ஐபிஎல் : ஹைதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி அபார வெற்றி

புனே,  ஐபிஎல் 15வது சீசன் சுவாரசியமான கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா – ஹைதராபாத் அணிகள் மோதின  இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது .அதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு செய்தது . தொடக்க வீரர்களாக வெங்கடேஷ் ஐயர் ,ரகானே களமிறங்கினர் .தொடக்கத்தில் வெங்கடேஷ் ஐயர் 7 ரன்களில் ஆட்டமிழந்தார் .பின்னர் வந்த நிதிஷ் ராணா ரஹானேயுடன் இனைந்து சிறப்பாக விளையாடினார் . இருவரும் நிலைத்து ஆடி ரன்களை சேர்த்தனர் .அணியின் ஸ்கோர் … Read more

வெளிநாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதி செய்ய தடை; இந்தியாவின் முடிவுக்கு ஜி7 நாடுகள் கண்டனம்!

ஸ்டட்கார்ட்(ஜெர்மனி), கோதுமை விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு திடீர் தடை விதித்துள்ளது. உள்நாட்டில் தொடர் விலை ஏற்றத்தை தவிர்க்கவும், கோதுமையை வாங்கும் தனியார் அதிகளவில் ஏற்றுமதி செய்தால் உள்நாட்டில் தட்டுப்பாடு ஏற்படலாம் என கருதி மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. கோதுமை உற்பத்தியில் உலகின் இரண்டாவது பெரிய நாடான இந்தியா, கோதுமை ஏற்றுமதியை தடை செய்திருப்பது, உக்ரைன் போர் காரணமாக விநியோக பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு ஒரு பேரிடியாக அமைந்துள்ளது.  … Read more

தங்கம் வாங்குவோருக்கு குட் நியூஸ்.. தங்கம் விலை தொடர்ந்து சரியும்.. எப்போது வாங்க வேண்டும்..?

அமெரிக்க டாலர் இன்டெக்ஸ் 20 ஆண்டுகள் உயர்வில் இருக்கும் காரணத்தால், தங்கம் விலை தொடர்ந்து நான்காவது வாரமாகச் சரிந்து வருகிறது. இதற்கிடையில் இந்தியாவின் மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் (எம்சிஎக்ஸ்), வெள்ளிக்கிழமை தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ₹49,909 ஆக முடிந்தது, கடந்த ஒகு வாரத்தில் சுமார் 2.86 சதவீத நஷ்டத்தைப் பதிவு செய்துள்ளது. சர்வதேச சந்தையின் ஸ்பாட் தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு 1810 டாலராக ஆக முடிவடைந்தது, முக்கிய ஆதரவு விலையான $1820 நிலைக்குக் கீழ் … Read more

இங்கு இட்லி, தோசை சுட்டு கொண்டு இருக்கிறார்கள் அண்ணே., நாக்கை சரியாக.., திமுக அமைச்சருக்கு பதிலடி கொடுத்த பாடகர்.!

இந்தி பேசுபவர்கள் பானிபூரி விற்கிறார்கள் என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கோரியதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், ‘இங்கு இட்லி, தோசை சுட்டு கொண்டு இருக்கிறார்கள் அண்ணே.,’ என்று பாடகர் ஒருவர் திமுக அமைச்சர் பொன்முடியை டேக் செய்து பதிவிட்டுள்ளார். கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய பொன்முடி, ஹிந்தியை விட ஆங்கிலம் என்பது மதிப்புமிக்கது. இந்தி பேசுபவர்கள் பாணி பூரி வீரப்பனை செய்கின்றனர் என்று அவர் சொல்லியதாக சர்ச்சை கிளம்பியது. … Read more

KKR v SRH: தொடர் தோல்வியில் ஐதராபாத்; ரஸலின் மேஜிக்கால் பிளேஆஃப் ரேசில் நீடிக்கும் கொல்கத்தா!

கடந்த முறை பத்து அணிகள் இடம்பெற்ற சீசனில் முதல் நான்கு இடங்களில் இருந்த அணிகள் தற்போது தலைகீழ் மாற்றமாக ஒவ்வொன்றாகக் கழன்று கொண்டு வருகின்றன. முதலிரண்டு இடங்களைப் பிடித்த அணிகள்தான் இந்த சீசனில் முதலில் வெளியேறியவை. அடுத்த இரண்டு இடங்களில் இருந்த பெங்களூருவும், கொல்கத்தாவும் அடுத்தடுத்து வெளியேறுமோ என எதிர்பார்த்த நிலையில், அதேபோல பெங்களூரு தோற்று ஊசலாட, கொல்கத்தா மட்டும் இன்னும் எப்படியாவது உள்ளே நுழைந்துவிட வேண்டும் என பிளேஆஃப் கதவைத் தொட முயன்று கொண்டிருக்கிறது. நேற்றைய … Read more

ஆதிதிராவிடர், பழங்குடியின சமூகத்தை சேர்ந்த 21 எழுத்தாளர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் பரிசு – முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை, இலக்கிய மேம்பாட்டுச் சங்கத்தால் தேர்வு செய்யப்பட்ட 21 எழுத்தாளர்களுக்கு தலா ரூ.25 ஆயிரத்துக்கான காசோலைகள், பாராட்டு சான்றிதழ்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இதுகுறித்து தமிழக அரசுநேற்று வெளியிட்ட செய்தி: ஆதிதிராவிடர், பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டுப் பணிக்கான தனி பணிக்குழு நிதியான ரூ.50 லட்சத்தில் இருந்து கிடைக்கும் வட்டித் தொகையை கொண்டு ஆதிதிராவிடர், பழங்குடியினர், மதம் மாறிய ஆதிதிராவிட கிறிஸ்தவர்களின் சிறந்த 10 படைப்புகள் மற்றும் ஆதிதிராவிடர் அல்லாதோர் ஒருவரின் … Read more

ஜன்னலில் கையை நீட்டி கொண்டு பஸ் பயணம்… நொடிப்பொழுதில் கை துண்டான பரிதாபம்

ஆந்திர மாநிலம் மணியம் மாவட்டம் பார்வதி புரத்தில் ஓடும் பேருந்தில், ஜன்னலுக்கு வெளியே கையை வைத்துக் கொண்டு பெண் பயணி ஒருவர் பேருந்தில் அமர்ந்திருந்த போது எதிரே வந்த மினி டெம்போ உரசியதில் அந்தப்பெண்ணின் கை துண்டாகி சாலையில் விழுந்தது. கையை இழந்து வலியால் அலறித்துடித்த தவித்த அந்த பெண்ணை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல், பேருந்து இருக்கையில் அமர்ந்திருந்த அந்த பெண்ணிடம் ஊர் விவரம் கேட்டுக் கொண்டிருந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது … Read more

ரேசனில் பொருள் கொடுத்தாலும், சிலிண்டர் விலை உயர்வால் எப்படி சமைப்பது?- மத்திய அரசுக்கு, உத்தவ் தாக்கரே கேள்வி

மும்பை: மும்பையில் நடைபெற்ற சிவசேனா கட்சியின் பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் தலைவரும், மகாராஷ்டிரா மாநில முதலமைச்சருமான உத்தவ் தாக்கரே, மத்தியில் ஆளும் பாஜகவை கடுமையாக தாக்கினார். பாஜகவை விட சிவசேனாவின் இந்துத்துவம் சிறந்தது என்றும், சில போலி இந்துத்துவவாதிகள் நம் நாட்டை தவறாக வழி நடத்துகிறார்கள் என்றும் அவர் கூறினார். எங்களது இந்துத்துவா குறித்து தீர்மானிக்க நீங்கள் யார்? காங்கிரசுடன் சென்றதால் எங்கள் இந்துத்துவா குறைந்து விட்டதா என கூறிய அவர், கோவில்களில் … Read more

நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம் வாங்கிய ஊழியர் டிஸ்மிஸ்

விழுப்புரம்:விழுப்புரம்  மாவட்டத்தில் 49 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.  நெல் கொள்முதல் நிலையங்களில் நாள்தோறும் ஆயிரம் மெட்ரிக் டன் அளவிற்கு  விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு  வருகிறது. எந்தவித கட்டணமும்  பணியாளர்கள் வசூல் செய்யக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.  இதனிடையே செஞ்சி அருகே நல்லான்பிள்ளை பெற்றாள் நேரடி நெல்  கொள்முதல் நிலையத்தில் பருவகால பட்டியல் எழுத்தர் ராமச்சந்திரன்  விவசாயிகளிடம் லஞ்சம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இதை அதிகாரிகள் குழு ஆய்வு செய்து உறுதிப்படுத்தியது. … Read more

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஞானவாபி மசூதியில் கள ஆய்வு

லக்னோ: வாரணாசி ஞானவாபி மசூதியில்  வீடியோ பதிவுடன் கள ஆய்வு தொடங்கியது. இதையொட்டி மசூதிக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தின் வெளிப்புறச் சுவரில், சிங்கார கவுரி அம்மன் சிலை அமைந்துள்ளது. இந்த அம்மனுக்கு தினமும் பூஜை நடத்த அனுமதிக்க கோரி, நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், சிங்கார கவுரி அம்மன் கோவிலின் அமைப்பு குறித்து, வீடியோ பதிவுடன் கள ஆய்வு நடத்தும்படி, வழக்கறிஞர் அஜய் … Read more