கார் விபத்தில் ஆஸ்திரேலிய வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பலி – ரசிகர்கள் அதிர்ச்சி

சிட்னி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்(46).  டவுன்வில்லே பகுதிக்கு வெளியே நேற்றிரவு ஏற்பட்ட கார் விபத்தில் சிக்கி ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் உயிரிழந்தார். கார் விபத்தில் பலியான சைமண்ட்சுக்கு லாரா என்ற மனைவியும், குளோ மற்றும் பில்லி என 2 குழந்தைகள் உள்ளனர். ஆஸ்திரேலியா அணிக்காக 198 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள சைமண்ட்ஸ் 5,088 ரன்கள் மற்றும் 133 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.  26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1,462 ரன்கள் எடுத்துள்ளார். இதுதொடர்பாக, குயின்ஸ்லேண்ட் … Read more

கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்த இந்திய அரசுக்கு ஜி7 நாடுகள் கண்டனம்

லண்டன்: கோதுமை ஏற்றுமதிக்கு தடைவிதித்த இந்திய அரசுக்கு ஜி7 நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மற்ற நாடுகளும் தடைவிதித்தால் உணவு விநியோகத்தின் நிலை மோசமாகும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளன.

மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீடு திட்டத்தை மேலும் 3 ஆண்டு நீட்டிக்க வேண்டும்: காங். சிந்தனை அமர்வு கூட்டத்தில் வலியுறுத்தல்

உதய்பூர்: ஒன்றிய பாஜ அரசால் இந்திய பொருளாதாரத்தின் நிலை மிகுந்த கவலை அளிக்கும் விதத்தில் இருப்பதாக குற்றம்சாட்டிய காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், ஜிஎஸ்டி இழப்பீட்டை மேலும் 3 ஆண்டுக்கு நீட்டிக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளார். கட்சியை வலுப்படுத்தவும், எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக விவாதிக்கவும் காங்கிரசின் 3 நாள் சிந்தனை அமர்வு கூட்டம் ராஜஸ்தானின் உதய்பூரில் நடக்கிறது. 2ம் நாளான நேற்றைய கூட்டத்தில், நாட்டின் பொருளாாதார பிரச்னைகள் குறித்து விவாதிக்கும் குழுவின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் ஒன்றிய நிதி … Read more

இத்தாலியில் ஒலித்த தமிழ்த்தாய் வாழ்த்து! – மறைசாட்சி தேவசகாயத்திற்கு புனிதர் பட்டம்

தமிழகத்தை சேர்ந்த மறைசாட்சி தேவசகாயத்திற்கு புனிதர் பட்டம் வாடிகனில் இன்று நடைபெற உள்ளது. இது தொடர்பான அறிமுக நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இக்காட்சிகளை அங்கு சென்றுள்ள தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இத்தாலியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது பெருமைக்குரிய தருணம் என்றும் அமைச்சர் பதிவிட்டுள்ளார். <blockquote class=”twitter-tweet”><p lang=”ta” dir=”ltr”>இத்தாலியில் ஒலித்த தமிழ்தாய் வாழ்த்து…. <a href=”https://t.co/TZ7iFAv8gy”>pic.twitter.com/TZ7iFAv8gy</a></p>&mdash; Mano Thangaraj (@Manothangaraj) <a href=”https://twitter.com/Manothangaraj/status/1525522174958006272?ref_src=twsrc%5Etfw”>May 14, 2022</a></blockquote> <script async … Read more

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு..!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி, திருச்சி, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழையும், எஞ்சிய பகுதிகளில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் இரு நாட்களுக்கு கனமழை பெய்யும் எனவும், சென்னையில் இரு நாட்களுக்கு … Read more

10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 1.18 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை – பள்ளிக்கல்வித் துறை தகவல்

சென்னை: 10, 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 1.18 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழக பள்ளிக் கல்வியில் 10, 11,12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு மே 5-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்வு எழுத 26.5 லட்சம் மாணவ, மாணவிகள் தகுதிபெற்றனர். ஆனால், பிளஸ் 2 தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களில் 32 ஆயிரம் பேர் வரை தேர்வில் பங்கேற்கவில்லை. அதேபோல், பிளஸ் 1 வகுப்பில் 43 … Read more

பெண் வழக்கறிஞரை விரட்டி விரட்டி எட்டி உதைத்த எதிர்கட்சிக்காரர் ..! எதிராக வாதாடியதால் ஆத்திரம்..!

நீதிமன்றத்தில் தனக்கு எதிராக வாதாடிய பெண் வழக்கறிஞரை, எதிர்கட்சிக்காரர் விரட்டி விரட்டி எட்டி உதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்கிடையே வாதங்களை எடுத்து வைப்பதில் கருத்து மோதல் இருக்கும். அப்படி வாதத்தை எதிர் கொள்ள இயலாமல் வழக்கில் தோல்வியை சந்திக்கும் நிலையை அடைந்த எதிர்கட்சிக்காரர் ஒருவர் தனக்கு எதிராக வழக்காடிய வழக்கறிஞரை பெண் என்றும் பாராமல் அடித்து உதைத்த சம்பவம் கர்நாடகாவில் அரங்கேறி உள்ளது பாகல்கோட்டையில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருபவர் சங்கீதா. சனிக்கிழமை சங்கீதா … Read more

ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபரானார் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான்!

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதியாக சனிக்கிழமையன்று ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் பதவியேற்றார். ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபராக இருந்த ஷேக் கலீஃபா பின் சையத் அலி நகியான் (74) உடல் நலக் குறைவால் வெள்ளிக்கிழமை காலமானார். இதனால் அங்கு 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. அவரது மறைவை அடுத்து, புதிய அதிபராக ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் தேர்வு செய்யப்பட நிலையில், சனிக்கிழமையன்று பதவியேற்றார். சூப்பர்மார்கெட்ர்டில் இராணுவ சீருடையில் வந்த … Read more

பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வியூகம்- காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பயணம் மேற்கொள்ள ராகுல் காந்தி முடிவு

புதுடெல்லி: 2014 பாராளுமன்ற தேர்தலில் இருந்து தொடர் தோல்விகளை சந்தித்து வரும் காங்கிரஸ் கட்சி, 2024ம் ஆண்டு நடைபெறும் பாராளுன்ற தேர்தலில் வெற்றிபெற தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.   இது தொடர்பாக  ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடைபெறும் காங்கிரஸ் சிந்தனை அமர்வு மாநாட்டில் அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்கான வியூகங்கள் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் அக்கட்சி தலைவர் சோனியாகாந்தி ஆலோசனை நடத்தி உள்ளார். இந்நிலையில் அடுத்த ஆண்டு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மக்களை சந்திக்கும் பயணத்தை … Read more