பால்கன் 9 ராக்கெட்டில் இணையத் தொடர்புக்கான 53 செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவியது ஸ்பேஸ் எக்ஸ்

எலோன் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இணையத் தொடர்புக்கான 53 செயற்கைக் கோள்களை பால்கன் 9 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவியுள்ளது. கலிபோர்னியாவின் வாண்டன்பர்க் ஏவுதளத்தில் இருந்து உள்ளூர் நேரப்படி வெள்ளி மாலை 6 மணி 7 நிமிடங்களுக்கு ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. இந்த ராக்கெட்டின் முதற்கட்டம் பசிபிக் கடலில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் தரையிறங்கியது. இரண்டாம் கட்டம் வெற்றிகரமாகச் செயற்கைக்கோள்களைப் புவியின் சுற்றுவட்டப் பாதையில் செலுத்தியது. இதேபோல் மற்றொரு பால்கன் 9 ராக்கெட் மூலம் 53க்கு மேற்பட்ட … Read more

டெல்லி தீ விபத்துத் தொடர்பாக 2 பேர் கைது.!

டெல்லியில் தீப்பிடித்த கட்டடத்தில் செயல்பட்டு வந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் இருவரைக் கைதுசெய்துள்ள காவல்துறையினர், கட்டடத்தின் உரிமையாளரைத் தேடி வருகின்றனர். டெல்லி முண்டகா மெட்ரோ ரயில் நிலையத்தின் அருகே உள்ள 4 மாடிக் கட்டடத்தில் நேற்று மாலை நேர்ந்த பெரும் தீவிபத்தில் 27 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். நாற்பதுக்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும் 29 பேரைக் காணவில்லை. கட்டடத்தின் முதல் தளத்தில் பற்றிய தீ மேலுள்ள 2 தளங்களுக்கும் பரவியது முதற்கட்ட விசாரணையில் தெரிந்தது. தீத்தடுப்புப் பாதுகாப்புக்கான … Read more

ஜேர்மன் ரயிலில் பயங்கரம்… ஐந்து பேரை கத்தியால் குத்திய புகலிடக்கோரிக்கையாளர்

ஈராக்கிலிருந்து ஜேர்மனிக்கு வந்த, இஸ்லாமிய தீவிரவாதி என கருதப்படும் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர், திடீரென ரயிலில் பயணித்துக்கொண்டிருந்த ஐந்து பேரை கத்தியால் குத்தினார். நேற்று காலை மேற்கு ஜேர்மனியிலுள்ள Herzogenrath என்ற புறநகர்ப்பகுதியில் பயணிகள் ரயில் ஒன்று சென்றுகொண்டிருக்கும்போது, திடீரென ஒருவர் பொதுமக்களைக் கத்தியால் தாக்கத் துவங்கினார். அதிர்ஷ்டவசமாக, அதே ரயிலில் சீருடையில் இல்லாத பொலிசார் ஒருவர் பயணித்துள்ளார். ஐந்து பேர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில், தக்க சமயம் பார்த்து அந்த பொலிசாரும் இரண்டு பொதுமக்களுமாக அந்த தாக்குதல்தாரி … Read more

பயணி தாக்கியதால் உயிரிழந்த பேருந்து நடத்துநருக்கு முதல்வர் ரூ.10 லட்சம் நிதி உதவி

சென்னை பேருந்து நடத்துநர் ஒருவரைப் பயணி தாக்கியதால் உயிரிழந்ததையொட்டி அவர் குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின் ரூ.10 லட்சம் நிதி உதவி அளிக்க உள்ளார். தமிழக அரசு பேருந்து ஒன்று சென்னை கோயம்பேட்டிலிருந்து விழுப்புரம் நோக்கி சென்றுள்ளது. மதுராந்தகம் புறவழிச்சாலை பேருந்து நிறுத்தத்தில் மதுபோதையில் மர்ம நபர் ஒருவர் பேருந்தில் ஏறியுள்ளார்.  நடத்துனர் பெருமாள் அந்த நபரிடம் டிக்கெட் எடுக்கச் சொல்லியுள்ளார். மது போதையில் இருந்த அந்த மர்ம நபர் நடத்துனரிடம் டிக்கெட் எடுக்க முடியாது எனச் சொல்லி … Read more

சம்பிரதாய அரசியலை கைவிட்டு தாய்நாட்டிற்காக உழைக்க வாருங்கள்- ரனில் விக்ரமசிங்கே கடிதம்

கொழும்பு: இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார சீரழிவு காரணமாக ஆத்திரமடைந்த பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதையடுத்து பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகினார். அவருக்கு பதில் புதிய பிரதமராக ரனில் விக்ரமசிங்கே பதவி ஏற்றார். அவர் மக்களுக்கு 3 வேளை உணவு கிடைப்பதை விரைவில் உறுதி செய்வேன் என்று அறிவித்துள்ளார். அவருக்கு இந்தியா, அமெரிக்கா, சீனா உள்பட அனைத்து நாடுகளும் ஆதரவு தெரிவித்து உள்ளன. அவருக்கு முழுமையான ஆதரவு கொடுப்பதாக மகிந்த ராஜபக்சேயின் கட்சி அறிவித்து … Read more

கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்தது விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கை- காங்கிரஸ் காட்டம்

உதய்பூர்: இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கோதுமையின் அளவு கடந்த 2 மாதங்களாக அதிகரித்ததால் இந்தியாவில் கோதுமை விலை நாளுக்கு நாள் உயர்ந்தபடி உள்ளது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.  இந்தியாவின் ஒட்டுமொத்த உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், அண்டை நாடுகள், அதிகம் பாதிப்புக்குள்ளாகும் நாடுகளுக்கு ஆதரவளிப்பதை கருத்தில் கொண்டும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறி உள்ளது. எனினும், சிலருக்கு மட்டும் கோதுமையை ஏற்றுமதி … Read more

மகிந்த ராஜபக்சேவை கைது செய்யக்கோரி கோர்ட்டில் வழக்கு

இலங்கையில் மக்களின் தொடர் போராட்டம் காரணமாக பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே கடந்த 9-ந்தேதி ராஜினாமா செய்தார். இதனால் அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. போராட்டக்காரர்கள் எதிர்தாக்குதல் நடத்தினர். இதனால் பெறும் வன்முறை ஏற்பட்டது. தீ வைப்பு சம்பவங்களும் நடந்தன. கலவரத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 300 பேர் காயம் அடைந்தனர். இந்த நிலையில் மகிந்த ராஜபக்சேவை கைது செய்யக்கோரி கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “அமைதியாக … Read more

ஈரோட்டில் நூல் விலை உயர்வை கண்டித்து 16,17-ம் தேதிகளில் கடையடைப்பு போராட்டம்: 25 சங்கத்தினர் பங்கேற்பு

ஈரோடு: நூல் விலை உயர்வை கண்டித்து ஈரோட்டில் 16,17-ம் தேதிகளில் நடக்கும் கடையடைப்பு போராட்டத்தில் 25 சங்கத்தினர் பங்கேற்க உள்ளனர். நூல் விலையை கட்டுப்படுத்தக் கோரி ஈரோடு கிளாத் மெர்ச்சன்ட்ஸ் அசோசியேசன் அழைப்பு விடுத்துள்ளது. ஜவுளித்துறை மட்டுமன்றி பல்வேறு வியாபாரிகள் சங்கமும் கடையடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

பஞ்சாப் மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாக்கர் ராஜினாமா

சண்டிகர்: பஞ்சாப் மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாக்கர் கட்சியிலிருந்து ராஜினாமா செய்தார். நவஜோத் சித்துவை தலைவராக்க பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து சுனில் ஜாக்கர் விலக்கப்பட்டவர். பஞ்சாப் பேரவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததால் தலைவர் பதவியை சித்து ராஜினாமா செய்திருந்தார். 

குடும்பத்துடன் வெளியூர் சென்று திரும்பிய தொழிலதிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி

குன்றத்தூரில் தோல் தொழிற்சாலை அதிபர் வீட்டில் 100 சவரன் நகை கொள்ளை போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சென்னை குன்றத்தூர் அடுத்த மணிகண்டன் நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ஆசாத் (42), அனகாபுத்தூர் சர்வீஸ் சாலையில் தோல் தொழிற்சாலை நடத்தி வரும் இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் பெங்களூர் சென்று விட்டு இன்று காலை வீட்டிற்கு வந்துள்ளார்.  அப்போது வீட்டின் கதவு திறந்து கிடப்பதை கண்டு … Read more