உழைப்பின்றி உலகில்லை… உணர்த்த வரும் மே தினம்..!

உழைக்கும் மக்களின் உயர்வை உணர்த்தும் வகையில், உலகம் முழுவதும் மே முதல் நாளான இன்று தொழிலாளர் தினமாக கொண்டாடப்படுகிறது.  உதிரத்தையே வேர்வையாகச் சிந்தி உழைத்து, மானுட நாகரிகத்தின் வளர்ச்சிக்கு மாபெரும் பங்காற்றுபவர்கள் உழைப்பாளர்கள். 8 மணி நேரம் கொண்ட உழைப்பு நாளை தங்களுடைய உரிமையாகப் பெற்றநாளே மே தினமாகக் கொண்டாடப்படுகிறது. 17 மணி நேரம், 18 மணி நேரமாக இருந்த வேலைநேரத்தை குறைக்க வேண்டுமென அமெரிக்காவிலும், பின்னர் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளிலும் ஏராளமான போராட்டங்கள் … Read more

மரணத்திற்கு தள்ளப்படும் படுகாயமடைந்த ரஷ்ய வீரர்கள்: வெளிவரும் திகிலூட்டும் தகவல்

உக்ரைன் படையெடுப்பில் படுகாயமடைந்த டசின் கணக்கான ரஷ்ய வீரர்கள் கவனிக்கப்படாமல் மரணத்திற்கு தள்ளப்படும் கொடூரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. உக்ரைன் நாட்டவரான சமூக ஊடக செயற்பாட்டாளர் ஒருவர் குறித்த தகவலுக்கு அடிப்படையான காணொளிகளை வெளியிட்டுள்ளார். உக்ரைனில் ரஷ்ய வீரர்கள் படும் அவஸ்தைகளை அவர்களது உற்றார் உறவினர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என தாம் வெளியிடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் ரஷ்ய ஊடகங்கள் உண்மை நிலையை வெளிப்படுத்துவதில்லை எனவும், விளாடிமிர் புடினுக்கு அவர்கள் அச்சப்பட்டு உண்மையை மறைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், … Read more

ஐபிஎல் 2022: குஜராத், மும்பை அணிகள் வெற்றி

மும்பை: ஐபிஎல் தொடரில், குஜராத் பெங்களுரு அணிகள் இடையே நடந்த போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான்- மும்பை அணிகள் இடையே நடந்த போட்டியில் மும்பை அணியும் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரில், குஜராத் பெங்களுரு அணிகள் இடையே நடந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களுரூ அணி பேட்டிங்கை தேர்வு செய்து, 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 170 ரன் குவித்தது. 171 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய குஜராத் அணி 9.3 ஓவரில் 4 … Read more

ஸ்வீடனை மிரட்டும் ரஷியா- வான்வெளியில் அத்துமீறி பறந்த போர் விமானம்

ஸ்டாக்ஹோம்: உக்ரைனை தொடர்ந்து ஸ்வீடன் மற்றும் அதன் அண்டை நாடான பின்லாந்து ஆகியவை நேட்டோ அமைப்பில் உறுப்பினராக முயற்சி செய்து வருகின்றன.  இதற்கு ரஷியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.  இந்த நடவடிக்கை ஐரோப்பிய யூனியன் பகுதியில் ஸ்திரத்தன்மையை பாதிக்கும் என்று ரஷிய அதிபரின் கிரம்ளின் மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். ஸ்வீடன் நடவடிக்கை கூட்டணி மோதலை நோக்கிய செல்வதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும் உக்ரைனுக்கு ஆயுத உதவி வழங்க கூடாது என்றும் … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 62,60,333 பேர் பலி

ஜெனீவா:உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62.60 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 62,60,333 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 51,32,29,643 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 46,70,96,884 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 41,131 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ராஜ்குமார் பேரன் நடிக்க வருகிறார்

பெங்களூரு: பிரசாந்த் நீல் இயக்கிய கேஜிஎப், கேஜிஎப் -2 படங்களையும் தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் இப்போது புதிய படம் தயாரிக்கிறது.கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாரான ராஜ்குமாரின் பேரன் யுவராஜ் குமார் அறிமுகமாகும் படத்தை தயாரிக்க இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. யுவராஜ் குமார் நடிகர் ராஜ்குமாரின் இரண்டாவது மகனும் நடிகருமான ராகவேந்திராவின் மகன் ஆவார். இந்த படத்தை சந்தோஷ் ஆனந்த் ராம் இயக்குகிறார்.

காதி விற்று முதலில் சாதனை| Dinamalar

புதுடில்லி : காதி கிராமோத்யோக் ஆணையத்தின் விற்றுமுதல் கடந்த 2021 – 22ம் நிதியாண்டில் 20.54 சதவீதம் உயர்ந்து, 1.15 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இது குறித்து குறு, சிறு, நடுத்தர துறை நிறுவன அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பிரதமர் மோடியின் தொடர் ஆதரவு காரணமாக கடந்த நிதியாண்டில் காதி கிராமோத்யோக் ஆணையத்தின் விற்றுமுதல் முதன் முறையாக, 1.15 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. இது, வேறு எந்த நுகர்பொருள் நிறுவனத்தின் விற்றுமுதலை விட அதிகம். … Read more

சாதாரண மனிதனாக வாழ விருப்பம் : நடிப்பிற்கு பிரேக் கொடுத்த ஸ்பைடர் மேன் ஹீரோ

பிரபல ஹாலிவுட் நடிகர் ஆண்ட்ரு கார்பீல்ட். பாய் ஏ, லயன்ஸ் பார் லாம்ப்ஸ் படங்களில் நடித்த அவர் பின்பு ஸ்பைடர் மேன் ஆனார். தி அமேஸிங் ஸ்பைடர்-மேன், அமேஸிங் ஸைபடர்-மேன் 2, ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம் படங்களில் நடித்து உலக புகழ் பெற்றார். இதுதவிர 99 ஹோம்ஸ், டிக், டிக்…பூம், உட்பட பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக அண்டர் த பேனர் ஆப் ஹெவன் என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்து வந்தார். இந்த நிலையில் தான் … Read more

தமிழகத்தில் அடுத்தடுத்து இரண்டு நாட்களாக உச்சம் தொட்ட மின்சார பயன்பாடு 

சென்னை: தமிழகத்தில் 2 நாளில் 2 முறை மின்சார பயன்பாடு உச்சத்தை தொட்டுள்ளதாக மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக நாட்டின் பல மாநிலங்களில் மின் தட்டுப்பாடு நிலவி வருகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பல இடங்களில் மின் தடை ஏற்பட்டது. மேலும் நாட்டின் பல மாநிலங்களில் மின் தடை நிலவி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 2 நாட்களில் 2 முறை மின்சார பயன்பாடு உச்சத்தை அடைந்துள்ளது. இதன்படி … Read more

முஸ்லிம் ஓட்டல் குளிர்பானங்களில் கருத்தடை மாத்திரை: கேரள மூத்த அரசியல் தலைவர் பி.சி.ஜார்ஜ் குற்றச்சாட்டு

திருவனந்தபுரம்: முஸ்லிம்கள் நடத்தும் ஓட்டல்களில் பரிமாறப்படும் குளிர்பானங்களில் கருத்தடை மாத்திரை கலக்கப்படுகிறது. இதனால் ஆண்கள், பெண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும் என்று கேரளாவின் மூத்த அரசியல் தலைவர் பி.சி. ஜார்ஜ் தெரிவித்துள்ளார். கேரளாவின் கோட்டயம் மாவட்டம், பூஞ்சார் பகுதியை சேர்ந்தவர் பி.சி. ஜார்ஜ் (70). காங்கிரஸில் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய அவர் பல்வேறு கட்சிகளுக்கு மாறினார். 2019-ல் கேரள ஜனபக்சம்என்ற கட்சியை தொடங்கி, கடந்தமக்களவைத் தேர்தலில் பாஜகவோடு கூட்டணி அமைத்து போட்டியிட்டார். பூஞ்சார் சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து 7 … Read more