருந்து வந்தது. இதனை அறிந்த மகாராஷ்டிர அரசு, நவி … Read more

மன்னம்பிட்டி வாகன விபத்தில் கணவன், மனைவி உட்பட மூவர் பலி

பொலன்நறுவை – மட்டக்களப்பு பிரதான வீதியில் மன்னப்பிட்டி பாலத்திற்கு அருகில் இன்று காலை 6.30 அளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். தனியார் பேருந்தும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த மூன்று பேரே உயிரிழந்துள்ளதாக மன்னம்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். அரலகங்வில அருணபுர பிரதேசத்தை 67 வயதான யு.டப்ளியூ.ஜீ.ரண்பண்டா, 62 வயதான அவரது மனைவி ஜீ.கே. நந்தவதி மற்றும் இவர்களின் உறவினரான டி.ஜீ.விமலா ரந்தெனிய … Read more