திருப்பதியில் ஒரு மாதத்தில் விற்கப்பட்ட லட்டு: எவ்வளவு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

திருப்பதி திருமலையில் வீற்றிருக்கும் ஏழுமலையானை நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். கொரோனா பரவல் குறைந்ததையடுத்து, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனாலும், குறைவான அளவிலேயே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக லட்டு வழங்கப்படும். திருப்பதி லட்டு பிரசாதம் உலகப் புகழ் பெற்றது. இந்த நிலையில், திருப்பதியில் கடந்த ஏப்ரல் மாதம் விற்பனை செய்யப்பட்ட லட்டு பிரசாதம் பற்றிய தகவல் வெளிவந்துள்ளது. திருமலையில் உள்ள அன்ன மைய்யா … Read more

பெஷாவார் தாக்குதலுக்கு காரணமான முக்கியத் தீவிரவாதி சுட்டுக் கொலை – பாகிஸ்தான் ராணுவம்

57 பேரை பலி கொண்ட பெஷாவர் தாக்குதலின் முக்கிய தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. பெஷாவரில் உள்ள மசூதி ஒன்றில் கடந்த மார்ச் 4-ந்தேதி தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 57 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 200-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். பெஷாவர் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹாசன் ஷா பதுங்கியிருந்த இடம் பற்றிய தகவல் கிடைத்ததன் பேரில் ராணுவ வீரர்கள் அப்பகுதியை சுற்றி வளைத்தனர். அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஹாசன் ஷா … Read more

காலையில் திருமணம் மாலையில் தற்கொலை..! கட்டாயத் திருமணத்தால் மணப்பெண் விபரீதம்..!

தெலுங்கானாவில் திருமண நிகழ்ச்சியில் மணமகன் உடன் மகிழ்ச்சியுடன் நடனமாடிய மணப்பெண், திருமணம் முடிந்தபெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  தெலங்கானா மாநிலம் மெஹபூப் நகர் பாத்ததோட்டா பகுதியை சேர்ந்த லட்சுமி மற்றும் அனந்தபூரைச் சேர்ந்த மல்லிகார்ஜுனா ஆகியோரது திருமணம் விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக இரவு திருமண சடங்குகள் மற்றும் பாட்டுக் கச்சேரி, நடன நிகழ்ச்சிகள் ஆகியவை திருமண மண்டபத்தில் கோலாகலமாக நடைபெற்றன. அப்போது நடன நிகழ்ச்சியில் மணமகன் மல்லிகார்ஜுனா உடன் இணைந்து மணப்பெண் லட்சுமி … Read more

மனைவிக்கு கனேடிய விசா விண்ணப்பத்தை இறுதி செய்யும் பணியில் இருந்தார்! திருமணமான 3 மாதத்தில் இறந்த இலங்கை தமிழர்.. புதிய தகவல்

கனடாவில் சாலை விபத்தில் இலங்கை தமிழர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் புதிய தகவல்கள் வெளிவந்துள்ளது. 35 வயதான சுரேஷ் தர்மகுலசிங்கம் என்பவருக்கு கடந்தாண்டு அக்டோபர் மாதம் திருமணம் நடந்தது. இந்த சூழலில் கடந்த டிசம்பர் மாதம் 17ஆம் திகதி இரவு 9.15 மணிக்கு சுரேஷ் உணவகத்தில் இருந்து வெளியே வந்து தனது tractor trailer வாகனம் நிறுத்தப்பட்ட இடத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது டிக்ஸி சாலைக்கு மேற்கே உள்ள டன்டாஸ் தெருவின் குறுக்கே தெற்குத் திசையில் நடந்து … Read more

சென்னை எழும்பூர் ரயில் நிலையம் : கருணாநிதி பெயர் சூட்ட தொடர் கோரிக்கை

சென்னை சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயர் சூட்டத் தொடர்ந்து கோரிக்கை எழுப்பப்படுகின்றது. கடந்த 2019 ஆம் ஆண்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்குக் கடந்த 2019ஆம் ஆண்டு முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்பட்டது. இதையடுத்து, அருகில் இருக்கும் முக்கிய ரயில் நிலையமான எழும்பூருக்கு  முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரை வைக்க வேண்டும் என்ற கோரிக்கை திமுக தரப்பிலிருந்து எழுப்பப்பட்டு வருகிறது. கடந்த 2019ம் ஆண்டு பிரதமர் மோடிக்கு முன்னாள் … Read more

நெல்லை உள்பட 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மேலும், 4 நாட்களுக்கு 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை தகவல் மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.  ஈரோடு, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய … Read more

முன்னாள் அதிபர் மரணம் – ஐக்கிய அமீரகம் செல்லும் இந்திய துணை ஜனாதிபதி

புதுடெல்லி: இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று அரபு அமீரகம் செல்கிறார். ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் கலீஃப்பா உடல் நலக்குறைவு காரணமாக நேற்று முன் தினம் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். இதைதொடர்ந்து, ஷேக் கலீஃப்பாவின் இறுதிச் சடங்கு நேற்று நடைபெற்றது.  அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் கலீஃப்பா மரணமடைந்ததை அடுத்து, நீண்டகால ஆட்சியாளரான ஷேக் முகமது பின் … Read more

இந்தியாவில் ஒரே நாளில் 2,487 பேருக்கு கொரோனா.. 2,878 பேர் குணமடைந்தனர்..13 பேர் பலி

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 2,487 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,31,21,599-ஆக உயர்ந்தது.* புதிதாக 13 பேர் இறந்துள்ளனர்.* இதனால், நாட்டின் … Read more

மருத்துவ சோதனையில் ஆண் போலீஸ் வேலையில் பெண்

புதுடில்லி : மஹராஷ்டிராவில், ஆண் என்பதால் போலீஸ் வேலை மறுக்கப்பட்ட பெண்ணுக்கு, பணி ஒதுக்கீடு செய்யும்படி அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்., மற்றும் காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, நாசிக்கில் ஊரக போலீஸ் பணிக்கான எழுத்து தேர்வுக்கு, பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் தேர்வு பெற்றார். ஆனால், மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு கருப்பை, கரு முட்டை உற்பத்தி இல்லை என்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவருக்கு … Read more

யூலிப் திட்டம்: இந்த பிரிவினருக்கு தேவையற்றது..? உஷாரா இருங்க மக்களே..!

முன்புயெல்லாம் வங்கிலேருந்து பணம் எடுத்துக்கிட்டு வரும்போதுதான் ஜாக்கிரதையா இருக்கணும், இப்ப பணத்தை எடுத்துக்கிட்டு வங்கிக்கு போகும் போதும் ஜாக்கிரதையா இருக்கணும் போலருக்கு. முதியோர் வங்கி வைப்பு நிதி போடப்போகும், இருக்கும் வைப்பு நிதியை புதுப்பிக்கப் போகும் முதியோர் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டிய நேரமிது. Fixed Deposit Renewal பண்ணுங்கன்னு போய் நின்னா ஊர்பட்ட பொய்களைச் சொல்லி அவங்க தலையில் ULIP திட்டங்களைக் கட்டிறாங்க வங்கி அலுவலர்கள். டைட்டானியம் பிளஸ் திட்டம் கணவன், மனைவி இருவரும் ஓய்வு … Read more