6 வயது சிறுமி பலி- ஆத்திரத்தில் வாகனத்திற்கு தீ வைத்து ஓட்டுனரை கொன்ற பொது மக்கள்

மத்தியப் பிரதேசத்தில் உள்ள அலிராஜ்பூர் மாவட்டத்தில் இருந்து 38 கி.மீ தொலைவில் உள்ள சிராசிங் பகுதியில் நேற்று இரவு பயணிகளை பல பயன்பாடு வாகனம் ஒன்று மோதியதில் 6 வயது சிறுமி பலியானார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட வாகனத்தை சிறைபிடித்து தீ வைத்து எரித்தனர். பின்னர், தப்பிக்க முயன்ற வாகன ஓட்டுனரை அடித்து தாக்கி தீயில் தள்ளினர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தீ காயங்களுடன் இருந்த ஓட்டுனரை மீட்டு … Read more

சிங்களர் பசி கண்டு மனித நேயத்துடன் உதவும் தமிழ்நாட்டின் முதல்வருக்கு நன்றி: சிங்கள வார ஏடான மவ்பீமா புகழாரம்

கொழும்பு: இலங்கைக்கு உதவ நடவடிக்கை எடுத்ததற்காக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு சிங்கள வார ஏடான மவ்பீமா புகழாரம் சூட்டியது. சிங்களர் பசி கண்டு மனித நேயத்துடன் உதவும் தமிழ்நாட்டின் முதல்வருக்கு நன்றி என கூறிய அவர், இலங்கைக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையில் மனிதநேயத்தைக் கட்டமைக்கும் பாலமாக நிவாரண உதவிகள் அமைத்துள்ளன என தெரிவித்தது. 

திருமணம் செய்து வைப்பதாக கூறி எய்ம்ஸ் மருத்துவர் உட்பட 100 பெண்களிடம் மோசடி: ‘மேட்ரிமோனி’ உரிமையாளர் அதிரடி கைது

புதுடெல்லி: திருமணம் செய்து வைப்பதாக கூறி எய்ம்ஸ் மருத்துவர் உட்பட 100 பெண்களிடம் மோசடி செய்த டெல்லி ‘மேட்ரிமோனி’ உரிமையாளரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். தலைநகர் டெல்லியின் எய்ம்ஸ் மருத்துவமனையின் பெண் மருத்துவர் ஒருவர், டெல்லி போலீசில் அளித்த புகாரில், ‘ஒடிசா மாநிலம் கியோஞ்சரைச் சேர்ந்த ஃபர்ஹான் தசீர்கான் என்பவரை, திருமண (மேட்ரிமோனி) இணையதளத்தின் மூலம் சந்தித்தேன். அவர், தான் இன்ஜினியரிங் மற்றும் எம்பிஏ படித்துவிட்டு தனியாக மேட்ரிமோனி பிஸ்னஸ் செய்து வருவதாக கூறினார். நாங்கள் … Read more

“செஸ் ஒலிம்பியாட் – முதல்வர் இந்த உறுதியை அளித்தார்” – இந்தியப் பயிற்சியாளர் பேட்டி

உலக அளவிலான செஸ் ஒலிம்பியாட் போட்டி முதன்முறையாக மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள நிலையில், எந்த உதவிகள் கேட்டாலும் செய்யத் தயார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாக இந்தியப் பயிற்சியாளர் ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார். உலக அளவிலான செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் ஜூலை 28இல் தொடங்குகிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டி முதன்முறையாக தமிழ்நாட்டில் மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. போட்டியை திறம்பட நடத்துவதற்கு ஏதுவாக தமிழக அரசு, அகில இந்திய செஸ் கூட்டமைப்பு இரண்டும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. “பொறுப்புகள் … Read more

மோசடி நபருடன் மோகன்லாலுக்கு தொடர்பு? – ரூ.10 கோடி பணமோசடி வழக்கில் விரைவில் விசாரணை!

பணமோசடி வழக்கு தொடர்பாக நடிகர் மோகன்லாலிடம் அமலாக்கத்துறை அடுத்த வாரம் விசாரணை நடத்தவுள்ளது. பழங்கால பொருட்களை விற்பனை செய்வதில் மோசடியில் ஈடுபட்ட மான்சன் மவுன்கல் தொடர்பான பணமோசடி வழக்கு விசாரணை மலையாள நடிகர் மோகன்லாலை அடுத்த வாரம் அமலாக்கத்துறை கொச்சி அலுவலகத்தில் ஆஜராகுமாறு அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் பல ஆண்டுகளாக கலைப்பொருட்கள் மற்றும் நினைவுச்சின்னங்களை சேகரிப்பவர் போல் பணியாற்றி வந்துள்ளார் 52 வயதான யூடியூபர் மான்சன் மவுன்கல். கடந்த ஆண்டு செப்டம்பரில் போலி … Read more

தெலுங்கு படம் இயக்குகிறார் சமுத்திரகனி

பார்த்தாலே பரவசம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான சமுத்திரகனி, அதன்பிறகு விஜயகாந்த் நடித்த நிறைஞ்ச மனசு படத்தை இயக்கினார். அதன்பிறகு 4 ஆண்டுகள் வரை எந்த பட வாய்ப்பும் இல்லாமல் இருந்தார். சின்னத்திரை தொடரை இயக்கினார். சுப்பிரமணியபுரம் படத்தின் மூலம் நடிகர் ஆனார். அதன்பிறகு நாடோடிகள் உள்ளிட்ட சில படங்களை இயக்கியபோதும் நடிகராக முன்னணிக்கு வந்தார். இப்போது தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் குணசித்ர நடிகராகிவிட்டார். நாடோடிகள் படத்தை தெலுங்கில் சம்போ சிவ சம்போ என்ற பெயரில் இயக்கினார். … Read more

நியூசி., பிரதமருக்கு கோவிட் தொற்று| Dinamalar

வெலிங்டன் : நியூசிலாந்து பிரதமருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தென்மேற்கு பசிபிக் கடலில் அமைந்துள்ள தீவு நாடான நியூசிலாந்தின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டென், 41, இம்மாத இறுதியில் அமெரிக்கா செல்ல திட்டமிட்டு இருந்தார். இதையடுத்து, அவருக்கு சில தினங்களுக்கு முன் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. தடுப்பூசி செலுத்தியுள்ள, ஜெசிந்தாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது, பரிசோதனையில் நேற்று உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து, அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவரது கணவர் கிளர்க் கேபோர்டுக்கும் தொற்று … Read more

மே 16-ம் தேதி வங்கிகள் விடுமுறையா? முழு பட்டியல்

நாம் இப்போது மே மாதத்தின் பாதியில் இருக்கிறோம். மே மாதம் வங்கிகளுக்கு 11 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதில் வரும் வாரம் மட்டும் இரண்டு நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை. 3 மாதத்தில் ரூ.1506 கோடி லாபம் பார்த்த டெக் மகேந்திரா.. முதலீட்டாளர்களுக்கும் சர்பிரைஸ் உண்டு? இந்த வங்கி விடுமுறைகள் நாம் வசிக்கும் நகரங்களைப் பொருத்து மாறும். எனவே மே 16-ம் தேதி நீங்கள் வசிக்கும் நகரத்தில் வங்கிகள் இயங்குமா? அல்லது விடுமுறையா? மே மாதம் இன்னும் எந்த … Read more

சிட்னியில் உள்ள இலங்கையின் துணைத் தூதுவர் லக்ஷ்மன் ஹூலுகல்ல காலமானார்

சிட்னியில் உள்ள இலங்கையின் துணைத் தூதுவர் லக்ஷ்மன் ஹூலுகல்ல அவர்கள் 2022 மே 14ஆந் திகதி, சனிக்கிழமையன்று அவுஸ்திரேலியாவின் சிட்னியில் குறுகிய கால சுகவீனத்தால் காலமானார் என்பதை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு ஆழ்ந்த வருத்தத்துடன் அறியத்தருகின்றது. அவுஸ்திரேலியா மற்றும் இலங்கையில் உள்ள அதிகாரிகளின் ஒருங்கிணைப்புடன், மறைந்த துணைத் தூதுவர் ஹூலுகல்லவின் பூதவுடல் உரிய சம்பிரதாயங்களைப் பூர்த்தி செய்ததன் பின்னர் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,கொழும்பு2022 மே 14

2,117 ஏக்கர் நிலம்.. தனிநபருக்கு முறைகேடாக பத்திரப்பதிவு செய்த சார் பதிவாளர் சஸ்பெண்ட்!

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே, தெற்கு சிலுக்கன்பட்டி, வடக்கு சிலுக்கன்பட்டி எனும் கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்களுக்கு சொந்தமான சுமார் 2,117 ஏக்கர் விவசாய நிலத்தை, புதுக்கோட்டை சார்பதிவாளர் மோகன் தாஸ், முறைகேடாக பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார். இந்த நிலத்தில் 600-க்கும் மேற்பட்ட தனிநபர் வீடுகள், 800-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்குச் சொந்தமான விவசாயப் பட்டா நிலங்கள், கோயில்கள், குளங்கள், அரசு அலுவலகங்கள், காற்றாலைப் பண்ணைகள் போன்ற உள்கட்டமைப்புகள் … Read more