லைவ் அப்டேட்ஸ்: பால்டிக் கடற்பகுதியில் ரஷிய போர் விமானங்கள் பயிற்சி

14.05.2022 21:00: உக்ரைனில் நடக்கும் போர், ஏழை நாடுகளை அச்சுறுத்தும் வகையில் உலகளாவிய உணவு மற்றும் எரிசக்தி நெருக்கடியைத் தூண்டுகிறது. உக்ரைனை விட்டு தானியங்கள் வெளியேறுவதை ரஷியா தடுப்பதாகவும், இதை சரிசெய்ய அவசர நடவடிக்கைகள் தேவை என ஜி7 அமைப்பு தெரிவித்துள்ளது.  சர்வதேச தடைகளை குறைத்து மதிப்பிடுவது அல்லது உக்ரைனில் ரஷியாவின் நடவடிக்கைகளை நியாயப்படுத்துவது உள்பட எந்த வகையிலும் ரஷியாவிற்கு உதவ வேண்டாம் என சீனாவை ஜி7 நாடுகள் கேட்டுக்கொண்டன. 17:00: விமானத் தாக்குதலை முறியடிப்பது எப்படி? என்பது … Read more

பக்தர்கள் வருகை அதிகரிப்பு: திருப்பதி கோவிலில் வி.ஐ.பி தரிசனம் ரத்து

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோடை விடுமுறை காரணமாக பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காத்திருப்பு அறைகளில் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் உணவு, நீர், மோர் வழங்கப்பட்டு வருகிறது. மாட வீதிகளில் நீர் பந்தல்கள் வெள்ளைநிற குளிர்ச்சி பெயின்ட் சிவப்பு கம்பளங்கள் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு வெயிலின் தாக்கம் ஏற்படாத வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் ஏழுமலையான் கோவிலில் நாளை முதல் ஜூலை 15ந் தேதி வரை வி.ஐ.பி பிரேக் தரிசனம் ரத்து … Read more

2வது நாள் சிந்தனை அமர்வு கூட்டம்; காங். மூத்த தலைவர்களுடன் ராகுல் ஆலோசனை.! நாளைய கூட்டத்தில் உரையாற்றுகிறார்

புதுடெல்லி: ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் காங்கிரசின் 3 நாள் ‘சிந்தனை அமர்வு கூட்டம்’ நேற்று தொடங்கியது. கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உட்பட சுமார் 400 மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். மாநாட்டின் தொடக்க விழாவில் சோனியா காந்தி பேசுகையில், ‘காங்கிரஸ் கட்சியால் நாம் பலன் அடைந்துள்ளோம். அந்த வகையில் கட்சிக்கு அனைவரும் கடன்பட்டுள்ளோம். இப்போது கடனை திருப்பி செலுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. கட்சியின் மூத்த தலைவர்கள் தங்கள் சுயவிருப்பங்களை … Read more

"மோடி உரக்கப் பேசினால் அமெரிக்காவே கேட்கும்" – பாஜக தலைவர் அண்ணாமலை

மோடி 2008இல் பிரதமராக இருந்திருந்தால் தமிழர்கள் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் கருத்தரங்கு சென்னை தி.நகரில் இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ‘’இந்த நிகழ்ச்சியில் நான் கலந்துகொண்டதால், பல தலைவர்கள் புறக்கணித்துள்ளனர். ஆனால் அவர்களும் பல்வேறு காலக்கட்டத்தில் இலங்கை மக்களுக்காக போராடியுள்ளனர். தமிழ்நாடு பாஜக வேண்டாத கட்சியாக, வேண்டாத கொள்கையாக ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது. மீண்டும் … Read more

2வது மனைவியுடன் சண்டை! குடும்பத்தையே மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தி கொலைசெய்த முதல் மனைவி!

பீகாரில் தனது கணவனின் 2வது மனைவியுடன் சண்டை போட்ட ஆத்திரத்தில் கணவன், 2வது மனைவி, மாமியார் என மொத்த குடும்பத்தையே மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்தி விட்டு முதல் மனைவி தானும் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரின் தர்பங்கா மாவட்டத்தில் இன்று காலை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் – 40 வயது ஆண், அவரது இரண்டு மனைவிகள் மற்றும் அவரது தாயார் ஆகியோர் தீயில் கருகி உயிரிழந்தனர். இச்சம்பவம் ப்ரௌல் நகரின் … Read more

அஜித்துக்கு நேரில் சென்று திருமண அழைப்பு விடுத்த ஆதி

மிருகம் படம் மூலம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஆதி. பிரபல தெலுங்கு இயக்குனரான ரவிராஜா பினிஷெட்டியின் மகனான இவர் தொடர்ந்து தமிழ் திரையுலகிலேயே கவனம் செலுத்தி படங்களில் நடித்து வந்தார். ஈரம் படம் இவருக்கு ஒரு திருப்புமுனையான படமாக அமைந்தது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு யாகவராயினும் நா காக்க, மரகதநாணயம் ஆகிய படங்களில் நடிகை நிக்கி கல்ரானியுடன் இணைந்து நடித்தபோது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு அதை உறுதி செய்வது … Read more

2022-2023 நிதியாண்டுக்கான தங்களது மூலதன செலவை 9 ஆயிரம் கோடியாக உயர்த்தியுள்ளது டாடா மோட்டார்ஸ்.

வணிக வாகனம், பயணிகள் வாகனங்கள் மற்றும் மின்சார வாகனங்கள் என எல்லா வணிகங்களிலும் திறன் விரிவாக்கத்திற்கு நிதியளிப்பதற்காக, டாடா மோட்டார்ஸ் நடப்பு நிதியாண்டில் அதிகபட்ச இந்தியாவில் மட்டும் 6000 கோடி ரூபாயை முதலீடாக மேற்கொள்ள உள்ளது. 3 மாதத்தில் ரூ.1506 கோடி லாபம் பார்த்த டெக் மகேந்திரா.. முதலீட்டாளர்களுக்கும் சர்பிரைஸ் உண்டு? ஜாகுவார் லேண்ட் ரோவர் பிரீமியம் வாகன நிறுவனமான ஜாகுவார் லேண்ட் ரோவரில் 26,000 கோடி ரூபாய் முதலீட்டை செய்ய உள்ளது. 2021-2022 நிதியாண்டில் 23 … Read more

நாளை மின் துண்டிப்பு இடம்பெறாது

நாளை மின்துண்டிப்பு இடம்பெறாது. வெசாக் நோன் மதி தினத்தை முன்னிட்டு மின்சாரத் துண்டிப்பு மேற்கொள்ளப்படாது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. எரிபொருள் இல்லாமை காரணமாக 8 மின்னுற்பத்தி நிலையங்கள் செயலிழந்திருப்பதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், மின்னுற்பத்தி நிலையங்களை அண்டிய பகுதிகளில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக நீர்மின்னுற்பத்தி அதிகளவில் மேற்கொள்ளப்படுவதாகவும் மின்சார சபை தெரிவித்துள்ளது.

SSC Recruitment 2022; மத்திய அரசில் 2065 பணியிடங்கள்; 10th, 12th, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

SSC recruitment 2022 for 2065 Selection posts apply soon: மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மத்திய அரசில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பணியாளர் தேர்வாணையம் 10 ஆம் கட்ட தேர்தெடுக்கப்பட்ட பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 2065 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 13.06.2022 மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை … Read more

மின்சாரம் தாக்கி இளைஞர் பரிதாப பலி.. தேனி அருகே நிகழ்ந்த சோகம்..!

மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் காடையாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சேகர். இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இளைய மகன் லட்சுமணன் அப்பகுதியில் உள்ள கோழி கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார்.  இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல கடைக்கு வந்த லட்சுமணன் கோழியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது அங்குள்ள எயந்திரத்தை போடும் போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் தாக்கியது. இதில் … Read more