அவங்க ஸ்டைல் வேற… எனக்கு செட் ஆகாது… ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த விஜே பாவனா

Tamil Anchor VJ Bhavana Said Can’t Come Again Vijay TV : தமிழில் அதிக ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகும் சேனல்களில் விஜய் டிவி முன்னணியில் இருந்து வருகிறது. மேலும் இதில் ஒளிபரப்பாகும் அனைத்து ரியாலிட்டி ஷோக்களுக்கும் சீரியல்களும் தனியாக ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. நிகழ்ச்சிகள் மட்டுமல்லாது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களுக்கு அதிகமான ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் இப்போது பிரியங்கா, மாகாபா ஆனந்த், ரக்ஷன் போன்றவர்கள் எல்லாம் தற்போதைய பிரபல தொகுப்பாளர்களாக உள்ளார்கள். … Read more

ஈரோடு || மனித வேட்டையை தொடங்கினால் மக்கள் தாங்க மாட்டார்கள் – மொத்தமாக முடிவு கட்டியே ஆகவேண்டும் – மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தல்.!

உயிர்ப்பலி வாங்கும் கள்ள லாட்டரிக்கு தமிழக அரசு முடிவு கட்ட வேண்டும் என்று, பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.  இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, “ஈரோடு எல்லப்பாளையத்தைச் சேர்ந்த  இராதாகிருஷ்ணன் என்ற நூல் வணிகர் கள்ள லாட்டரியில் ரூ.62 லட்சத்தை இழந்ததால் ஏற்பட்ட விரக்தி காரணமாக  தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்  என்ற செய்தி வேதனையளிக்கிறது. இது குறித்து காணொலி வாக்குமூலமும் வெளியிட்டுள்ளார்! தமிழ்நாட்டில் லாட்டரி தடை செய்யப்பட்டு 18 ஆண்டுகள் ஆகி விட்டன. … Read more

“இந்தியப் பொருளாதாரத்தின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது!" – ப.சிதம்பரம் கருத்து

காங்கிரஸ் கட்சியின் சிந்தனை அமர்வு மாநாடு ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டு வருகின்றனர். இந்த நிலையில, இன்று இந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய ப.சிதம்பரம்,“இந்தியப் பொருளாதாரத்தின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது. இதன் காரணமாக பணவீக்கம் எதிர்பாராத அளவுக்கு உயர்ந்திருக்கிறது. மாநிலங்களின் நிதி நிலை முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு பலவீனமாக இருக்கிறது. வளர்ச்சி விகிதத்தில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது. இது தற்போதைய அரசாங்கத்தின் அடையாளமாக … Read more

வருவாய் ஆய்வாளர் எனக் கூறி பணம் வாங்கி ஏமாற்றிய நபர் கைது

சேலத்தில் வருவாய் ஆய்வாளர் எனக் கூறி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு காப்பீடு தொகை பெற்றுத் தருவதாக ஏமாற்றி வந்த நபர் கைது செய்யப்பட்டார். கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்த பிரபாகரன், வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருவதாக போலி அடையாள அட்டை தயார் செய்துவைத்து, கடந்த சில ஆண்டுகளாக விபத்தில் இறந்தவர்களின் விவரங்களை சேகரித்து, அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து காப்பீடு தொகையை பெற்றுத் தருவதாக கூறி பணம் பறித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர் மீது சேலம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் … Read more

உதகையில் 17-வது ரோஜா கண்காட்சி தொடக்கம்: சுற்றுலா பயணிகளை கவரும் அலங்கார வடிவங்கள்

உதகை: கோடை விழாயொட்டி உதகை ரோஜா பூங்காவில் தொடங்கியுள்ள 17வது ரோஜா கண்காட்சியில் தோட்டக்கலைத்துறை சார்பில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வடிவங்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவின் நூற்றாண்டை கொண்டாடும் வகையில் விஜயநகரத்தில் ரோஜா பூங்கா 11 ஏக்கர் பரப்பில் உருவாக்கப்பட்டது. கடந்த 2001ம் ஆண்டு முதல் இந்த பூங்காவில் நீலகிரி தோட்டக்கலைத்துறை மற்றும் ரோஜா சங்கம் சார்பில் ரோஜா கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு 17வது ரோஜா கண்காட்சி இன்று … Read more

மத்திய அரசு கோதுமையை கொள்முதல் செய்ய தவறியதே ஏற்றுமதி தடைக்கு காரணம்: ப.சிதம்பரம் விமர்சனம்

புதுடெல்லி: மத்திய அரசு போதுமான அளவு கோதுமையை கொள்முதல் செய்ய தவறியதே ஏற்றுமதி தடைக்கு காரணம் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். வெளிநாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இது உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவில் ‘‘பல காரணங்களினால், சர்வதேச அளவில், கோதுமை விலை திடீரென உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக, இந்தியாவின் உணவு பாதுகாப்பும், அண்டை நாடுகள், அதிகம் பாதிப்பை சந்திக்கும் … Read more

நான்கு புதிய அமைச்சர்கள் நியமனம்

நான்கு புதிய அமைச்சர்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.  பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் வெளிவிவகார அமைச்சராகவும், தினேஷ் குணவர்தன பொது நிர்வாகம், உள்நாட்டு விவகாரங்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் பிரசன்ன ரணதுங்க நகர்ப்புற அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சராகவும், எரிசக்தி அமைச்சராக கஞ்சன விஜேசேகரவும் நியமிக்கப்பட்டுள்ளனர். Source link

ரஷ்யாவின் படையெடுப்பு இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என யாராலும் கணிக்க முடியாது – உக்ரைன் அதிபர்

ரஷ்யாவின் படையெடுப்பு இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என யாராலும் கணிக்க முடியாது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் 12 வாரங்களை எட்டியுள்ள நிலையில், போர் நடவடிக்கை முடிவில்லாமல் இன்னும் நீடிப்பது உக்ரைன் மக்களுக்கு மட்டுமின்றி உக்ரைனின் நட்பு நாடுகளுக்கும், உக்ரைனுக்கு உதவி வரும் நாடுகளுக்கும் துர்திருஷ்டவசமானது என அவர் தெரிவித்துள்ளார். மேலும், ரஷ்ய படைகள் கைப்பற்றிய பகுதிகளை உக்ரைன் ராணுவம் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாகவும், … Read more

கோதுமை ஏற்றுமதிக்கு தற்காலிகமாக உடனடி தடை விதிப்பதாக மத்திய அரசு அறிவிப்பு.!

உள்நாட்டில் உணவு பாதுகாப்பு மற்றும் தேவையை உறுதி செய்யவும், விலையேற்றத்தை கட்டுப்படுத்தவும் கோதுமை ஏற்றுமதிக்கு தற்காலிகமாக உடனடி தடை விதிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ரஷ்யாவின் படையெடுப்பு காரணமாக உக்ரைனில் இருந்து தானிய ஏற்றுமதி முடங்கிய நிலையில், உணவு தேவை குறித்து உலக நாடுகள் கவலை கொண்டுள்ளன. இந்த நிலையில், கோதுமை உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியா, அதிகளவில் கோதுமை ஏற்றுமதி செய்து வந்தது. இதன் காரணமாக இந்தியாவில் 10 ஆண்டுகாளில் இல்லாத வகையில் ஏப்ரல் … Read more

சென்னையில் முதல் முறையாக அரசு சார்பில் மலர் கண்காட்சி

சென்னை: சென்னை மாநகர வரலாற்றில் முதல் முறையாக அரசு சார்பில் மலர் கண்காட்சி நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஐந்து முறை முதல்வராகவும், 13 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் பதவி வகித்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி. இவரது பிறந்த நாள் வருகிற ஜூன் மூன்றாம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் , இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் சமீபத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். அத்துடன் சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் … Read more