மே 15 : பெட்ரோல் விலை ரூ. 110.85, டீசல் விலை ரூ.100.94

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால் இன்று நேற்றைய விலையில் மாற்றமில்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 110.85 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.100.94-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் கோதுமை ஏற்றுமதிக்கு ஒன்றிய அரசு தடை: விலை உயர்வை தடுக்க நடவடிக்கை

புதுடெல்லி: உள்நாட்டில் விலை உயர்வைக் கட்டுப்படுத்த கோதுமை ஏற்றுமதிக்கு ஒன்றிய அரசு திடீர் தடை விதித்துள்ளது. தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்கும் விதமாக இந்த தடை உத்தரவு உடனடியாக அமல்படுத்தப்பட்டுள்ளது.உலகில் அதிகளவில் கோதுமை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் சீனாவும், 3வது இடத்தில் ரஷ்யாவும், 8வது இடத்தில் உக்ரைனும் உள்ளன. கடந்த 2 மாதமாக ரஷ்யா – உக்ரைன் போர் நடப்பதால், அந்நாடுகளில் இருந்து கோதுமை உற்பத்தி முற்றிலும் முடங்கி, உலகளாவிய … Read more

தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்னதாக திரிபுராவில் முதலமைச்சர் மாற்றம்

திரிபுரா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக மாணிக் சாஹா தேர்வு செய்யப்பட்டுள்ளார். திரிபுராவில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் திடீரென பிப்லப் தேவ் ராஜினாமா செய்துள்ளார். தேர்தலையொட்டி கட்சிப்பணிகளில் ஈடுபடுவதற்காக பதவி விலகியதாக பிப்லப் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து நடைபெற்ற பாரதிய ஜனதா சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் சட்டமன்ற கட்சித்தலைவராக மாணிக் சாஹா தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்னதாக திரிபுராவில் முதலமைச்சர் மாற்றம் நிகழ்ந்துள்ளது. திரிபுரா பாஜக எம்எல்ஏக்கள் பலர் பிப்லபுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருந்த … Read more

Wheat Export Ban: இந்தியாவின் கோதுமை ஏற்றுமதித் தடைக்கு கண்டனம் தெரிவிக்கும் உலக நாடுகள்

உக்ரைன் மீதான ரஷ்யப் போரின் எதிரொலியாகவும், பக்கவிளைவாகவும் உலகம் பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறது. அதன் ஒரு விளைவாக, உலகம் முழுவதும் உணவுப் பொருட்களின் விலையேற்றம் கவலை கொள்ள செய்திருக்கிறது. இந்த நிலையில் இந்தியா கோதுமை ஏற்றுமதியை தடை செய்துள்ளது. இதற்கு  G7 அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. கோதுமையின் சர்வதேச விலையில் சமீபத்திய ஏற்றமானது, கோதுமை ஏற்றுமதி செய்யும் வர்த்தகர்களுக்கு அதிக லாபத்தை தந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.   உணவு நெருக்கடி ஏற்படவும், உலக உணவு விநியோகத்தில் ஏற்பட்ட … Read more

கொடுத்த பணத்தை திரும்ப கேட்ட தந்தை.. ஆத்திரத்தில் மகன் செய்த விபரீத செயல்..!

பணத்தைக் திரும்பக் கேட்டபோது அவரை கத்தியால் குத்திய மகனை காவல்துறையினர் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் முத்து இவருக்கு திருமணமாகி மாதப்பன் என்கின்ற மகன் இருக்கிறார். முத்து தனது மகனுக்கு இரண்டு லட்சம் பணம் கொடுத்து உதவியுள்ளார் முத்து தனது மகனிடம் பணத்தை திரும்ப கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாதப்பன் தந்தையுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே மாதப்பன் தந்தை முத்துவை சிறிய கத்தியால் குத்தியுள்ளார். இதில் அவருக்கு பலத்த காயம் … Read more

மண் வளத்தை பாதுகாக்க பிரத்யேக விவசாய மையங்கள் – இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை வலியுறுத்தல்

சென்னை: மனிதனுக்காக மருத்துவமனைகள் இருப்பதுபோல், மண் வளத்தைப் பாதுகாக்க பிரத்யேக விவசாய மையங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார். அண்ணா பல்கலைக்கழகத்தின் சென்னை தொழில்நுட்பக் கல்லூரி, மற்றும் இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு அமைப்பு (இப்கோ) சார்பில் ‘விவசாய ட்ரோன்களின் பயன்பாடுகள் மற்றும் தொழில் வாய்ப்புகள்’ தொடர்பான பயிற்சிக் கருத்தரங்கம் குரோம்பேட்டையில் உள்ள கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் இஸ்ரோ முன்னாள் இயக்குநரும், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் … Read more

அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் மரணம்

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் உயிரிழந்தார். அவுஸ்திரேலிய கிரிக்கெட்டின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் (46) சனிக்கிழமை இரவு டவுன்ஸ்வில்லுக்கு வெளியே சுமார் 50 கிமீ தொலைவில் கார் விபத்தில் உயிரிழந்தார். சைமண்ட்ஸ் சனிக்கிழமை இரவு 10.30 மணியளவில் ஒரு கார் விபத்தில் சிக்கியதாக குயின்ஸ்லாந்து காவல்துறை அறிக்கை கூறுகிறது. இதையும் படியுங்கள்: சூப்பர்மார்கெட்ர்டில் இராணுவ சீருடையில் வந்த நபர் திடீர் துப்பாக்கிச்சூடு! 10 பேர் பலியான சோகம்  சைமண்ட்ஸ் … Read more

டெல்லி தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: டெல்லி தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சமூக வலைதள பதிவில் வெளியிட்டுள்ள செய்தியில்,”டெல்லி தீ விபத்தில் ஏராளமானோர் உயிரிழந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விழைகிறேன்” என்று கூறியுள்ளார்.

கொரோனாவுக்கு உலக அளவில் 6,287,570 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62. 87 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,287,570 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 520,816,858 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 475,241,461 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 39,124 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.